Saturday, April 12, 2008

மக்களாட்சி

பல நாளா நானும் யோசிச்சது உண்டு. இந்த ஜனநாயகம் அரசியல் அமைப்பு சட்டம், திட்டங்கள், கொள்கை, அறிக்கை இப்டியெல்லாம் எப்பபாரு மெனக்கெட்டு பேசிக்கறாங்க. இதுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டபடி திட்டி திண்டாடி என்ன என்னமோ பண்ணி நிறைவேத்துறாங்களே. இதுக்கெல்லாம் ஏன் இப்டி கஷ்டப்படறாங்க. எதுக்கு வீணா வாதம் பிரதிவாதம் பண்ணி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குறாங்க இப்‍டியெல்லாம் யோசிச்சதுண்டு. ஏன்னா பள்ளிகூடத்துல இருந்து பாடங்கள பெறும்பாலும் இதை சுத்தியேதான் இருக்கும். ஆனா எந்த மாணவனும் அதை படிச்சு பயன் அடைஞ்சதா தெரியல இதுக்கு காரணம் நம்ம கல்வி சொல்லி தர முறை மாற வேண்டும் அல்லது விசயத்தை கொஞ்சம் சுருக்கி படங்கள் மற்றும் நடப்பு நிலவரத்தோட கம்பேர் பண்ணி சொல்லி தரனும். சரி விடுங்க அது கல்வி முறை மாற்றத்தில வருது. இப்ப தலைப்புக்கு வர்ரேன்.

திட்டம்னா முதன் முதல்ல இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்போ மக்கள் தொகை கிட்டதட்ட வெறும் 50கோடிதான் ஆனா பஞ்சம் வறுமை எல்லாம் நல்லா அமோகமா இருந்துச்சு இதை போக்க என்ன பண்ணலாம்னு சில நல்ல அரசியல்வாதிகள் ஐந்தாண்டு திட்டம்னு ஒன்னு கொண்டு வந்து எங்க எங்க முடியுதோ அங்க எல்லாம் அணைகளை கட்டி வாய்க்கால் வெட்டி நீர் பாசனத்தை பெறுக்கி உணவு உற்பத்திய பெறுக்கி இப்டி என்ன என்னவோ செஞ்சு உணவு பற்றாக்குறையில்லாம வறுமை அண்டாம இன்னிய மக்கள் தொகையிலயும் காலந்தள்ளற அளவு முன்னேற்றம் பண்ணியிருக்காங்க.

அதுக்கு பிறகு உள் கட்டுமானம் அதாங்க (Infra structure) போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு. இத பத்தி சொல்லவே வேண்டாம் யாராவது தப்பி தவறி மொபைல் போன் இல்லைனு சொன்னா ஒன்னு அவரு வெளிநாட்டுகாரரா இருக்கும் இல்லைனா பேச முடியாத குழந்தையா இருக்கும் அந்த அளவு பெறுத்துடுச்சு. போக்குவரத்தும் ஒன்னும் குறைஞ்சிடல கிட்டதட்ட எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதில தன்னிறைவு பெற்றுதான் இருக்கு.

அது போக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். கண்டிப்பா 100 சதவீத தன்னிறைவு இல்லை. ஆனா கிட்டதட்ட முழு அளவு இருக்குது. சரி எதுக்கு இப்போ இந்த விளம்பரம்னு கேட்கறீங்களா? ஒன்னும் இல்லீங்க திட்டம்னு ஒன்னு போட்டா அதை நிறைவேத்தி செயல் படுத்த கொஞ்ச காலம் ஆகும். ஏன்னா எத்தனையோ அரசு அலுவலகங்களை தாண்டி மக்களை வந்தடையவே பல காலம் ஆகும். அது வரைக்கும் அரசாங்கம்னு ஒன்னு நிலையா இருந்தாதான் அந்த திட்டம் கடைசி குடி மகனுக்கும் வந்து சேர்ந்து கொஞ்சமாச்சும் ஆமை வேகத்திலயாவது முன்னேற முடியும், அதை விட்டுட்டு இந்த ஜனநாயம் எல்லாம் சுத்த தெண்டம். கம்முனு சர்வாதிகாரம்தான் நல்லதுஅல்லது வேற ஆட்சி முறைதான் நல்லதுனு இள ரத்தங்கள்லாம் கர்ஜணை பண்றாங்க ஆனா ஒரு விசயம் தெளிவா இருக்கனும் என்ன ஆட்சி நடந்தாலும் ஜனநாயகத்துலதான் பலன் ஆமை வேகத்துலயாவது நிஜமா கஷ்டப்படுற மக்களுக்கு போய் சேரும் அதை விட்டுட்டு குதிச்சா அது முக்கிய நகரங்கள்ள மட்டும்தான் பலன் அடைஞ்சு முன்னேறும். ஆனா சத்தம் இல்லாத கிராமங்கள் முன்னேறாது. அதனால மக்களே முடிஞ்ச வரைக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க நம்மளால முடிஞ்ச கடமைய செய்யனும் இல்லீனா அடுத்த தலைமுறைக்கு ‍ரொம்ப சிரமமா போயிடும்.

எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் இப்படி பாராட்டவோ அல்லது திட்டவோ அல்லது மொக்கை போடவோ அனுமதிக்கும் மக்களாட்சிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய ஒரு மொக்கை கட்டுரை சமர்ப்பணம்.

வாழ்க மக்களாட்சி..!!

4 comments:

ஹாரி said...

அனு

நான் படித்த முதல் தமிழ் பதிவர் நீங்கதான். நட்சத்திர வாழ்த்துக்கள்.

Anonymous said...

இந்த சுதந்திரம், வசதிகள் உங்களுக்கு கிடைத்திருப்பதுபோலவே ஜனநநயக்த்தில் எல்லோருக்கும் கிடைத்திருந்தால் இன்னும் சந்தோஷமாயிருக்குமே. :)

Aravind Ramalingam said...

Dear Anu,

i have been the reader of your blog for quite some time now.. this article really made me to go an edge of typing back to you. i just want to bring in to your consideration about the validity of the point which you have given.. you said tht india was posperous before we got the freedom, that is not the truth.. if you go back in the history you will notice about the five year famines just before the independamce struggle and other revolts due to the famine.. not sure whether this comment will be seen by you.. if you do, you can reach me on aravindramalingam@gmail.com for further dicussions...

Ram,
Boston-Massachusetts

விஜய் said...

ஜூலை 13ம் தேதி கோவையில்
திரு. மஞ்சூர் ராசா இல்லத்தில்
42, சீனிவாசா நகர்,
கவுண்டம்பாளையம்.
கோயம்புத்தூர்.
காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.

நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு

வருகைதரும்

கோவை இணைய நண்பர்கள்

மஞ்சூர் ராஜா
தமிழ்பயணி சிவா
லதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்
ஓசை செல்லா
திருப்பூர் தியாகு
புரவி ராம்
ஞானவெட்டியான்
காசி
சுரேஷ்
காயத்ரி
கனகராஜ்
ஜெயபிரகாஷ்
நாமக்கல் சிபி
கார்த்திக்
புதுகை பாண்டி
வடகரை வேலன்
பரிசில்காரன்
கூடுதுறை
வெயிலான்
கிரி

மேலும்
வருபவர்களையும்

வருக வருக
என
வாழ்த்தி
வரவேற்கிறேன்(தகவல்:http://podian.blogspot.com/)

தி.விஜய்
கோவை.
http://pugaippezhai.blogspot.com