கடந்த வாரம் ஒரு பெரிய பந்த் நடந்து முடிஞ்சிருக்கு அப்டியே காந்தி ஜெயந்தியும் வந்து போயிடுச்சு. எனக்கு இந்த ரெண்டையும் பார்க்கும்போது இந்த போராட்டங்களால் என்ன வெற்றிகளை அடைஞ்சிருக்கோம்னு தெரியல. காந்தி காலத்துல அவரு உண்ணா விரதம் இருந்தாரு ஆங்கிலேயர்களை விரட்ட. ஆனா அதுல பொது மக்களுக்கு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் உடனே போராட்டத்த கைவிட்டுடுவாரு. அதுவும் போராட்டம்தான், இப்பவும் நடத்தறாங்களே தலைவர் போராட்டம் அறிவிக்கறதுக்கு முன்னாடியே பொது மக்கள் சொத்துக்கு கேடு விளைவிக்கனும்னு தெளிவா இருக்காங்க.
பஞ்சாலை நகரம் (Cotton City) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் அப்டினு பேர் வாங்குன ஊர் எங்க கோயமுத்தூர். ஏன் இந்த பேர்னா இங்க இருக்கற அளவு பஞ்சாலைகள் (cotton Manufacturing Mills) தென்னிந்தியாவுல வேற எங்கயும் கிடையாது. இங்க எப்டியும் வீட்டுக்கு ஒருத்தர் பஞ்சாலை தொழிலாளர் இருந்திருப்பாங்க. ஆனா இப்ப நிலைமை சுத்தமா மாறி போச்சு. பஞ்சாலை எல்லாத்தையும் மூடிட்டு காம்ளக்ஸ், ரியல் எஸ்டேட் அப்டினு மாத்திட்டாங்க. காரணம் ஸ்ரைக், ஏன் பண்ணறோம்? எதுக்கு பண்ணறோம்? னு யோசிக்காம மக்கள் பண்றத பாத்து பயந்துபோயி மில் மொதலாளிகள் மூடிட்டு போயிடறாங்க. உதாரணமா ஒரு நிரந்திர தொழிலாளி ஒரு நாளைக்கு 120 ரூபாய் முதல் 170 வரை சம்பாதிப்பவர் இந்த பெரிய ஆலை மூடப்படும்போது சிறு சிறு வேஸ்ட் காட்டன் யூனிட் என அழைக்கப்படும் சின்ன சின்ன தொழிற்சாலைகளில் வேலை செய்ய நேர்கிறது அவர்களுக்கு அங்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு 40 முதல் 70 வரை மட்டுமே. இது மட்டும் அல்ல அங்கு போனஸ் மருத்துவ செலவு எதுவும் கொடுக்கப்படுவதில்லை காலம் முழுவதும் அவர்கள் தற்காலிக பணியாளர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனாலும் பெரிய ஆலைகளில் போனஸ் பேச்சு வார்த்தையில் சற்று தோல்வி ஏற்பட்டாலும் உடனே ஸ்ரைக் செய்து மில்லை மூடிவிட்டு சிறு தொழில்சாலைக்கு தற்காலிகமாக செல்கிறார்கள். இதனால் நஷ்டம் கட்டாயம் தொழிலாளர்களுக்குதான் அதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.
அதே போல ப்ரிக்கால் ஒரு உதாரணம், அங்க கடந்த ஆண்டு போனஸ் மட்டும் 62 சதவீதம் கொடுக்கப்பட்டது. இது தனியார் துறையில் மிக உயர்ந்த அளவு. ஆனால் இந்த ஆண்டு ஐந்து தொழிலாளர்களை மாநிலம் விட்டு மாநிலம் இட மாற்றம் செய்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்ரைக் செய்து கொண்டு அந்த தொழிற்சாலையை மூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளாரகள். இந்த காலத்தில் ஐடி துறையில் நாடு விட்டு நாடே மாற்றினாலும் ஒருவரும் மூச்சு விடுவதில்லை. :)
இப்படி போராட்டம் செய்து செய்து என்ன சாதித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அதே போல இனிமேலாவது போராட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அப்படி முன் அனுமதி பெறுபவர் கட்டாயம் கொஞ்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் சட்டம் வந்தாலாவது திருந்துவார்களோ என்னவோ ?
Showing posts with label யோசிக்க வேண்டியவை. Show all posts
Showing posts with label யோசிக்க வேண்டியவை. Show all posts
Wednesday, October 03, 2007
Sunday, February 11, 2007
இணையாத பாலம்
"இணையாத பாலம் இருந்தென்ன லாபம்"
இந்த ஸ்லோகன்தான் இப்ப கோவையில் அதிகமா பேசப்படும் வார்த்தைகள். கோவை கிழக்கு தொகுதியை சேர்ந்த ஒண்டிப்புதூர் அப்டீங்கற ஊர்ல ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே மேம்பாலம் கட்ட ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்சப்ப ஒரே ஜோராதான் இருந்தது. அந்த ரோடு திருச்சி ரோடு அதிகமான அளவு போக்குவரத்து உள்ள சாலைதான். அதை அடைத்துவிட்டு ஊருக்கு உட்புறமாக உள்ள சிறிய சாலையில் அதுவும் இரண்டு ரயில்வே லைன்களை கடந்து செல்லும் பாதையை ஒதுக்கினார்கள். சரி ஒரு வருடம்தானே என்ன செய்வது என்று அனைவரும் பொருத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.
பிறகு திடீர் என்று பாலத்தின் நடுவே அதாவது இருப்பு பாதை மேல் கட்ட வேண்டிய பகுதியை மட்டும் அப்படியே விட்டு விட்டார்கள் கேட்டதற்கு அது மத்திய அரசு வேலை என்று விளக்கம் வந்தது. சரினு அதுக்கு ஒரு வருசம் போயிடுச்சு. இப்டியே கட்டி கட்டி கடந்த நான்கு வருட காலமா கட்டியும் இன்னும் இணைய மாட்டேங்குது பாலம். ஸ்பீட் படத்துல கிளைமேக்ஸ்ல வர்ர மாதிரி வண்டியெல்லாம் வேகமா போயி ஹை ஜம்ப் பண்ணிதான் போகனும் போலயிருக்கு.
இதுல மாற்று பாதையில போயிட்டு இருக்குற பேருந்துகள்ல பயணம் செய்யற பயணிகள் எல்லாம் ரொம்ப பாவப்பட்டவங்க. ஏன்னா எப்ப பாரு ரெண்டு ரயில்வே லைன்லயும் ரயில் போயிட்டும் வந்துட்டும் இருக்கும் அதனால அடிக்கடி கேட் போட்டு குறைந்தது முக்கால் மணி நேரமாவது நிறுத்தி வச்சிடுவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்கு யாராலயும் போக வர முடியாது. இதுல கொடுமை என்னன்னா மழை வந்தா அந்த வழியில ஒரு சின்ன ஓடை உருவாகி தண்ணி போயிட்டேயிருக்கும். அப்பவெல்லாம் இந்த இரு சக்கர வாகனத்துல போறவங்க நிலைமைய நினைச்சாதான் பரிதாபம்.
ஆக மொத்தத்தில ஊர்ல பல பேருக்கு இந்த பாலம் திறக்கலையேனு மிகப்பெரிய வருத்தம் இருக்குது இதுனால பல கோடி பொருளாதார நஷ்டம், எரிபொருள், நேரம் இப்டியே சொல்லிட்டே போகலாம். இதைய எப்ப திறப்பாங்கனு தெரியல ஆனா கடந்த ஒரு மாதமா கொஞ்சம் சுறுசுறுப்பா ரயில்பாதை மேல இருக்கற பகுதிய இணைச்சிட்டு இருக்காங்க.

இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலயும் இப்ப திறப்பாங்க அப்ப திறப்பாங்கனு மக்களும் பொறுமையா நாலு வருசத்த ஓட்டிட்டாங்க. இப்ப அதெல்லாம் பிரச்னையில்ல கோவையில பொதுவா பொழுது போக்கறதுக்கு ஏத்த மாதிரி வசதியா பூங்காக்களோ இல்ல கடற்கரை ஆற்றங்கரை எதுவும் இல்ல. அதனால நம்ம ஊர் மக்கள் எல்லாம் என்ன பண்ணுனாங்க நடை பயிற்சி, உடற் பயிற்சி, மாலையில ஒரு சின்ன வாக்கிங் போக இப்டி எல்லா விதத்திலயும் அந்த பாலத்தைதான் பயன்படுத்திட்டு இருக்காங்க. இந்த பாலத்தை திறந்தா மக்களோட ஒரு பொழுதுது போக்கு இடம் இல்லாம போகப்போகுது. :(
Wednesday, January 03, 2007
கைத்தொ(ல்)லை பேசி
ரொம்ப நாளா கைத்தொலைபேசி வாங்காம இருந்தேன். எங்க அப்பாரு பாத்து சளிச்சு அவரே போயி ஒரு தொலைபேசி வாங்கிட்டு வந்து குடுத்து ஊர்ல எல்லாரும் வெச்சிருக்காங்க நீ மட்டும் ஏன் இல்லாம இருக்கனு சொன்னாரு. நானும் பவ்யமா எனக்கு எதுக்குங்கப்பா போனு அதான் வீட்ல ஒன்னு ஆபீஸ்ல ஒன்னும் இருக்குதே பத்தாதானு கேட்டேன். அவரும் விட்டனானு இல்ல இல்ல எல்லா புள்ளங்களும் வெச்சிருக்காங்க நீயும் வெச்சுக்கோனு சொல்லி குடுத்தாரு. பாவம் அவரு அதுக்கப்புறந்தான ஆரம்பிச்சுச்சு நம்ம அட்டகாசம். முதல் வேலையா நம்ப நட்பு வட்டங்களுக்கு நம்பர் குடுக்க ஆரம்பிச்சேன். அவங்களும் தாராளமா அள்ளி வழங்குனாங்க அவங்கவங்க நம்பர. சரி இது ஒரு ஆத்திர அவசரம்னா கூப்பிட பேச வசதியா இருந்துச்சு. அப்புறம் மெல்ல மெல்ல ஒவ்வொருத்தரா குறுஞ்செய்தி (SMS) அனுப்ப ஆரம்பிச்சாங்க. நானும் சரி பிரியா குடுக்கறாங்க அனுபவிப்போம்னு அனுப்பினேன். முதல்ல காலைல எழுந்தவுடனே எல்லாருக்கும் ஒரு குட் மார்னிங். என்னமோ நாம குட் மார்னிங் அனுப்பலீனா அவங்க எழுந்திரிக்காத மாதிரி. அப்புறம் ஒரு 9 - 10 மணி சுமாருக்கு ஒரு சர்தார்ஜி ஜோக். பாவம் இந்த சர்தார்ஜிங்க நம்மகிட்ட மாட்டீட்டு படாதபாடு படறாரு. அப்புறம் ப்ரெண்ட்ஷிப் பத்தி ஒரு செண்டி மெசேஜ், இன்றைய தத்துவம்னு ஒரு கடி, அதுபோக கங்கூலி, அஜீத், விஜய், கேப்டன் படங்கள பத்தி ஒரு கடி இப்டீனு நாள் முழுக்க ஓடும். கடைசில நைட் குட்நைட் சொல்றது. நாம குட் நைட் சொல்லுலீனா யாரும் தூங்கவே போறதில்ல மாதிரி ஊருக்கே குட் நைட் சொல்லறது.
இதெல்லாம் பத்தாதுனு ஆபீஸ்குள்ள டீ சாப்பிட போகலாமா? பிரிண்ட் அவுட் பேப்பர் கொஞ்சம் எடுத்துட்டு வா இப்டினு ஆபீஸ்குள்ளயே மெசேஜ்.
இதெல்லாம் போக இந்த நியூ இயர், நல்ல நாள் கெட்ட நாள் இப்டி எது வந்தாலும் வாழ்த்து செய்தி வேற லிஸ்ட் போட்டு அனுப்பறது. இதெல்லாம் போக போன் பேசறது வேற. அது எப்டிதான் கட்டுபடி ஆகுதுன்னே தெரியல. ஒரு சிலர் மணிக்கணக்கா பேசறாங்க பேசறாங்க பேசிகிட்டே இருக்காங்க. காது என்னத்துக்குதான் ஆகுமோ தெரியல. அதவிட அவ்ளோ நேரம் என்னதான் பேசுவாங்க. எங்கயிருந்துதான் மேட்டர் கிடைக்குதோ தெரியல. இதுல Hands free வேற மாட்டிக்கறாங்க. தூரத்துலயிருந்து பார்த்தா தன்னப்போல பேசற மாதிரியிருக்கு. சில சமயம் என்னடாயிது லூசாப்பா நீனு கேட்கற அளவு இருக்கும்.
ம் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணியாச்சு நாமளும் ஏதாவது இந்த வருசம் உருப்படியா பண்ணலாம்னு நினைச்சு இந்த வருசத்துலயிருந்து இந்த குறுஞ்செய்தி அனுப்பறது தொலை பேசியில பேசறது இதெல்லாம் படிபடியா குறைச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பார்ப்போம் கொஞ்சமாவது குறையுதானு. :)

Thursday, July 20, 2006
அம்மா அப்பா.......
இந்த காலத்துல அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போக ஆரம்பிசசதுலயிருந்து குழந்தைக கதி இப்படிதான் ஆகி போச்சு. வேல வேலனு ரெண்டு பேரும் இயந்திரமா மாறீட்டாங்க. ஆதரவு காட்டற பாட்டி தாத்தவயும் முதியோர் இல்லத்துல சேர்த்தாச்சு கடைசில குழந்தைக நிலைமைதான் மோசமா போச்சு.
இந்த படம் குடுத்த உதவி செஞ்ச இவருக்கு ரொம்ப நன்றிங்கோ. அப்பாடி ஏதோ ஒரு பதிவு போட்டாச்சு.
Friday, March 24, 2006
வரமா ? சாபமா?

பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை,பருக புத்துணர்வூட்டும் பானம்,பிறப்பது எங்கோ ஆனால் வாழ்வது வெளிநாடுகளில்,சீனர்களின் பாரம்பரிய விருந்தோம்பல்,நம் முதல்குடிமகன் கொடுக்கும் விருந்து,ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை பருகுவது இப்படி எத்தனையோ புகழ் பெற்றது இந்த தேயிலை. இது வாங்கிவந்த வரம் அப்படி ஆனால், எந்த தாவரமாக இருந்தாலும் வளர்ந்து பூத்து காயாகி கனியாகி பின்புதான் பறிப்பார்கள். இதை மட்டும் முளையிலேயே கிள்ளுகிறார்கள் பாவம் இது வாங்கி வந்தது வரமா? சாபமா?.
Sunday, March 12, 2006
பக்தியும் மாமிசமும்
அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக்
கொன்று அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும். வள்ளுவரின் வரிகள் இது. சரி மாமிசம் உண்ணாமல் இருக்க முடிவதில்லை இக்காலத்தில். ஆனால் அதற்காக நம் மக்கள் சொல்லும் காரணங்கள்தான் அதிசயமாக இருக்கிறது.
என் அலுவலகத்தில் ஒருவர் மட்டும் சுத்தமான சைவம் அதுபோக பாதிபேர் சைவமாக
நடிப்பவர்கள். எப்படியென்றால் சாதாரணமாக பேசும்போது நான் சைவம் எனக்கு அசைவம்
சுத்தமாக பிடிக்காது(வேக வைக்காமல் பிடிக்காது என்கிறார்களோ..?) என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அதுபோக வெள்ளி கிழமை, பிரதோஷம் அமாவாசை என்று பல காரணங்கள் கூறிக்கொண்டிருப்பார்கள். அதே சமயம் அலுவலகத்தில்ஏதாவது விருந்து என்று அசைவம் சாப்பிட சென்றால் மறக்காமல் அனைவரும் கட்டாயம் சாப்பிடுவார்கள். அது எந்த நாள் கிழமை என்றாலும் சரி. இதிலும் குறிப்பாக பெண்கள் (தாய்குலங்கள் மன்னிக்கவும்) இல்லாத விளம்பரம் செய்து விட்டுதான் சாப்பிட வருவார்கள்.எதற்கு இந்த அலட்டல் என்று தெரியவில்லை.
அசைவம் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டால் ஏதோ பாவ காரியம் செய்ததுபோல ஒரு
எண்ணம் நம் மக்களிடம். எந்த கடவுளும் அசைவம் வேண்டாம் என்று சொல்லவில்லை.
கண்ணப்ப நாயனார் கடவுளுக்கே மாமிசம் படைத்தார் அவருக்கும் கடவுள் காட்சியளித்து ஏற்றுக் கொண்டார். அப்படியே அசைவம் சாப்பிடுவதில்லை என்றால் எப்பொழுதும் சாப்பிடாமல் தூய சைவமாக இருப்பின் பரவாயில்லை அதை விட்டுவிட்டு இந்த கிழமையில் இந்த இந்த நாளில மட்டும் சாப்பிட மாட்டேன். எப்படி எந்த நாளில் சாப்பிட்டாலும் ஒரு உயிரை கொல்வது பாவ காரியம்தான் அதில் என்ன பெருமை குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று எனக்கு புரியவில்லை?

Thursday, February 09, 2006
போதுமடா சாமி
கோவையில் ஏற்கனவே தனியாரால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது திருப்பூரில் ஒரு வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு செலவு செய்யப்பட்ட பல கோடிகளில் சில கோடிகளை சிறு சிறு தொழிற்சாலைகளுக்கு கழிவு நீர் சுத்திகரிப்புசாலை அமைக்க கொடுத்திருந்தாலோ அல்லது சிறுதுளி போன்ற அமைப்புக்கு கொடுத்திருந்தாலோ திருப்பூரின் தண்ணீர் பஞ்சம் கொஞ்சமாவது தீர்ந்திருக்கும்.
அதே போல பொள்ளாச்சிக்கு அருகில் ஒரு கிராமம் உள்ளது. அந்த ஊரில் ஒரு பொதுவான அம்மன் கோவில் உள்ளது. அதற்கு அடுத்து ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் தங்களுக்கு என புதிய தனி அம்மன் கோவில் கட்டினர் அதனை அடுத்து அதே மக்கள் ஒரு குறிப்பிட்ட குலத்திற்கு என தனி கோவில் கட்டிக்கொண்டு உள்ளார்கள். தற்போது அந்த ஒரு கிராமத்தில் மட்டும் 3 அம்மன் கோவில்கள் உள்ளன. அதுபோக மற்றகடவுள் கோவில்கள் தனி. ஆனால் அந்த ஊரில் ஒரே ஒரு ஆரம்ப பள்ளிதான் உள்ளது. நடுநிலைப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள சிற்றூருக்கு பேருந்தில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். மேற்படிப்பு படிக்க பொள்ளாச்சிக்கோ அல்லது கோவைக்கோதான் செல்ல வேண்டும். இந்த கோவில்கள் கட்ட செலவு செய்யும் பல லட்சங்களில் சில லட்சங்களையாவது பள்ளிகள் கட்ட உதவியிருந்தால் பல மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றிருக்காது.
நாம் போற்றி வணங்கும் அடியார்களும் ஆழ்வார்களும் இறைவன் அருளை பெற கோவில் கட்டி வணங்கவில்லை. அவர்கள் இறைவன் அருளை பெற அவனுடைய படைப்பு (உயிரினங்கள்) களுக்கு உதவி செய்து அருளடைந்தனர். மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்து இறை அருளை பெற்றனர். ஆனால் தற்காலத்தில் தங்களுடைய புகழை பரப்பவும் தங்களின் பெருமையை உலகறிய செய்யவும் போட்டி போட்டுக் கொண்டு அதிக செலவில் கோவில்கள் கட்டி தங்கள் பெயரை நிலைநாட்டுகின்றனர். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பல கோவில்கள் நம் முன்னோர்களால் கட்டப்பட்டு தற்போது கேட்பாரற்று, முறையான பராமரிப்பு இன்றி சிதைந்து அழிந்து கொண்டுள்ளன. நாம் புதிது புதிதாக கோவில்கள் கட்டுவதைவிட இருப்பதை நல்ல முறையில் பராமரிப்பு செய்தாலே போதும். ஒரு ஊருக்கு ஒரு கோவில் என்று இருந்தது இன்று ஒரு வீதிக்கு பல கோவில் என்ற நிலையில் உள்ளது. இனியாவது சிந்தித்து செயல்படுவோம். நம்நாட்டின் அத்தியாவசிய தேவைகள் நிறைவடைந்தபின் இம்மாதிரி செலவுகள் செய்யலாமே?

Saturday, January 21, 2006
செய்திப் பஞ்சம்
வரவர வாரஇதழ்கள் ஏன்தான் இப்படியாகிறதோ, தெரியவில்லை. வாரஇதழ் என்றவுடன் நினைவுக்கு வருவது ஆனந்த விகடன், குமுதம் போன்ற சில புத்தகங்கள். ஆனால் அவற்றில் வரும் விசயங்களை பார்த்தால் சினிமா எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றிவிடலாம் போல் உள்ளது. இந்த வாரம் வார இதழ் வாங்கி படிக்க ஆரம்பித்தால் சரியாக முதல் 52 பக்கங்களுக்கும் முழுக்க முழுக்க சினிமா சினிமா வேறு ஏதும் இல்லை. அட தமிழ்நாட்டில் சினிமாவைத்தவிர எழுதுவதற்கு வேறு விசயங்களே இல்லையா?. முன்பெல்லாம் வாரஇதழ் படிக்க போட்டியாக இருக்கும். நகைச்சுவை, சிறுகதைகள், கட்டுரைகள், ஆன்மீக பயணக்கட்டுரை கொஞ்சம் சினிமா என இருந்தது. தற்போது அட்டை படத்தில் தொடங்கி சினிமா நடிகைகளின் பேட்டி, நடிகர்களின் பேட்டி, இயக்குநர்களின் பேட்டி மற்றும் ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர் என முழுக்க முழுக்க சினிமா பற்றியேதான். அது பரவாயில்லை நகைச்சுவையில்கூட நடிகைகளின் படங்கள். முன்பெல்லாம் நகைச்சுவைக்கு கார்ட்டூன் வரைந்து கொண்டிருந்தார்கள் தற்போது அதுவும் இல்லை. ஆக மொத்தத்தில் வார இதழ்களின் எழுதுவதற்கு வேறு செய்திகளே இல்லையெனும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. இதில் மட்டும் எல்லா வார இதழ்களும் போட்டி போட்டுக் கொண்டு சரிக்கு சரியாக இருக்கின்றது. இந்த வார இதழில் இந்த நடிகை பேட்டி என்றால் மற்றொரு வார இதழில் வேறு நடிகை பேட்டி என சபாஷ் சரியான போட்டியாக உள்ளது. இந்த போட்டி வேறு ஏதாவது கதை, கட்டுரை விசயத்தில் இருந்தால் பரவாயில்லை. இப்படி சினிமா பற்றி செய்திகளை படிக்க இந்த வார இதழை படிக்க வேண்டியதில்லையே. ஏதாவது ஒரு சினிமா பத்திரிகை வாங்கினாலே போதுமே?.
Tuesday, January 17, 2006
உலக அதிசயங்களும் இந்தியாவும்
உலக அதிசயங்களும் இந்தியாவும்
உலக அதிசயங்களை கட்டுரைகள் மற்றும் கதைகளில் படிக்கும்போதும்
படங்களை பார்க்கும்போதும் மிக அதிசயமாக உள்ளது. அந்த நாட்டைப்பற்றி வியப்பும் மதிப்பும் அதிகரிக்கின்றது. ஆனால் அவற்றை நேரில் சென்று பார்க்கும்போதுதான் அதன் உண்மை நிலை என்ன என்பது விளங்குகிறது.
உதாரணத்திற்கு பைசா நகர சாய்ந்த கோபுரத்தை எடுத்துக் கொள்வோம்.

அக்கட்டிடம் ஒரு மிகப்பெரிய மாதா கோவிலின் மணிக்கூண்டு அவ்வளவுதான்.சரியான அடித்தளம் இல்லாததால் ஏற்பட்ட கோளாறால் அது சாய்ந்துவிட்டது. ஆனால் அதையும் அவர்கள் ஒரு சிறந்த கட்டிடமாக உலக அதிசயமாக கொண்டாடி விளம்பரம் செய்து பராமரித்து வருகிறார்கள். நாமும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம். சற்றே சிந்தித்தால் இதுபோல் எவ்வளவோ கட்டிடங்கள் நம்நாட்டில் கேட்பாரற்று பராமரிக்க ஆள் இல்லாமல் கிடக்கிறது. தமிழகத்தில் தஞ்சாவூர், தாராசுரம் கர்நாடகத்தில் பேளூர், ஹளேபேடு போன்று இன்னும் எத்தனை எத்தனையோ கோவில்களில் எண்ணிக்கையில் அடங்காத சிற்பங்களும் கட்டிடங்களும் அதன் சிறப்பை புகழை பரப்ப ஆளில்லாமல் கிடக்கிறது. ஏதோ அதைப்பற்றி தெரிந்த சிலர் சென்று பார்ப்பதோடு சரி. நம் நாட்டினரும் வெளிநாட்டிற்கு சென்று பார்ப்பதை
விரும்பும் அளவு உள் நாட்டில் உள்ள கலை களை காண விரும்பம் கொள்வதில்லை.இதற்கு ஒரு முக்கிய காரணம் நம்மிடையே இன்னமும் வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் தனியவில்லை. இனியாவது சற்று நம்நாட்டு கலைகளையும் பராமரிக்க புகழை பரப்ப நம்மால் இயன்றதை செய்வோம்.

Subscribe to:
Posts (Atom)