Tuesday, April 08, 2008

ஊழல்

இந்தியர்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ஊழல் வழக்கு உண்டென்றால் அது போபர்ஸ் பீரங்கி ஊழலதான்..இது நடந்த போது(1987) இப்போது இருக்கும் இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் பிறக்கவே இல்லை..இந்த வழக்கினால் காங்கிரஸ் கட்சி 1989ல் நடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது..ஆனால் அந்த ஊழல் வழக்கு மட்டும் இன்னும் நடந்துட்டு இருக்கு .கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் எதுவும் முடிவுக்கு வந்தபாடில்லை..போபர்ஸ் போல நிறைய ஊழல் வழக்குகள் நம் அன்றாட வாழ்க்கையில் வந்து போயிருக்கின்றன. இதுபோல பரபரப்பாகப் பேசப்பட்டு நம்மால் மறக்கப்பட்ட ஊழல்கள் குறித்தும், அந்த ஊழல்கள் சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?நடவடிக்கை மூலம் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தண்டனை பெற்றவர்கள் குறித்தும் இந்தப்பதிவில் சில விசயங்கள் எழுத எண்ணம்.


1. போபர்ஸ் ஊழல்- 64 கோடி


வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-22-01-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- 22-10-1999

தண்டனை பெற்றவர்கள்--- தேடுராங்க,தேடுராங்க....தேடிட்டே இருக்காங்க.
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


2.HDW Submarine- 32.55 கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-05-03-1990
தண்டனை பெற்றவர்கள்--- தேடித்தேடி சலிச்சுபோய் ஒன்னும் பண்ண முடியாம சி.பி.ஐ வழக்கை மூடிச்சுக்கறோம் அனுமதி கொடுங்கனு நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


3. பங்குச்சந்தை ஊழல்- 4100 கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி - 72 வழக்கு.(1992 - 1997 வரை)
குற்றம் சாட்டப்பட்டவர்கள்--- 4 பேர்(ஹர்சத் மேத்தா உட்பட)

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


4. ஏர்பஸ்(Airbus) ஊழல்- 120கோடி



வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி- 23-03-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- இன்னும் தாக்கல் செய்யப்படவில்லைதண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


5.இந்தியன் வங்கி ஊழல்- 762.92 கோடி


வழக்குப் பதிவு- 45 (1992ல் இருந்து)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 27 நபர்கள் மீது

தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


6.ஹவுஸிங் ஊழல்- 65 கோடி


வழக்குப் பதிவு- 11/03/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -தண்டனை பெற்றவர்கள்-- நான்கு இளநிலை ஊழியர்கள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


7.கால்நடைத் தீவன ஊழல்- 950


கோடிவழக்குப் பதிவு- மார்ச் 1995லிருந்து (64 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -63

தண்டனை பெற்றவர்கள்-- ஒரே வழக்கில் மூன்று அதிகாரிகள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


8.பெட்ரோல் பங்க் ஊழல்- 950கோடி


வழக்குப் பதிவு- நவம்பர் 1996 -1997 (15 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


9.யூரியா ஊழல்- 133கோடி



வழக்குப் பதிவு- 28/05/1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 26/12/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


10.சி.ஆர்.பி(CRB) ஊழல்- 1031கோடி


வழக்குப் பதிவு- 20/05/1997

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 02/09/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


11.டெலிகாம் ஊழல்- 1200கோடி


வழக்குப் பதிவு- ஆகஸ்ட் 1996

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 4

தண்டனை பெற்றவர்கள்-- ஒருவர் மட்டும்

கைப்பற்றப் பட்ட பணம்- 5.36 கோடி


12.யுடிஐ(UTI) ஊழல்- 9500கோடி



வழக்குப் பதிவு- ஜூலை 2001(1 வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 2004 வரை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


13.கே.பி ஊழல்(KAY PEE)- 3128கோடி


வழக்குப் பதிவு- மார்ச்&மே 2001(மூன்று வழக்கு)

குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இரண்டு
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


14.வீடு விற்பனை (Home Trade) ஊழல்- 1200கோடி



வழக்குப் பதிவு- 10/05/2002

குற்றப் பத்திரிக்கை தாக்கல் -இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி

கைப்பற்றப் பட்ட பணம்- சுழி


இதெல்லாம் சும்மா சில கூகிள் தேடல் மூலமும், சில கட்டுரைகள் உதவியுடனும் கிடைத்த தகவல்கள்..சரி, என்னோட ஒரே ஒரு கேள்வி என்ன என்றால் இந்திய மக்களாகிய நாம் ஊழல் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன்?...அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?

12 comments:

வடுவூர் குமார் said...

இது யாருக்கு உதவுமோ உதவாதோ...
மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் தைரியமாக செயல்பட உத்வேகம் கொடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
:-)

சின்னப் பையன் said...

ஜெய்ஹிந்த்!!!

துளசி கோபால் said...

நடக்கும் & நடந்த ஊழல்களில் இது ஒரு சதமானம்தான் இருக்கும்.

தலையே சுத்தும் முழுவிவரமும் கிடைச்சால்.

வாழிய பாரத 'MONEY' திரு நாடு!!!!

MyFriend said...

நல்ல பதிவு.. statistics..

இதுதானே உண்மை! கெட்டவங்களா இருந்தாலும், பணம் அதிகமா வச்சு தப்பிச்சுடுறாங்க.. அவங்க கிட்ட உண்மையா உழைக்கிற வேலைக்காரங்களை மாட்டி விட்டுடுறாங்க..

கடைசி வரை இவங்க மாட்டவும் மாட்டாங்க.. கேஸும் மூடிடுவாங்க..

கோபிநாத் said...

\\வாழிய பாரத 'MONEY' திரு நாடு!!!!\\

;)))

இந்தியா ஒளிர்கிறது...வாழ்க ;)

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

//வாழிய பாரத 'MONEY' திரு நாடு!!!!//

வாழிய பாரத 'MONEY' திருட்டு நாடு!!

நம் நாட்டை பற்றி நாமே இப்படி சொல்வதற்கு வெட்கமாய் தான் இருக்கிறது. என்ன செய்வது?

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

//வாழிய பாரத 'MONEY' திரு நாடு!!!!//

வாழிய பாரத 'MONEY' திருட்டு நாடு!!

நம் நாட்டை பற்றி நாமே இப்படி சொல்வதற்கு வெட்கமாய் தான் இருக்கிறது. என்ன செய்வது?

G.Ragavan said...

அதாவதுங்க... பதவிக்கு வந்தா தப்பு பண்றவந்தான் இப்ப சாதாரண மனிதன். ஆகையால பதவில இருக்குறவன் தப்பு பண்றான். கீழ மாறுனா மேல மாறும். அதுவரைக்கும் ஊழல் வாழ்க.

Sanjai Gandhi said...

சுருக்கமான உருப்படியான தகவல்கள்.

//அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?//

இது பொறுபற்ற கேள்வி... தவறுகளை சரி செய்ய ஆலோசனை தருவதை விடுத்து... இனி நடக்கும் தவறுகளை ஏன் தட்டி கேட்க்க வேண்டும் என்பது சரி அல்ல என்பது என் தாழ்மையான கருத்து... குறைந்த பட்சம் இந்த வழக்குகள் எல்லாம் விசாரிக்கப் பட்டதால் தான் சமீப ஆண்டுகளில் இது போன்ற பெரும் ஊழல்கள் எதும் நடைபெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

பரத் said...

ஹம்ம்ம்.....பெரு மூச்சுதான் விட முடியும் வேறென்ன செய்ய!!!!
தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி

காரூரன் said...

ஊடக சுதந்திரம் அதிகமுள்ள நாடுகளில் ஊழல்கள் குறைவு என்பார்கள். இந்தியாவில் பத்திரிகைகள் ஒரு தகவலை தந்து விட்டு அதை பற்றி பின் பேசாமல் விட்டுவிடுகிறார்கள்.

Anonymous said...

வணக்கம் அனுசுயா. நான் கல்யாண்குமார். பத்திரிக்கையாளன். சிறுகதை எழுத்தாளன். திரைக்கதை உதவியாளன். தற்போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் பணிபுரிகிறேன். தங்களது ஊழல் பற்றிய கட்டுரை மிக அற்புதம். எனது வலைப்பூ : kalyaje.blogspot.com