பகுத்தறிவு இப்ப ட்ரெண்ட் இதுதான். நேத்துவரைக்கும் விழுந்து விழுந்து கும்பிட்டவங்க்கூட நான் பகுத்தறிவு வியாதினு சொல்லிகறாங்க. சரி அது அவங்க அவங்க விருப்பம் இப்ப பிரச்னை அது இல்ல. பகுத்தறிவுன்னா என்னனே தெரியாம இவங்க அடிக்கற கூத்துதான் தாங்க முடியல.
என் அம்மா பிறந்து வளர்ந்த்து எல்லாம் கோவில் வீதி கோவிலுக்கு பக்கத்து வீடு. வழக்கமான பக்தியான பழைமைவாத (இப்ப அப்படிதான் சொல்லனும்) குடும்பம்.
எங்க அம்மா நினைவு தெரிய அசைவம் சாப்பிட்டதும் இல்ல சமைத்ததும் இல்ல. இப்படிபட்ட அம்மா கல்யாணம் பண்ணி வந்த்தும் என் அப்பா அசைவம் சாப்பிடுவாருனு சமைக்க ஆரம்பிச்சு இன்னிக்கும் எங்க எல்லாருக்கும் சமைக்கறாங்க. ஆனா அவங்க இதுவரை சாப்பிட்றது இல்ல.
அதே மாதிரி குழந்தைகளுக்கு இந்த மந்திரிச்சு கயிரு கட்டறது, திருஷ்டி கழிக்கறது இப்படி எதுவும் எங்களுக்கும் பண்ணது இல்ல பேர குழந்தைகளுக்கும் பண்ண மாட்டாங்க. முக்கியமாக நடக்கற பேசற சாமிய கும்பிட மாட்டாங்க.
இதுக்கெல்லாம் அவங்க நாத்திகவாதியோ பகுத்தறிவு இயக்கம் சார்ந்தவங்களோ இல்ல.
இப்பவும் ஒரு தலைவலி காய்ச்சல்னா கண்ட மாத்திரைய சாப்பிடறது ஒத்துக்க மாட்டாங்க. தலைவலிக்கு காரணம் என்ன ஏன் வந்த்து காரணம் என்ன. மாத்திரை சாப்பிடாத கொஞ்சம் உன் சிந்தனைய மாத்தியோசி நல்ல விசயம் சந்தோசமான விசயங்கள் நினை நல்லா தூங்கி எந்திரி எல்லாம் சரி ஆயிடும்னுதான் சொல்வாங்க.
அதே போல எந்த மதத்தையும் இழிவா பேசுனது இல்ல அதே சமயம் தன் மத நம்பிக்கைய விட்டதும் இல்ல. இப்படி அந்தகால மனுசிக்கு இருக்கற பகுத்து அறியும் அறிவு இந்தகால படித்த பல பயணங்கள் செய்து பல வித மனிதர்கள் மத்தியில வாழும் இந்தகால மக்களுக்கு இல்ல.
படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோவில்னு சொல்ற மாதிரி இப்ப மக்கள் தெளிவு இல்லாம ஒரு மத எதிர்ப்பு பெறுமைனு நினைக்கறாங்க பாவம். அட ஆதி யோகி ஊருக்கு ஆகாதுன்றாங்க அழிக்கும் கடவுளாமா அப்ப ரத்தம் சொட்ட சொட்ட இருக்கற சாமி நல்லதா? உண்மையான பகுத்தறிவுனா ரெண்டுமே இயற்கைய அழிக்குது அல்லது ஆடற பேசற சாமிய நம்பாதீங்கனு சொல்லனும்.
படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோவில்னு சொல்ற மாதிரி இப்ப மக்கள் தெளிவு இல்லாம ஒரு மத எதிர்ப்பு பெறுமைனு நினைக்கறாங்க பாவம். அட ஆதி யோகி ஊருக்கு ஆகாதுன்றாங்க அழிக்கும் கடவுளாமா அப்ப ரத்தம் சொட்ட சொட்ட இருக்கற சாமி நல்லதா? உண்மையான பகுத்தறிவுனா ரெண்டுமே இயற்கைய அழிக்குது அல்லது ஆடற பேசற சாமிய நம்பாதீங்கனு சொல்லனும்.
இத விட மத நம்பிக்கைக்காக சில சடங்குகள கிண்டல் அடிக்கறது கொடுமை. மதம் ஒரு இடத்தின் வாழ்வியல் முறை அவ்வளவுதான். ஐரோப்ப குளிர்ல பருத்தி துணி கட்டி சாமி கும்பிட முடியாது. பாலைவனத்துல கோட் சூட் போட்டு மஞ்சள் தண்ணி ஊத்த முடியாது. ஒவ்வொரு மதமும் அது தோன்றிய இடத்தின் வாழ்க்கை முறை தட்ப வெட்ப நிலைக்கு தகுந்த மாதிரி வகுக்க பட்டது அவ்வளவுதான் இதுல நான் சரி நீ சரினு எதுவும் கிடையாது. எந்த விசயமா இருந்தாலும் அதை யோசித்து பகுத்து அறிந்து பேசுனா நிறைய விசயம் நல்லபடியா இருக்கும்.
No comments:
Post a Comment