Saturday, March 31, 2007

காந்தாரக் கலை

நமது பள்ளிகளில் இன்றும் மறவாது சொல்லிதரும் வரலாற்றில் முக்கியமானது காந்தாரக் கலை. இது புத்தமதத்தின் சார்பாக தோன்றி அதிகம் அது குறித்த கலைச் செல்வங்களை வழங்கி மறைந்த ஒன்றாகும். பாகிஸ்தான் தேசம் இந்த வாரத்தை (ஏப்ரல் 1வரை) காந்தாரக் கலை வாரமாக கொண்டாடுகிறது. பல்வேறு நெளிவு,சுளிவுகளை கொண்ட கலைப் படைப்புகளை தன்னகத்தே கொண்டது காந்தாரக் கலை. சில ஒளிப்படங்கள்...
புத்தரின் சிலைபுத்தர் பெருமான் தனது சீடர்களுடன் கையில்
கப்பறை எனும் உணவுஏற்க்கும் பாத்திரத்துடன் அமர்ந்துள்ளார். மேலாடையும், சிகையும் சுருள் வடிவம்பெற்றதே காந்தாரக் கலை எனப்படும். இனி வருவது நம் தாய்குலங்களுக்காக. அவர்கள் ஆதரவு இன்றி எந்தநாகரீகமும் வளராதே. இன்னமும் சொல்ல போனால் அவர்கள் தான் நாகரீகஅளவுக்கோல் ஆவர்கள்.தங்க காதணிகள்.


தங்க கைக்காப்பு(Bracelet)
தங்க நெக்லஸ்

அடுத்து வருவது... புத்தப் பெருமான் அழகிய உருவம்புத்தரின் தியான முத்திரைபுத்தரின் முகம்தாமரை மலர் ஏந்திய புத்தர் கரம்புத்தப் பெருமானின் அழகிய உருவச் சிலை.

இவ்வளவு அன்பு, அஹிம்சை என்று போதித்தும் காந்தாரகலை எனும் அழகிய ஒரு கலையால் அமைக்கப் பட்ட ஒரு படைப்புக்குநம் மனித இன நவநாகரீக வளர்ச்சியில் ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஆம். இரத்தக் கண்ணீர் விட ‍வேண்டிய படம்தான் கலங்கிய மனதுடன்...தீவிரவாதிகளால் அழிக்கப் பட்ட பாமியான் குன்றுச் சிலை. இடது புறம்(முதல் பாகம்) சிலை உள்ளது. முன்புறம் ஒரு மனிதன் நின்றுக் கொண்டு உள்ளான் பாருங்கள். மனிதனை விட எவ்வளவுஉயரம் அப்பப்பா. வலது புறம் (இரண்டாம் பாகம்) ஏவுகணை மற்றும்பீரங்கி தாக்குதலால் அழிக்கப் பட்டு விட்டு காலியாகி விட்ட இடம்.இங்கும் முன்புறம் பல மனிதர்கள் நின்று கொண்டு உள்ளார். இனிவரும் நாட்களிலாவது கருணையும், சகிப்பு தன்மையும்உலகெங்கும் பரவட்டும். புத்தம் தர்மம் கச்சாமி...!!! சங்கம் தர்மம் கச்சாமி...!!!

Friday, March 30, 2007

கோடையும் குளுமையும்

கோடை வெம்மை இங்கே வாட்டி எடுக்குது. இன்னமும் தமிழகத்தின் பிற பகுதிகளில் அக்னி நட்சத்திர ‍வெப்பம் ஆரம்பம் ஆகவில்லை. அதற்க்குமுன்னதாகவே ஆரம்பித்து முன்னரே முடிந்திடும் கோவையின் கோடை இப்போது சரியாக உச்சத்தில் உள்ளது.அட அதுக்காக என்ன செய்யலாம் தர்பூசிணி போன்ற பழங்களை நாடலாம்.ஆனாலும் வயிறு நிறைந்த பிறகு அதிகம் சாப்பிட இயலாதே... ஆதனால் கண்நிறைய குளு குளு வென பார்த்து இரசிக்கலாம் அல்லவா இந்த மாதிரியான ஒளிப் படங்களை...மேட் இன் ஜப்பான் மோகம் கொஞ்ச நாள் முன்னர் வரை நம்ம ஊருலேஇருந்ததில்லே அதனால் இந்த அருவி படத்தை சப்பானிய நாட்டில் இருந்து சுட்டது. ஊரு பேரு டக்கசிக்கோ-க்யோ (Takachiho-Kyo Gorge).

Thursday, March 29, 2007

சிரிக்கலாம் வாங்க...

பின்வரும் சித்திரங்கள் நகைச்சுவை என்றும் ஆகாது வாய் விட்டும்சிரிக்கும் அளவு இருக்காது.. ஆனால் இதழோர புன்னகைக்க வைக்கும்.இதன் பெயர் தான் அங்கதம் என்பதோ அல்லது இந்த வகைக்கு என்னபெயரோ...Thursday, March 08, 2007

மகளிர் தினம்ஆயகலைகள் அனைத்தும்
தளிர் கரங்களில் ஏந்தி...
ஆருயிர் அன்னையாய்
அன்பு சகோதரியாய்
உயிரில் பாதி மனைவியாய்...
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்
தோழிகள், நண்பிகள்,
சகோதரிகள், தாய்மார்களுக்கும்

மகளிர் தின வாழ்த்துகள்...!!!

அன்புடன்,
அனு