Tuesday, August 14, 2007

சுதந்திர தின திருவிழா !!



"இருக்குமிடத்தில் இருந்து விட்டால் எல்லாம் செளக்கியமே"
இந்த பாட்டு வேற சூழ்நிலைக்கு நம்ம கண்ணதாசன் எழுதுனது ஆனா இப்ப நினைச்சு பார்த்த நமக்கு பொருந்துது. சோமாலியாவுல பசி பட்டினி மனுசங்க சோறு கண்டு பல வருசம் ஆச்சு. ஆப்கானிஸ்தான்ல பொண்ணுங்க வெளிய போக முடியாது படிக்க முடியாது. நம்ம சகோதர நாடு நம்ம கூட பிறந்த பாகிஸ்தான்ல இப்பவோ அப்பவோ அவசரநிலை வரலாம்னு மத்த நாடுக எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க. ஆனா இது எதுவுமே இல்லாம நாம மட்டும் சுதந்திரமா நினைச்சத எழுதிகிட்டு நினைச்சபடி படிச்சு வேலைக்குபோய் மொக்கை போஸ்ட் போட்டுகிட்டு இருக்கறோம்னா அதுக்கு காரணம் நம்ம பெரியோர்களோட கடும் உழைப்பு, அஹிம்சைங்கற அடித்தளம் பல ஐந்தாண்டு திட்டங்கள போட்டு கொஞ்சமாவது நிறைவேத்தனும்கற எண்ணத்தோட உழைச்ச உழைப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். சுதந்திரம் வாங்குனு சமயம் நம்ம நாடு இருந்த வறுமை பஞ்சம் பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியம் ‍ அதெல்லாம் மாறி இன்னிக்கு கொஞ்சம் சந்தோசமா இருக்கோம்னா அதுக்கு காரணம் அப்ப இருந்த பல நல்ல தலைவர்களோட தியாகம்தான். அரசியல் அமைப்பு சட்டமாகட்டும், ஐந்தாண்டு திட்டமாகட்டும் எல்லாமே சுதந்திரமான மனப்பான்மையோட போட்டதாலதான் இன்னிக்கு நாம சந்தோசமா இருக்கறோம். அதையெல்லாம் மனசுல நினைச்சு பார்த்து கொஞ்சமாவது சிறப்பா நம்ம சுதந்திர தினத்தை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடனும்.



அப்டியே இந்த சுதந்திரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரனும்னு ஆண்டவனை பிரார்தனை செய்வோம்.பல விதமான தினங்கள கொண்டாடர நாம இந்த சுதந்திர தினத்தையும் சிறப்பா கொண்டாடனும் அப்பதான் இனி வரும் தலைமுறைக்கு இந்த சுதந்திரத்தோட அருமை கொஞ்சமாவது தெரியும். அதை புரிய வைக்கிறது நம்ம கடமை இல்லீனா அக்கம் பக்கத்து நாடுக மாதிரி நாமளும் ஒரு நாள் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை வந்திடும். இந்தியர்கள்னு சொல்லிகிட்டு நிம்மதியா வாழற இந்த வாழ்க்கை அடுத்த தலைமுறைக்கும் தொடரட்டும்.
வாழ்க சுதந்திர இந்தியா
வளர்க இந்தியர்கள் :)

7 comments:

Osai Chella said...

ammini vanakkamunga... vazhthukkal. padangkal super'ungooo!

மஞ்சூர் ராசா said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்.
மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.

பின்குறிப்பு: இன்னிக்கி ஒரு நண்பர் நாளை லீவுன்னு சொன்னார். நான் எதுக்குன்னு கேட்டேன்... என்னத்தெ சொல்ல :)

Anonymous said...

மிக்க நன்றி.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். காலைல எழுந்து பக்கத்தில உள்ள பள்ளி கல்லூரியின் விழாக்களில் பங்கு கொள்ளுமாறு அன்பர்களை அன்புடன் வேண்டுகிறேன். (முட்டாய் தருவாங்க)

Jazeela said...

நீங்க பாகிஸ்தானி இல்லையே :-))) சுதந்திர தின வாழ்த்துகள் இன்று சொல்லிவிட்டா தவறாகிடாதுங்களே? நாளைக்கான வாழ்த்தை இன்றே சொல்லிடுறேன் - சுதந்திர தின வாழ்த்துகள்.

அனுசுயா said...

Osai chella : வணக்கமுங்க வாழ்த்துக்களுக்கு நன்றிங்க :)

மஞ்சூர் ராசா : மடலாடற்குழு, சொந்த வேலை எல்லாம் இருந்தாலும் இதெல்லாம் அநியாயமுங்க இப்டியா நம்ம நாட்டு சுதந்திர தினத்தை மறக்கறது. உங்களுக்கும் வாழ்த்துக்கள்

பாண்டியன் : ஆமாங்க பள்ளி கூடத்துல முட்டாய் குடுக்கறதாலதான் கொஞ்சம் பேராவது போறாங்க (என்ன மாதிரி சின்ன புள்ளங்க :) )

ஜெசிகா ; சுதந்திர இந்தியாவுல நீங்க தினம் தினம் வாழ்த்து சொன்னாலும் தப்பு இல்லீங்க :)
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

thiagu1973 said...

சுதந்திரம் வாங்கி கொடுத்த பிறகு
இந்த பக்கமே காணோம் உங்களை எங்க போனீங்க அனு

அனுசுயா said...

சுதந்திர தின வேலையில கொஞ்சம் பிசிங்க நீங்க கேட்டவுடனே ஒரு போஸ்ட் போட்டாச்சு :)