இன்னிக்கு பிறந்த மாதிரி
இருக்கு அதுக்குள்ள 5 வயசு முடிஞ்சிடுச்சு லக்சனுக்கு. ரொம்ப சந்தோசம்
ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப வருத்தம் எனக்கு. அவன் சின்னதாவே இருக்ககூடாதானு
(lol).அவனுடைய குழந்தைதனம் மறைஞ்சு கிட்டே வருது. கவிதாயினி
(மயக்குறு மகள்) மற்றும் உமாநாத்(தேவதை வாழும் வீடு) எழுதும்போது நான்
நினைச்சுக்குவேன் என் மகனை பற்றி எழுதசிறந்த தலைப்பு சேட்டை.அந்த அளவு அவனுடைய ஆட்டம் இருக்கும்.சிறு
குழந்தையா இருக்கும்போது எப்படா பெரிசாவான் கொஞ்சமாச்சும் ரகளை
குறையும்னு இருந்துச்சு ஆனா இப்ப ஏன்டா பெரியவனா ஆகறான்னு இருக்கு.சேட்டை பல செஞ்சாலும் கடைசில சில டயலாக்ல அப்டியே மறக்க வச்சிடுவான்.
உதாரணத்துக்கு சில..
உதாரணத்துக்கு சில..
கங்காணி - சின்ன குழந்தையா இருக்கும் போது பேச்சு பழகும் சமயம் அடிக்கடி கங்காணினு சொல்லுவான் அது என்னனு கண்டுபிடிக்க பல நாள் ஆச்சு. என் அப்பா கண்ணாடி போடுவாரு அதைதான் அவன் கங்காணினு சொல்லி இருக்கான்.
உப்புமா லட்டு - போன மாசம் அம்மாகிட்ட தொலைபேசியில பேசும்போது உனக்கு என்ன ஸ்வீட் வேணும்னு கேட்டதுக்கு உப்புமா லட்டு மட்டும் செஞ்சு வெக்க சொல்லறான்
பெட்சீட் புளு - அதைவிட ஒரு நாள் ஓடி வந்து இங்க வந்து பாரும்மா புழு பெட்சீட் வந்திருக்குன்னு சொல்ல நான் ஏதோ சொல்லறான்னு எட்டி பார்த்தா அது கம்பளி புழு..இப்படி வார்த்தைகளை எங்கிருந்தோ தேடி புது வார்த்தைகளை உருவாக்கிட்டு இருக்கான். இந்த மழலை எல்லாம் கொஞ்ச நாள்தான்னு நினைக்கயில வருத்தமா இருக்கு. முதல்ல பள்ளியில கொண்டு விட்டா பல தடவை முத்தம் கொடுத்து சீக்கிரமா வந்துடுமா வந்துடும்மானு சொல்லுவான் ஆனா இப்ப ஒன்னும் கண்டுக்கறதே இல்ல வேகமா போயி நண்பர்கள்கிட்ட சேர்ந்திடறான். ம்ம்ம் ......
அதே போல வெளிய எங்க போனாலும் ஓடி வந்து நானும் வரேனு அடம் பிடிச்சு முத்தம் கொடுத்து சமாதானம் பண்ணிதான் கிளம்பனும் இப்ப நிலம ரொம்ப மோசம் "கண்ணே அம்மா போயிட்டு வரேன்" உள்ள இருந்தே "ஓ கே பை வரும்போது கிண்டர் ஜாய் வாங்கிட்டு வந்திடு" இவ்வளவுதான் முடிஞ்சுது.
அது மட்டுமா பாடம் படிக்க சொன்னா போதும் பசி எடுக்கும், தூக்கம் வரும், பாத்ரூம் வரும் அல்லது கை வலிக்கும் இதெல்லாம் யார் சொல்லித்தறாங்கனு தெரியல ஆனா கரெக்டா செய்யறான்.
அவன் வளர வளர நம்ம விட்டு தூரமா போறமாதிரி ஒரு பீலிங் இருக்கு இருந்தாலும் குழந்தை வளர்ரத பார்க்க சந்தோசமாவும் இருக்கு. ம்ம்
என்ன பண்ண நான் இப்டி புலம்புனா என் அம்மா கேட்கறாங்க இப்டிதான எங்களுக்கும் இருக்கும் இப்டி வளர்த்து எல்லாம் பண்ணதுக்கு அப்புறம் விட்டுட்டு வெளிநாட்டுல போயி உக்காந்துக்கிட்டு அடுத்த வருசம் வரேன் அப்ப வரேன் இப்ப வரேனு சொல்லிகிட்டே இருக்கீங்கள்ள அப்டினு கேட்கறாங்க ம்ம் அதும் சரிதான் நாம இன்னிக்கு பண்றத நாளைக்கு நம்ம பசங்க பண்ண போறாங்கனு மனச தேத்திக்க வேண்டியதுதான்.
1 comment:
வலைப்பதிவைப் புதுப்பித்த சகோதரியாரை வருக வருக என்று வரவேற்கிறோம்
இவண்
எட்டாவது வட்ட பரணி ரசிகர் மன்றம்
Post a Comment