Showing posts with label யோசிக்க வேண்டியவை. Show all posts
Showing posts with label யோசிக்க வேண்டியவை. Show all posts

Saturday, April 08, 2017

பாயாசம் தந்தா தலைகுனியனும்

பொதுவா எனக்கும் இசைக்கும் அவ்வளவு இணக்கம் கிடையாது. எங்க அப்பா இசைய பொருத்தவரை ஓளரங்கசீப் அதாவது பாட்டு கேட்கவும் மாட்டார் எங்கள கேட்கவும் விட மாட்டார்.
            "As emperor, Aurangzeb banned the drinking of alcohol, gambling,[34] castration, servitude, eunuchs, music, nautch and narcotics in the Mughal Empire. "
            https://en.wikipedia.org/wiki/Aurangzeb

            இப்பவும் எங்க வீட்டுல பாட்டு கேட்கனும்னா ஹெட்போன் போட்டுதான் கேட்கனும். இப்படிப்பட்ட என் வாழ்க்கைல திருமணத்திற்கு பிறகு என் கணவருக்கு எப்ப பார்த்தாலும் பாட்டு சத்தம் இருந்துகிட்டே இருக்கனும்.
           
           
            இந்த சூழ்நிலையில் என் அருமை மகன் ஒரு நாள் வந்து ஏம்மா அந்த பாட்டு போடு அப்படீனான். நான் எந்த பாட்டுனு கேட்க. அவன் அதான்
"பாயசம் தந்தா தலைய குனிவாங்கல " அந்த பாட்டுடன். என்னது பாயசம் தந்தா தலைகுனியற பாட்டா அப்படி ஒரு பாட்டே இல்லையா இருக்குமா நீ கூட அன்னைக்கு நைட் பாட வெச்சியல்ல அதான் இதற்கு பிறகு இரண்டு வாரம் நானும் என் கணவரும் தேடி தேடி பார்த்தும் பாயசம்னு வார்த்தை வர மாதிரி எந்த பாட்டும் இல்லவே இல்ல. எங்கயும கிடைக்கல.

இந்த நிலமைல ஒரு நாள் இரவு பழைய பாடல்களை கேட்டு கிட்டு இருக்கும் போது என் பேவரிட் பாட்டு "செந்தமிழ் தேன்மொழியால்" பாட்டு பாட ஆரம்பிச்சதும் என் மகன் வந்து இது தான் நான் அன்னிக்கு கேட்ட பாயசம் பாட்டு இதுதான் அப்டினான். நான் இதுல எங்கடா பாயசம் வருது அப்டினு கேட்க கேட்க பாட்டு வரி "பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்" வந்தது அவன் இதான்மா நான் கேட்ட பாயசம்னான்.

ஙேஙேஙே பழரசம் பாயசம் ஆனது மட்டும் இல்லாம பாயசம் தந்தா தலை குனியனும்ங்கற நிலைமைக்கு கொண்டு வந்துட்டான். வாழ்க தமிழ்
           
பாட​லை பார்த்து மகிழ..
          

பாடல் வரிகள்..
           
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..
செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்
கண்களில் நீலம் விளைத்தவளோ
அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ…
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் (2)
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்

Sunday, January 20, 2008

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

வணக்கம் மக்களே மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு போடலாம்னு வந்திருக்கேன். தற்போதைய நிலைமையில் எனக்கு பதிவு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி இருந்தாலும் இது அவசியம்னு நினைச்சதால எழுதறேன்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒரு கேள்வி அடிக்கடி பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. அது என்னா கேள்வினா

பெண் பதிவர்கள் ஏன் தங்களுடைய புகைப்படத்தை பதிவுகளில் அல்லது ப்ரொபைலில் போடுவதில்லை?

இது தான் கேள்வி இது பல தடவை நேர்லயும் சிலரால் சாட்டிங்கிலும் கேட்கப்பட்டு விட்டது. நானும் என்னவோ பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது ஒரு பயனுள்ளதா (ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவைனு சொல்றது காதுல விழுது :) ) இருக்கும்னு இங்க எழுதறேன்.

1. பதிவு எழுதவர்ரவங்க அவங்களோட கருத்துகளை அடுத்தவங்ககிட்ட பகிர்ந்துகனும்னுதான் எழுத வராங்க. இதுல படத்த பார்த்து ஒன்னும் ஆக போறது இல்ல.

2. அப்ப‍டியே படம் போட்டு பேர் வாங்கனும்னு நினைச்சா அதுக்கு மாடலிங், நடிப்புனு நிறைய மத்த துறைகள் இருக்குது. இங்க பதிவு எழுதனும்னு அவசியம் இல்ல.

3. அப்புறம் சிலர் ‍கேட்கறாங்க முகமிலிகூட எப்டி பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது. நட்பு எப்படி சாத்தியம்னு கேட்கறாங்க. இதுக்கு என் பதில் ஏன் குறிப்பா பெண்களை மட்டுமே கேட்கறீங்க இன்னும் பல ஆண் பதிவர்களும்தான் முகமிலியா இருக்காங்க. அதுக்காக உங்க நட்புல ஏதாவது தடை ஏற்பட்டு இருக்குதா?

4. இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க. ஏனுங்க பதிவு எழுதறதே அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்க கருத்துகளை தெரிவிக்கதானே தவிர சமூகத்தை சீர் திருத்தறதுக்காக இல்ல. அப்டியே இருந்தாலும் சமூக சிந்தனைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியல.

5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )