Monday, March 20, 2006

நிம்மதியான வாழ்க்கை

பள்ளிக்கூடம் போகனுமா?
படிக்கணுமா?
வேலைககு போகணுமா?
நிறைய சம்பாதிக்கணுமா?
வாகனம் வாங்கனுமா?
வீடு கட்டணுமா?
ஊர் சுத்த நண்பர்கள் வேணுமா?
மொபைல் ரீசார்ஜ் பண்ணணுமா?
அப்புறம் இநத மாதிரி வலைப்பதிவு போடணுமா?
மெயில் அணுப்பனுமா?
காதலிக்க பொறுமை வேணுமா?
கல்யாணம் பண்ணி கஷ்டபடனுமா?
குழந்தைகளை படிக்க வைக்கணுமா?
வயசான காலத்தில் நல்ல உறவு ‍வேணுமா?

இப்படி வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இயற்கையோட இணைந்து வாழ தெரியாத இந்த மனுஷங்கள பார்த்தா ஒரே சிரிப்பா இருக்குது.

22 comments:

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல் நினைவுக்கு வருதுங்கோ... "குரங்காய் மனிதன் வாழ்ந்தபோது சஞ்சலம் எதுவுமில்லை... படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே.."
என்ன... அவர் புலம்பினார்... நீங்கள்.. நையாண்டி பண்ணுகிறீர்கள்..
தொடரட்டும் பணி... :)

அருள் குமார் said...

அனுசுயா!
உங்களோட இந்த பதிவ பாத்து ரொம்ப exite ஆகிட்டேன். இதே மேட்டர வேற மதிரி என்னோட பதிவுல(தலகோனா) சொல்லி இருந்தேன். time கிடைச்சா படிசி பாருங்க.

நிஜமாவே நாமல்லாம் நமக்கே தெரியாம இயற்கையை ரொம்ப miss பண்றோம்.

இப்போதான் உங்க blog-க்கு first time வரேன். இனிமேல் தான் full-ஆ எல்லாத்தயும் படிக்கனும்.

-அருள்.

ஞானவெட்டியான் said...

அன்பு அனு,
புகைப்படம் மிகவும் அழகாக உள்ளது.
வாழ்த்துக்கள்.

தமிழ்பயணி said...

இந்த இடத்தில் ஒரு விசயம் ஒளிப்படம் எடுத்ததும் அனுவே ஆகும். ஒளிப்பட அழகிற்க்காகவும் அனுவை பாரட்டுகிறேன்.

Pavals said...

முதல் வரியெல்லாம் சரிங்க..
ஆனா
//காதலிக்க பொறுமை வேணுமா?
கல்யாணம் பண்ணி கஷ்டபடனுமா?
குழந்தைகளை படிக்க வைக்கணுமா?
வயசான காலத்தில் நல்ல உறவு ‍வேணுமா?//
இது எல்லா ஜீவராசிக்கும் உண்டான கவலையாச்சே.. என்ன பள்ளிகூடத்துக்கு போயி வரிசையில நிக்க வேண்டியதில்லை.. ஆனா தான் பெத்தத தூக்கிட்டு அலைஞ்சு,எல்லாம் சொல்லி குடுக்கனுமே.. அதுகூட படிப்பு தான.?

அப்புறம்.. போட்டா நீங்க எடுத்ததா..? அழகான லைட்டிங்.. :-)

அனுசுயா said...

பால பாரதி - /அவர் புலம்பினார்... நீங்கள்.. நையாண்டி பண்ணுகிறீர்கள்/
நான் நையாண்டி பண்ணவில்லை நிஜமான வருதத்தில் எழுதியது.

அருள் குமார் - வாங்க அருள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

/புகைப்படம் மிகவும் அழகாக உள்ளது/ நன்றி அய்யா தங்களின் பாராட்டுக்களுக்கு.

அனுசுயா said...

தமிழ் பயணி அய்யா தங்களின் விளம்பரத்திற்கு நன்றி :)

அனுசுயா said...

/இது எல்லா ஜீவராசிக்கும் உண்டான கவலையாச்சே.. என்ன பள்ளிகூடத்துக்கு போயி வரிசையில நிக்க வேண்டியதில்லை.. ஆனா தான் பெத்தத தூக்கிட்டு அலைஞ்சு,எல்லாம் சொல்லி குடுக்கனுமே.. அதுகூட படிப்பு தான.? /
அது சரி எந்த விலங்கினமாவது தனக்கு நல்ல காதலி அமையவில்லை என்றோ அல்லது திருமணத்தடை என்றோ சிறந்த படிப்பு படிக்க வசதியில்லை என்றோ தன் வாழ்வை முடித்துக் கொள்வதில்லையே? மனிதன் மட்டும்தானே அப்படி செய்கிறான்.

/அப்புறம்.. போட்டா நீங்க எடுத்ததா..? அழகான லைட்டிங்.. :) /
தெரியாத்தனமா இயற்கையா இப்படி அமைஞ்சிடுச்சுங்க.


பாரதி - வாங்க அண்ணா அது என்ன விளம்பர பாட்டுன்னு தெரியலைங்களே. சரி தல சொன்னா சரியாதான் இருக்கும் :)

சிங். செயகுமார். said...

m vaazhkka ippitimpokuthaa! varukireen konjsam neram kazhiththu

Pavals said...

//அது சரி எந்த விலங்கினமாவது தனக்கு நல்ல காதலி அமையவில்லை என்றோ அல்லது திருமணத்தடை என்றோ சிறந்த படிப்பு படிக்க வசதியில்லை என்றோ தன் வாழ்வை முடித்துக் கொள்வதில்லையே? மனிதன் மட்டும்தானே அப்படி செய்கிறான்.//

காதலி 'கரெக்ட்' பண்ற போட்டியில அடிபட்டு/கடிபட்டு சாவற விலங்கு நிறையா இருக்குதுங்க.. அதுவும் வாழ்வை முடிச்சுக்கிற மாதிரி சமாச்சாரம் தான.?

அனுசுயா said...

/காதலி 'கரெக்ட்' பண்ற போட்டியில அடிபட்டு/கடிபட்டு சாவற விலங்கு நிறையா இருக்குதுங்க.. அதுவும் வாழ்வை முடிச்சுக்கிற மாதிரி சமாச்சாரம் தான.? /
ராசா, காதலிக்காக விலங்குகள் சண்டை போட்டாலும் தற்கொலை எல்லாம் செஞ்சுக்காது. அப்புறம் இந்த தாடி வளர்க்கறது, சோகமா பாட்டு பாடறது இதுவெல்லாம் விலங்குகளுக்கு தெரியாதுங்க.

அனுசுயா said...

நன்றி திரு.சிங். செயகுமார் அவர்களே.

பாரதி - பிறர் சிரித்து மகிழும் படி
‍எழுதுவதுக் குறித்து மிக்க சந்தோசம். சிரிப்பு என்பது மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு குணமாகும்.

சிவமுருகன் said...

நல்ல கவிதை. நல்ல கரு.

மாநகரமக்களின் வாழ்க்கையை காட்டியது உங்கள் கவிதை.

இதுதான் உங்கள் பதிவிற்க்கு வரும் எமது முதல் விஜயம். பிற பதிவுகளை இன்றே படிக்கிறேன்.

அனுசுயா said...

நன்றி திருமுருகன் தங்களின் வருகைக்கு. ஆனால் நான் எழுதியது கவிதையில்லை ஏதோ கொஞ்சம் இடைவெளிவிட்டு எழுதினேன் அதைபோய் கவிதை என்று சொல்லாதீர்கள்.

ஆர்த்தி - வாங்க பின்னூட்டத்துக்கு நன்றி.

thiagu1973 said...

குரங்களை பார்க்கும்போது
கவலைகள் அதற்கு இல்லையோவென
நினைக்கிறோம்!

மனிதர்களை பார்க்கும்போது
குரங்குகள்என்ன நினைக்கும்!

நேரத்திற்க்கு சாப்பாடு-
குடியிருக்க வீடு,
உங்களுக்குஎன்ன கவலை
என நினைக்குமோ!
குரங்கைத்தான் கேட்கவேண்டும்
குரங்கின் படத்தை
பதிவுசெய்தவர்
குரலையும் பதிவு செய்தால்
நல்லது

அன்புடன்

தியாகு

அனுசுயா said...

//குரங்கின் படத்தை
பதிவுசெய்தவர்
குரலையும் பதிவு செய்தால்
நல்லது//
குரலை பதிவு செய்யலாம் என எண்ணினேன் ஆனால் தொண்டை கட்டு இருந்ததால் விட்டுவிட்டேன். அதுசரி நீங்கள் யாருடைய குரலை சொல்கிறீர்கள்.

thiagu1973 said...

பாரவாயில்லை நான் தொண்டை
நன்றாக உள்ள குரங்கிடம்
கேட்டு கொள்கிறேன்!
ஆமாம் நீங்கள் யாரை சொன்னீர்கள்!

அன்புடன்

தியாகு

பரஞ்சோதி said...

கவிதை அருமையாக இருக்குது சகோதரி.

இக்கரைக்கு அக்கரை பச்சை :)

அனுசுயா said...

நன்றி பரஞ்சோதி தங்களின் வருகைக்கு ஆனால் நான் எழுதியிருப்பது கவிதையா? வஞ்சப்புகழ்ச்சி அணி எதற்கு?

Jayakanthan - ஜெயகாந்தன் said...

நல்லா இருக்கு! (நான் பீளமேடு'ங்க!)

வெற்றி said...

அருமையான படம். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

செந்தில்நாதன் செல்லம்மாள் said...

Nalla irukkee...