Monday, April 07, 2008

மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்

பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" ன்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன.

(அனைத்து படங்களையும் சொடுக்கினால் முழுமையான பெரிய அளவிலான ஒளிப்படத்தை காணலாம்.)


ஒளிபடம் (1) கோவிலின் முழு உருவத்தை காட்டுகிறது. கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுபாட்டில் உள்ளதால் சுற்றிலும் அழகிய புல்வெளி பராமரிக்க பட்டுவருகிறது.

ஒளிபடம் (2) கோவிலின் முன்நுழைவாயில் அருகே உள்ள கோபுரமாகும்.
இதன் இருபுறமும் உள்ளே நுழைய வழிகள் உள்ளன. பொதுவாக மற்ற கோவில்களில் கோபுரத்தின் வழியே நுழைவதாக இருக்கும்.ஒளிபடங்கள் (3,4) உள்சுற்றுபுற பிரகாரங்கள் ஆகும். இவைகள் முழுக்க முழுக்க சிற்பங்கள் நிறைந்துள்ளன. மணற் சிற்பங்கள் (சுதை) என்ற வகையில் அமைந்துள்ளன.ஒளிபடம் (5) ஒரு சிதைந்த சிற்பத்தைக் காட்டுகிறது. மற்ற அங்கங்கள் அனைத்தும் சரியே பெற்று தங்கள் முகத்தை மட்டும் காலதேவனின் இரக்கமற்ற அலட்சியத்தால் இழந்து விட்ட இந்த நடன ஜோடியினரை எண்ணினால் மனம் பதைக்கிறது.

ஒளிபடம் (6) நடனத்தின் அழகை துல்லியமாக காட்ட முயன்றுள்ள சிற்பியின் திறனை கண்டு நாம் வியக்காமல் இருக்க இயலாது அல்லவா..? எத்தனை எத்தனை கற்பனையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளனர் சிற்பி...ஒளிபடம் (7) அன்றிலிருந்து இன்று வரை நம் பாரதம் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்தவை என்பதை உணர்த்தும் சிற்பம். இன்று பாரதத்தின் தேசிய சின்னமாக உள்ள நான்கு சிங்கங்களின் முன்மாதிரியாக உள்ள சிற்பம்.
ஒளிபடம் (8) இங்கு எதைச் சொல்ல எதை விட..? ஒரே இடத்தில் சிங்கங்கள், யானைகள், ஆடல் மகளீர், வதம் செய்யும் காட்சி, மற்றும் பிற உப குள்ளர்கள் போன்றவைகளை காட்டி தன் முழு திறனை வெளிகாட்டியுள்ளார் சிற்பி.

ஒளிபடம் (9) கோவிலின் சுற்று சுவரில் உள்ள காவல் சிற்பங்கள். எண்ணற்ற சிற்பங்கள் வகைவகையாய் அமைந்துள்ளன. விலங்குகள் மீதமர்ந்துள்ள காவற் வீரர்கள் என மிகவும் தத்துரூபமாய் அமைக்கபட்டு நம்மை வியக்க வைக்கிறது.
குறிப்பு : இந்த தலமானது தற்கால புகழ்பெற்ற காமட்சி அம்மன் கோவில் போன்றவைகளிலிருந்து சற்றே விலகியுள்ளது. நகர மையத்திலிருந்து 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் செல்லாத காரணத்தால் அதிக கடைகள் மற்றும் உணவுவிடுதிகள் அருகில் இல்லாத குறையுண்டு.

25 comments:

TBCD said...

படங்கள் அருமை.

சென்ற பார்க்க ஆர்வத்தைக் கிளறிவிட்டீர்கள் .. :)

SP.VR. SUBBIAH said...

வாருங்கள் நட்சத்திரமே! வாழ்த்துக்கள்!

G3 said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :)

.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ?

.:: மை ஃபிரண்ட் ::. said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி. :-)

ஆயில்யன். said...

நட்சத்திர வாழ்த்துக்கள் :-)

ஒரே துறை சார்ந்தவர்கள் என்பதால் கூடுதல் வாழ்த்துக்கள் சகோதரி!

கயல்விழி முத்துலெட்சுமி said...

இந்த கோயிலில் உள்ளே சுற்றுப்பாதையில் சிறு துளை வழியே போய் வரும்படி இருக்குமே .. என் பொண்ணு ரொம்ப என் ஜாய் செய்தா .. நல்ல அழகான கோயில்... காஞ்சியில் ஒவ்வொன்றும் அழகான கோயில்கள்.. பதிவின் படங்கள் அருமை.. நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.

சக்தி said...

ஒவ்வொரு படமும் அருமையாக இருக்கு

நெல்லைக் கிறுக்கன் said...

வாழ்த்துக்கள் அனு... ரொம்ப நாளாச்சு உங்க பதிவுப் பக்கம் வந்து.... நீங்க ஆறு பதிவு போடச் சொல்லிக் கூப்பிட்டப்போ உங்களோட பேசினது...

எப்படி இருக்கீங்க...?

வடுவூர் குமார் said...

நல்ல படங்கள்.

கோபிநாத் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ;))

படங்கள் எல்லாம் சூப்பரு ;)

ஜீவி said...

இந்தக் கோயிலைப் பற்றி விவரமாக துளசி கோபால் அவர்கள்
ஒரு இடுகை இட்டுள்ளார்கள். அவகாசம் கிடைத்தால் பார்க்கலாம்.
கோயில் சுவர்களும், சிற்பங்களும் ஆனது வெறும் மணல் இல்லை; அதை பிண்டி மணல் என்று சொல்வார்கள். நகரத்திலிருந்து வெகு தூரத்தில் இல்லை; நடைதூரம் தான்.
கடைகள், உணவுவிடுதிகள் வந்தால்,
இந்தியத் தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படும் புராதன இக்கோயிலின் அழகு கெட்டுவிடும்.
நான் 25 வருடங்களுக்கு மேல் காஞ்சிபுரத்தில் இருந்தவன். புல்வெளிகளெல்லாம் பிற்பாடு வந்தவை தாம்.
நல்ல்தொரு படங்களுடனான பதிவிற்கு வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

திருமணம் இப்பதான் முடிந்தது எல்லார் வீட்டுக்கும் விருந்துக்கு போறது அது இதுன்னு பிசியா இருப்பீங்கன்னு பாத்தா ஸ்டாரா வந்துட்டீங்க.

நட்சத்திர வாழ்த்துக்கள்.

மங்களூர் சிவா said...

/
Blogger .:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ?
/
நாலாவதா கமெண்ட்ட போட்டுட்டு பர்ஸ்ட்டாம் பர்ஸ்ட்டு

ILA(a)இளா said...

எலேய், இங்கே என்ன பண்ணிட்டு இருக்க?

வாழ்த்துக்கள்!

Anonymous said...

Excellent post. Also an excellent picture. I love to see this place in person. Thank you.

Ravi

சிங். செயகுமார். said...

நட்சத்திர வாழ்த்துக்கள்! அனு படங்கள் சூப்பர் :)

சிங். செயகுமார். said...

நட்சத்திர வாழ்த்துக்கள்! அனு படங்கள் சூப்பர் :)

பேரரசன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.....

கபீரன்பன் said...

பானை பிடித்தவள் பாக்கியம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். நட்சத்திர அந்தஸ்து 'கை பிடித்தவர் பாக்கியமா?'
நல்வாழ்த்துகள்.

படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. பிற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. படித்தபின் மற்றவை:))

G.Ragavan said...

நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள்.

நீங்கதான் இந்த வார நட்சத்திரமா... வாங்க வாங்க...

மாமல்லபுரத்துக் கற்கோயில்களின் அழகைச் சொல்லிக்கிட்டே போகலாம். சமீபத்துல அங்க ஒரு முருகங்கோயிலைத் தோண்டி எடுத்தாங்களாமே... அதோட போட்டோ கெடைச்சாலும் போடுங்க. :)

G.Ragavan said...

அடடே! இது கைலாசநாதர் கோயிலா? மாமல்லபுரம்னுல்ல நெனச்சிட்டேன். அடடா! காஞ்சியில இப்பிடியொரு கோயில் இருக்கா! ம்ம்ம்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

காஞ்சியில் இவ்வ‌ள‌வு புராதான‌ ஆல‌ய‌மா?? வ‌ந்த‌ போது அறியாம‌ல் போய் விட்ட‌து.
இன்னுமொரு த‌ட‌வை ச‌ந்த‌ர்ப்ப‌ம் அமைந்தால் த‌வ‌றாது செல்ல‌ எண்ண‌ம். அருமையான‌ ப‌ட‌ங்க‌ள்
விள‌க்க‌ங்க‌ள். ந‌ம் முன்னோரின் ஆற்ற‌ல் புள‌காங்கித‌ம‌டைய‌ வைக்கிற‌து.

பரத் said...

அருமையான படங்கள்

நட்சத்திர வாழ்த்துக்கள் அனு

Anonymous said...

arumaiyana padivugal , tirutamana pugaipadangal :)