கார்வாலோவின் தேடல் -தேஜஸ்வினி என்ற தமிழரக்க நாவல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல ஆண்டுகள் கழித்து படிப்பதாலோ என்னவோ புத்தம் அருமையாக இருந்தது. முதன் முதலாக காதல், குடும்ப சண்டை, அரசியல், அறிவியல் கலக்காத எழுத்து நடை அருமையாக இருந்தது. கடைசியாக நான் உணர்ந்தது நாமும் நமது அடுத்து வரும் தலைமுறைகளும் இயற்க்கை எனும் மாபெரும் சொர்க்கத்தை விட்டு விலகிக் கொண்டே வருகிறோம்.
இந்த கதையில் வரும் அனைத்து கதா பாத்திரங்களும் அவரவர் இயல்புகளில் இருந்து மாறாமல் இருப்பதே ஒரு தனி சுவைதான். யாரும் தன் இயல்புகளில் இருந்து மாறுவதில்லை என்பதை தெளிவாக கடைசி வரை கொண்டு செல்கிறார் எழுத்தாளர்.
தமிழ் மொழியாக்கமும் நன்றாகவே இருந்தது. இதில் வரும் கிவி என்ற நாயின் வாழ்க்கை முறை முதற்கொண்டு அனைத்துமே எதார்த்தமாக அன்றாட வாழ்வின் நிகழ்வுகளைக் கொண்டே நாவல் படைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் வித்தியாசமான கதை.