Wednesday, January 03, 2007

கைத்தொ(ல்)லை பேசி

ரொம்ப நாளா கைத்தொலைபேசி வாங்காம இருந்தேன். எங்க அப்பாரு பாத்து சளிச்சு அவரே போயி ஒரு தொலைபேசி வாங்கிட்டு வந்து குடுத்து ஊர்ல எல்லாரும் வெச்சிருக்காங்க நீ மட்டும் ஏன் இல்லாம இருக்கனு சொன்னாரு. நானும் பவ்யமா எனக்கு எதுக்குங்கப்பா போனு அதான் வீட்ல ஒன்னு ஆபீஸ்ல ஒன்னும் இருக்குதே பத்தாதானு கேட்டேன். அவரும் விட்டனானு இல்ல இல்ல எல்லா புள்ளங்களும் வெச்சிருக்காங்க நீயும் வெச்சுக்கோனு சொல்லி குடுத்தாரு. பாவம் அவரு அதுக்கப்புறந்தான ஆரம்பிச்சுச்சு நம்ம அட்டகாசம். முதல் வேலையா நம்ப நட்பு வட்டங்களுக்கு நம்பர் குடுக்க ஆரம்பிச்சேன். அவங்களும் தாராளமா அள்ளி வழங்குனாங்க அவங்கவங்க நம்பர. சரி இது ஒரு ஆத்திர அவசரம்னா கூப்பிட பேச வசதியா இருந்துச்சு. அப்புறம் மெல்ல மெல்ல ஒவ்வொருத்தரா குறுஞ்செய்தி (SMS) அனுப்ப ஆரம்பிச்சாங்க. நானும் சரி பிரியா குடுக்கறாங்க அனுபவிப்போம்னு அனுப்பினேன். முதல்ல காலைல எழுந்தவுடனே எல்லாருக்கும் ஒரு குட் மார்னிங். என்னமோ நாம குட் மார்னிங் அனுப்பலீனா அவங்க எழுந்திரிக்காத மாதிரி. அப்புறம் ஒரு 9 - 10 மணி சுமாருக்கு ஒரு சர்தார்ஜி ஜோக். பாவம் இந்த சர்தார்ஜிங்க நம்மகிட்ட மாட்டீட்டு படாதபாடு படறாரு. அப்புறம் ப்ரெண்ட்ஷிப் பத்தி ஒரு செண்டி மெ‍‍‍‍சேஜ், இன்றைய தத்துவம்னு ஒரு கடி, அதுபோக கங்கூலி, அஜீத், விஜய், கேப்டன் படங்கள பத்தி ஒரு கடி இப்டீனு நாள் முழுக்க ஓடும். கடைசில நைட் குட்நைட் சொல்றது. நாம குட் நைட் சொல்லுலீனா யாரும் தூங்கவே போறதில்ல மாதிரி ஊருக்கே குட் நைட் சொல்லறது.
இதெல்லாம் பத்தாதுனு ஆபீஸ்குள்ள டீ சாப்பிட போகலாமா? பிரிண்ட் அவுட் பேப்பர் கொஞ்சம் எடுத்துட்டு வா இப்டினு ஆபீஸ்குள்ளயே மெ‍சேஜ்.
இதெல்லாம் போக இந்த நியூ இயர், நல்ல நாள் கெட்ட நாள் இப்டி எது வந்தாலும் வாழ்த்து செய்தி வேற லிஸ்ட் போட்டு அனுப்பறது. இதெல்லாம் போக போன் பேசறது வேற. அது எப்டிதான் கட்டுபடி ஆகுதுன்னே தெரியல. ஒரு சிலர் மணிக்கணக்கா பேசறாங்க பேசறாங்க பேசிகிட்டே இருக்காங்க. காது என்னத்துக்குதான் ஆகுமோ தெரியல. அதவிட அவ்ளோ நேரம் என்னதான் பேசுவாங்க. எங்கயிருந்துதான் மேட்டர் கிடைக்குதோ தெரியல. இதுல Hands free வேற மாட்டிக்கறாங்க. தூரத்துலயிருந்து பார்த்தா தன்னப்போல பேசற மாதிரியிருக்கு. சில சமயம் என்னடாயிது லூசாப்பா நீனு கேட்கற அளவு இருக்கும்.
ம் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணியாச்சு நாமளும் ஏதாவது இந்த வருசம் உருப்படியா பண்ணலாம்னு நினைச்சு இந்த வருசத்துலயிருந்து இந்த குறுஞ்செய்தி அனுப்பறது தொலை பேசியில பேசறது இதெல்லாம் படிபடியா குறைச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பார்ப்போம் கொஞ்சமாவது குறையுதானு. :)

13 comments:

Anonymous said...

அப்பாடா எப்படியோ இனிமே வீட்டிலே, அலுவலகத்திலே உருப்படியா வேலை செய்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
அதே போல அலைபேசி செலவும் குறையும்.. வாழ்க நல்ல முடிவு வளர்க..

Anonymous said...

இதையே குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தால், தாங்கள் அனுப்பியதிலேயே சிறந்த செய்தி இதுதான் என்று உங்கள் நண்பர்கள் வெகுவாகப் புகழ்வார்கள். :)

Gopalan Ramasubbu said...

அனு ,

அதிகமா SMS அனுப்பற ஆம்பளையும்
அதிகமா Missed call குடுக்கற பொம்பளையும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரமே கிடையாது ;) :D

P.S:I personally hate this mobile phone..

மனசு... said...

ஹீ ஹீ நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா. கைத்தொ(ல்)லைபேசியை விட முந்தக்கூவி அப்படினு நம்ம
இலங்கை மக்கள் சொல்லக் கேள்வி. ஏதோ ஏடாகூடமா நினைக்காதிங்க... சுத்தத் தமிழ்...

நம்ம ஊருல குறுஞ்செய்தி அனுப்பும் வசதி சும்மா குடுத்தாலும் குடுத்தான் அத மக்கள் ஏகபோகமா உபயோகிக்கறாங்கப்பா... அதுசரி நாள் முழுக்க குறுஞ்செய்தி அனுப்பி மணிக்கணக்கா பேசுற அளவுக்கு மக்களுக்கு வேலை வெட்டி இல்லையா என்ன... ம்ம்ம் ஆகமொத்தம் நம்ம ஊருல ஒவ்வொருநாளும் ஒவ்வொருத்தர் குறுஞ்செய்தி அனுப்புற நேரத்த கணகெடுத்தா அது அதிகபட்ச வேலை நேரத்த வீணாக்கிறதா இருக்கும்னு நினைக்கிறேன்...
நீ மட்டும் ஒழுங்கானு கேட்காதிங்க... இங்க உக்காந்து பிளாக் எழுதுற நேரத்தில ஏதாவது உருப்படியா செஞ்சுருக்கலாம்தான்... ஹீ ஹீ...

அறிவியல் வளர்ச்சிய உபயோகிக்க வேண்டியதுதான்.... நம்ம ஊருல கொஞ்சம் அதிகமாவே உபயோகிச்சுடறோம்.... அதான் மேட்டரே...

மனசு...

பிரியமுடன்... said...

உங்களைச் சொல்லி குத்தமில்ல..
உங்க அப்பாவைச் சொல்லனும்!
சும்மா இருந்த சங்கை ஊதி...கதையாகிவிட்டது!
குழாய் அடியில் ஒரு குடம் தண்ணி அடிப்பதற்குள் ஊரில் உள்ள 5 குடுமபங்களுடைய total story ம் அடிபட்டுவிடும்! பெண்களுக்கு செல்போன் வேறு வாங்கி கொடுத்தா சும்மா இருப்பாங்களா? அதுவும் இலவச சேவை வேற இருந்தா... சொல்லவே வேண்டாம்! எனக்கு என்னமோ உங்க அப்ப ஒரு பெரிய பிளானோடுதான் வாங்கி கொடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது... வீட்டில் அனைவரிடமும் லொட லொடன்னு பேசி கழுத்தை அறுப்பவரா தாங்கள்.. அப்படியிருந்தா தொல்லையிலிருந்து எஸ்கேப் ஆவதற்காக கூட அவர் செய்திருக்கலாம்... எப்படியோ சரி... கடைசியில் அது தொல்லை பேசிதான் என்று தெரிந்திருந்தால் சரி...
என்ன, உங்க போனிலிருந்து வெளிநாட்டுகெல்லாம் அழைக்க முடியாதுதானே? அப்பாடா நாங்க தப்பித்தோம்! எஸ்கேப்......

Syam said...

நல்லா சொன்னீங்க போங்க....சரி இனிமேலாவது ஆபீஸ்ல கொஞ்சம் வேலை பார்க்கபோறேன்னு சொல்றீங்க...:-)

ROTFL @ pandian :-)

ஜி said...

New year resolutionaa?

kadai puditcha maathirithaan...

அனுசுயா said...

சிவா : :)

பாண்டியன் : //சிறந்த செய்தி இதுதான் என்று உங்கள் நண்பர்கள் வெகுவாகப் புகழ்வார்கள்// நண்பர்களா? நீங்களா?

கோபாலன் : ஏன் இந்த கொலை வெறி. உங்களால அனுப்ப முடியலீங்கறதால தான இந்த டயலாக் எல்லாம் :)

அனுசுயா said...

மனசு : முநதக்கூவினு சொல்றது கொஞ்சம் கஷ்டம்தான்

//மணிக்கணக்கா பேசுற அளவுக்கு மக்களுக்கு வேலை வெட்டி இல்லையா என்ன//
அதுதாங்க எனக்கும் தெரியல :)

Syam said...

belated பொங்கல் வாழ்த்துக்கள் :-)

Anonymous said...

யாருப்பா அது அடுத்த பொங்கலே வந்திருச்சு. இப்போ போயி மாட்டுப்பொங்கல் வாழ்த்து சொல்லிக்கிட்டு....:)))

அனு அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்....எம்பவரட்டும் உமன். (Women Empowerment !!!)

செந்தழல் ரவி

Anonymous said...

இந்த பதிவை பற்றி....

மாமிசம் சாப்பிடக்கூடாதுன்னு புலியே சொல்றமாதிரி இருக்குதுங்கோவ்...

மீண்டும் செந்தழல்

MyFriend said...

நீங்க அப்பவே சொன்னது இப்போ படமா வெளியாயிருக்கு. :-)