பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன.
(அனைத்து படங்களையும் சொடுக்கினால் முழுமையான பெரிய அளவிலான ஒளிப்படத்தை காணலாம்.)
இதன் இருபுறமும் உள்ளே நுழைய வழிகள் உள்ளன. பொதுவாக மற்ற கோவில்களில் கோபுரத்தின் வழியே நுழைவதாக இருக்கும்.
ஒளிபடங்கள் (3,4) உள்சுற்றுபுற பிரகாரங்கள் ஆகும். இவைகள் முழுக்க முழுக்க சிற்பங்கள் நிறைந்துள்ளன. மணற் சிற்பங்கள் (சுதை) என்ற வகையில் அமைந்துள்ளன.
ஒளிபடம் (6) நடனத்தின் அழகை துல்லியமாக காட்ட முயன்றுள்ள சிற்பியின் திறனை கண்டு நாம் வியக்காமல் இருக்க இயலாது அல்லவா..? எத்தனை எத்தனை கற்பனையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளனர் சிற்பி...
ஒளிபடம் (7) அன்றிலிருந்து இன்று வரை நம் பாரதம் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்தவை என்பதை உணர்த்தும் சிற்பம். இன்று பாரதத்தின் தேசிய சின்னமாக உள்ள நான்கு சிங்கங்களின் முன்மாதிரியாக உள்ள சிற்பம்.
ஒளிபடம் (8) இங்கு எதைச் சொல்ல எதை விட..? ஒரே இடத்தில் சிங்கங்கள், யானைகள், ஆடல் மகளீர், வதம் செய்யும் காட்சி, மற்றும் பிற உப குள்ளர்கள் போன்றவைகளை காட்டி தன் முழு திறனை வெளிகாட்டியுள்ளார் சிற்பி.
ஒளிபடம் (9) கோவிலின் சுற்று சுவரில் உள்ள காவல் சிற்பங்கள். எண்ணற்ற சிற்பங்கள் வகைவகையாய் அமைந்துள்ளன. விலங்குகள் மீதமர்ந்துள்ள காவற் வீரர்கள் என மிகவும் தத்துரூபமாய் அமைக்கபட்டு நம்மை வியக்க வைக்கிறது.
குறிப்பு : இந்த தலமானது தற்கால புகழ்பெற்ற காமட்சி அம்மன் கோவில் போன்றவைகளிலிருந்து சற்றே விலகியுள்ளது. நகர மையத்திலிருந்து 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் செல்லாத காரணத்தால் அதிக கடைகள் மற்றும் உணவுவிடுதிகள் அருகில் இல்லாத குறையுண்டு.