ரொம்ப நாளா கைத்தொலைபேசி வாங்காம இருந்தேன். எங்க அப்பாரு பாத்து சளிச்சு அவரே போயி ஒரு தொலைபேசி வாங்கிட்டு வந்து குடுத்து ஊர்ல எல்லாரும் வெச்சிருக்காங்க நீ மட்டும் ஏன் இல்லாம இருக்கனு சொன்னாரு. நானும் பவ்யமா எனக்கு எதுக்குங்கப்பா போனு அதான் வீட்ல ஒன்னு ஆபீஸ்ல ஒன்னும் இருக்குதே பத்தாதானு கேட்டேன். அவரும் விட்டனானு இல்ல இல்ல எல்லா புள்ளங்களும் வெச்சிருக்காங்க நீயும் வெச்சுக்கோனு சொல்லி குடுத்தாரு. பாவம் அவரு அதுக்கப்புறந்தான ஆரம்பிச்சுச்சு நம்ம அட்டகாசம். முதல் வேலையா நம்ப நட்பு வட்டங்களுக்கு நம்பர் குடுக்க ஆரம்பிச்சேன். அவங்களும் தாராளமா அள்ளி வழங்குனாங்க அவங்கவங்க நம்பர. சரி இது ஒரு ஆத்திர அவசரம்னா கூப்பிட பேச வசதியா இருந்துச்சு. அப்புறம் மெல்ல மெல்ல ஒவ்வொருத்தரா குறுஞ்செய்தி (SMS) அனுப்ப ஆரம்பிச்சாங்க. நானும் சரி பிரியா குடுக்கறாங்க அனுபவிப்போம்னு அனுப்பினேன். முதல்ல காலைல எழுந்தவுடனே எல்லாருக்கும் ஒரு குட் மார்னிங். என்னமோ நாம குட் மார்னிங் அனுப்பலீனா அவங்க எழுந்திரிக்காத மாதிரி. அப்புறம் ஒரு 9 - 10 மணி சுமாருக்கு ஒரு சர்தார்ஜி ஜோக். பாவம் இந்த சர்தார்ஜிங்க நம்மகிட்ட மாட்டீட்டு படாதபாடு படறாரு. அப்புறம் ப்ரெண்ட்ஷிப் பத்தி ஒரு செண்டி மெசேஜ், இன்றைய தத்துவம்னு ஒரு கடி, அதுபோக கங்கூலி, அஜீத், விஜய், கேப்டன் படங்கள பத்தி ஒரு கடி இப்டீனு நாள் முழுக்க ஓடும். கடைசில நைட் குட்நைட் சொல்றது. நாம குட் நைட் சொல்லுலீனா யாரும் தூங்கவே போறதில்ல மாதிரி ஊருக்கே குட் நைட் சொல்லறது.
இதெல்லாம் பத்தாதுனு ஆபீஸ்குள்ள டீ சாப்பிட போகலாமா? பிரிண்ட் அவுட் பேப்பர் கொஞ்சம் எடுத்துட்டு வா இப்டினு ஆபீஸ்குள்ளயே மெசேஜ்.
இதெல்லாம் போக இந்த நியூ இயர், நல்ல நாள் கெட்ட நாள் இப்டி எது வந்தாலும் வாழ்த்து செய்தி வேற லிஸ்ட் போட்டு அனுப்பறது. இதெல்லாம் போக போன் பேசறது வேற. அது எப்டிதான் கட்டுபடி ஆகுதுன்னே தெரியல. ஒரு சிலர் மணிக்கணக்கா பேசறாங்க பேசறாங்க பேசிகிட்டே இருக்காங்க. காது என்னத்துக்குதான் ஆகுமோ தெரியல. அதவிட அவ்ளோ நேரம் என்னதான் பேசுவாங்க. எங்கயிருந்துதான் மேட்டர் கிடைக்குதோ தெரியல. இதுல Hands free வேற மாட்டிக்கறாங்க. தூரத்துலயிருந்து பார்த்தா தன்னப்போல பேசற மாதிரியிருக்கு. சில சமயம் என்னடாயிது லூசாப்பா நீனு கேட்கற அளவு இருக்கும்.
ம் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணியாச்சு நாமளும் ஏதாவது இந்த வருசம் உருப்படியா பண்ணலாம்னு நினைச்சு இந்த வருசத்துலயிருந்து இந்த குறுஞ்செய்தி அனுப்பறது தொலை பேசியில பேசறது இதெல்லாம் படிபடியா குறைச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பார்ப்போம் கொஞ்சமாவது குறையுதானு. :)