வணக்கம் மக்களே மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு போடலாம்னு வந்திருக்கேன். தற்போதைய நிலைமையில் எனக்கு பதிவு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி இருந்தாலும் இது அவசியம்னு நினைச்சதால எழுதறேன்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒரு கேள்வி அடிக்கடி பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. அது என்னா கேள்வினா
பெண் பதிவர்கள் ஏன் தங்களுடைய புகைப்படத்தை பதிவுகளில் அல்லது ப்ரொபைலில் போடுவதில்லை?
இது தான் கேள்வி இது பல தடவை நேர்லயும் சிலரால் சாட்டிங்கிலும் கேட்கப்பட்டு விட்டது. நானும் என்னவோ பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது ஒரு பயனுள்ளதா (ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவைனு சொல்றது காதுல விழுது :) ) இருக்கும்னு இங்க எழுதறேன்.
1. பதிவு எழுதவர்ரவங்க அவங்களோட கருத்துகளை அடுத்தவங்ககிட்ட பகிர்ந்துகனும்னுதான் எழுத வராங்க. இதுல படத்த பார்த்து ஒன்னும் ஆக போறது இல்ல.
2. அப்படியே படம் போட்டு பேர் வாங்கனும்னு நினைச்சா அதுக்கு மாடலிங், நடிப்புனு நிறைய மத்த துறைகள் இருக்குது. இங்க பதிவு எழுதனும்னு அவசியம் இல்ல.
3. அப்புறம் சிலர் கேட்கறாங்க முகமிலிகூட எப்டி பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது. நட்பு எப்படி சாத்தியம்னு கேட்கறாங்க. இதுக்கு என் பதில் ஏன் குறிப்பா பெண்களை மட்டுமே கேட்கறீங்க இன்னும் பல ஆண் பதிவர்களும்தான் முகமிலியா இருக்காங்க. அதுக்காக உங்க நட்புல ஏதாவது தடை ஏற்பட்டு இருக்குதா?
4. இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க. ஏனுங்க பதிவு எழுதறதே அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்க கருத்துகளை தெரிவிக்கதானே தவிர சமூகத்தை சீர் திருத்தறதுக்காக இல்ல. அப்டியே இருந்தாலும் சமூக சிந்தனைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியல.
5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )
13 comments:
//////
இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க.
///////
இது கேள்வி! ஆனா ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்னுதான் விளங்கலை.
அட. எல்லாத்தையும் எழுதிட்டு கடைசில படத்தைப் போடுவீங்க அப்டின்னு நினைச்சிட்டு இருந்தேன்.
//5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )
//
Understood Very Well!
:)
//அட. எல்லாத்தையும் எழுதிட்டு கடைசில படத்தைப் போடுவீங்க அப்டின்னு நினைச்சிட்டு இருந்தேன்.
//
:)
Thalaiva Ungalukku En Intha Kolai Veri?
//இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம்.//
அப்பாடா இப்பதான் உசுரே வந்துச்சு. அப்பவும் ஒரு கவலை. வீட்ல வெக்க திருஷ்டி பொம்மை மாடல் கிடைக்குமேன்னு நினைச்சேன். :(
இளா கமெண்டுக்கு ஒரு ரிப்பீட்டேய்:)
தொட்டால் பூ மலரும் படத்து பாட்டை டைட்டிலா வச்சுருக்கீங்க... முதல் லைன் மட்டும் போட்டிருக்கீங்க... மொத்தப் பாட்டையும் போட்டுருக்கலாம்..சரி அப்புறம் பதிவு நல்லாயிருக்கு... பயங்கரமானக் கருத்தெல்லாம் நம்பர் போட்டுச் சொல்லியிருக்கீங்க... :))
:-))))
பெரிய தலைங்க ல்லாம் வந்து கருத்து சொல்லிட்டாங்க.. இந்த குழந்தை அப்படி என்ன சொல்ல போகுது? அதான் எல்லா கமேண்டுக்கும் ரிப்பீட்டு ரிப்பீட்டு போட்டுக்கிறேன். :-)
//. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )//
இதுதான் ரொம்ப முக்கியமானது.இதுதான் உண்மையும் கூட.ஆனா நம்ப நல்ல மனசை யாருமே புரிஞ்சுக்கவில்லை :(
:)
nenga sonnathu ellam sarithaan... Pavaam yaroo unga mugathaa paakkanumunnu solle erukkanga...
Etho mudenja varaikkum oru model photovayachum upload panni nan eppadi thaan erupppennnu solleedunga....(paavamlaa photo keetavaru)
romba thaan begu pannreenga
//இது அவசியம்னு நினைச்சதால எழுதறேன்.
அப்ப சரி.
neenga sonna nalla karuthukaga than naan yaru kittayum pugaipadam kekkurade illa... namma paatuku vangi paathuttu kulir kaichal vandutta enna panradu...??? he he he... ungalukku nijamagave samooga poruppu konjam jastiya irukku anu...
//இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )//
இத மொதல்ல சொல்லி இருக்கோனும்..:P
எல்லாம் சரி தான்.. ஃபோட்டோ போடாததுக்கு இந்த விளக்கம். உங்க போன் நம்பர் கேட்டா இன்னா பண்ணுவீங்க? :P
Post a Comment