Monday, January 28, 2008

பிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்

போன வாரம் படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணவுடனே. பில்லா பீமா எல்லாம் அடிதடியா இருக்கும் இந்த படம் கொஞ்சம் குடும்ப பாங்கா இருக்கும்னு போனேன். அது மட்டும் இல்ல விகடன்ல வேற இந்த படத்துக்காக காரைக்குடில போட்ட செட்டு. அங்க அவங்க நடத்துன கல்யாணம் எல்லாம் விலாவாரியா எழுதி கொஞ்சம் எதிர் பார்ப்ப ஏத்தி விட்டிருந்தாங்க.
படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க போறது. கல்யாணம் இப்டியே போயிடுச்சு. நான் நினைச்சேன். இதென்ன கொடுமையிது
ஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன். அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.
ஆனா படம் முக்கால்வாசி போன பிறகுதான் தெரிய வருது எடுத்துகிட்ட
நோக்கம். ஆனா அதை புரிய வைக்கறதுகாக கொஞ்சம் இழுத்துட்டே போயிட்டாரு கதைய. ஆனா வேற வழியில்ல இந்த விசயத்தை இந்த மாதிரி கொஞ்சம் இழுத்து சொன்னாதான் தெளிவா புரியும். கண்டிப்பா இந்த படத்தை
தொலைகாட்சில ரிமோட்டோட பார்த்தம்னா ஒன்னுமே இல்லனு சொல்லிட்டு
போயிடுவோம். திரையரங்குல உக்காந்து வேற வழியே இல்லனு பார்த்தாதான் இந்த படத்‍தோட விசயம் விளங்கம். தனிமை கொடுமைங்கறதுதான் எடுத்துகிட்ட விசயம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருக்காரு படத்தை.

பாராட்ட வேண்டியது :
1. இயல்பான கதை அமைப்பு, நடிப்பு, காஸ்ட்யூம்.
(நான் நினைக்கிறேன் எல்லா நடிகர்களையும் அவங்க அவங்க வீட்லயிருந்து கிளம்பி வர சொல்லி அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ல அப்டியே படம் எடுத்திருப்பாரு போல இருக்கு :) )

2. எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது.

3. எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.

குறைகள் :
1. முக்கியமான விசயம் கதைய ரொம்ப ஸ்லோவா நகர்த்தியிருக்கிறது. (ரொம்ப கஷ்டம் அடங்கி 2.30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கறது. அதுலயும் ரிமோட் இல்லாம ரொம்ப கஷ்டமப்பா )

18 comments:

ஜே கே | J K said...

மீ த பர்ஸ்ட்டூ.....

manjoorraja said...

நல்ல கச்சிதமான விமர்சனம்.

ஆனால் செட்டிநாட்டு கல்யாணத்தை விலாவாரியாக விளக்க எடுத்திருப்பதையும் குறிப்பிட்டிருக்கலாம்.

விக்ரமன் டைப் படம் போல என நினைக்கிறேன்.

ஜே கே | J K said...

//எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது//

அப்போ ஒரே சீனயா 2.30 மணி நேரமும் பாத்தீங்க.

MyFriend said...

//Collapse comments

J K said...
மீ த பர்ஸ்ட்டூ.....
//

என் டயலோக்கு. :-(

MyFriend said...

எங்கே கும்மி எங்கே கும்மி?

MyFriend said...

பதிவை படிக்க மறந்துட்டேன். இருங்க படிச்சுட்டு வாரேன். :-)

ஜே கே | J K said...

//எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.//

அப்போ நீங்க படத்துக்கு போகல. எங்கயோ உண்மையா கல்யாணத்துக்கு போயிட்டு படம்னு விமர்சனம் போட்டீங்க போல...

ஜே கே | J K said...

// .:: மை ஃபிரண்ட் ::. said...
J K said...
மீ த பர்ஸ்ட்டூ.....
//

என் டயலோக்கு. :-(//

நாந்தான் போட்டேன். அப்போ என் டயலாக் தான்.

ஜே கே | J K said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...
பதிவை படிக்க மறந்துட்டேன். இருங்க படிச்சுட்டு வாரேன். :-)//

என்ன கொடுமை இது மை ஃபிரண்ட்.

MyFriend said...

//இதென்ன கொடுமையிது
ஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன்.//

:-)))


//அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.
//

வி.வி.சி..

MyFriend said...

/எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.//

அட.. சமைக்க, காய்கறி நறூக்க கூடவா கத்தி உபயோகிக்கல? அப்பூறம் எப்படி காய்கறி வேட்டுனாங்க?

Anonymous said...

அய்யோ பாவம் நீங்க.

Unknown said...

பார்த்தீபன் கனவு விட பெட்டரா படம்? அதைச் சொல்லுங்க...

நிஜமா நல்லவன் said...

குறைகளை(1) விட நிறைகள்(3) அதிகமா இருக்கு.அப்ப நல்ல படம் தான்.

Anonymous said...

//////////////
பார்த்தீபன் கனவு விட பெட்டரா படம்? அதைச் சொல்லுங்க...
//////////////

அட எந்த ஊரு சாமி நீங்க? தூங்கினா கனவு வரத்தான் செய்யும். முழிச்சிக்கோங்க.

Sanjai Gandhi said...

யக்கா.. இப்ப இன்னான்ற நீ? படம் நல்ல கீதா.. நல்லா இல்லியா? படத்த பாக்கலாமா பாக்கக் கூடாதா? ஒரே கொய்ப்பமா கீதுக்கா இத படிச்சா.. :(

ஜேகே சொன்னாப்ல நீ இன்னாவோ ஒரு கண்ணாலத்துக்கு போய்ட்டு வந்து அதுக்கு வெமர்சனம் எய்தின மாரி கீது. :(

வேளராசி said...

தோழி,அப்படியே வெள்ளித்திரை பாத்துட்டு எழுதுங்க.ராம்நகர் செந்தில்குமரன்ல போய்பாருங்க.

Boston Bala said...

எனக்கும் இந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது