Sunday, March 12, 2006

பக்தியும் மாமிசமும்

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக்
கொன்று அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும். வள்ளுவரின் வரிகள் இது. சரி மாமிசம் உண்ணாமல் இருக்க முடிவதில்லை இக்காலத்தில். ஆனால் அதற்காக நம் மக்கள் சொல்லும் காரணங்கள்தான் அதிசயமாக இருக்கிறது.

என் அலுவலகத்தில் ஒருவர் மட்டும் சுத்தமான சைவம் அதுபோக பாதிபேர் சைவமாக
நடிப்பவர்கள். எப்படியென்றால் சாதாரணமாக பேசும்போது நான் சைவம் எனக்கு அசைவம்
சுத்தமாக பிடிக்காது(வேக வைக்காமல் பிடிக்காது என்கிறார்களோ..?) என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அதுபோக வெள்ளி கிழமை, பிரதோஷம் அமாவாசை என்று பல காரணங்கள் கூறிக்கொண்டிருப்பார்கள். அதே சமயம் அலுவலகத்தில்ஏதாவது விருந்து என்று அசைவம் சாப்பிட சென்றால் மறக்காமல் அனைவரும் கட்டாயம் சாப்பிடுவார்கள். அது எந்த நாள் கிழமை என்றாலும் சரி. இதிலும் குறிப்பாக பெண்கள் (தாய்குலங்கள் மன்னிக்கவும்) இல்லாத விளம்பரம் செய்து விட்டுதான் சாப்பிட வருவார்கள்.எதற்கு இந்த அலட்டல் என்று தெரியவில்லை.

அசைவம் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டால் ஏதோ பாவ காரியம் செய்ததுபோல ஒரு
எண்ணம் நம் மக்களிடம். எந்த கடவுளும் அசைவம் வேண்டாம் என்று சொல்லவில்லை.
கண்ணப்ப நாயனார் கடவுளுக்கே மாமிசம் படைத்தார் அவருக்கும் கடவுள் காட்சியளித்து ஏற்றுக் கொண்டார். அப்படியே அசைவம் சாப்பிடுவதில்லை என்றால் எப்பொழுதும் சாப்பிடாமல் தூய சைவமாக இருப்பின் பரவாயில்லை அதை விட்டுவிட்டு இந்த கிழமையில் இந்த இந்த நாளில மட்டும் சாப்பிட மாட்டேன். எப்படி எந்த நாளில் சாப்பிட்டாலும் ஒரு உயிரை கொல்வது பாவ காரியம்தான் அதில் என்ன பெருமை குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று எனக்கு புரியவில்லை?

6 comments:

Pavals said...

//அதே சமயம் அலுவலகத்தில்ஏதாவது விருந்து என்று அசைவம் சாப்பிட சென்றால் மறக்காமல் அனைவரும் கட்டாயம் சாப்பிடுவார்கள//
ஓசியில கிடைச்சா பினாயிலயும் குடிப்பாங்கன்னு சொல்லுவாங்களே.. அந்த மாதிரி நிறையா பேரு இருக்காங்க ஊருகுள்ளார..


//குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று எனக்கு புரியவில்லை?// அதுனால தாங்க.. நான் இந்த நாள் கிழமைஎல்லாம் பார்க்கிறதேயில்லை.. நீங்க என்னைக்கு கூப்புட்டி ட்ரீட் குடுத்தாலும்.. நான் ரெடி ;-)

அனுசுயா said...

ஆமாம் இலவசம் என்றால் உயிரை கொடுக்கவும் நம் மக்கள் தயாராக உள்ளார்கள். வெள்ள நிவாரண உதவி வாங்க நம் மக்கள் செய்த உயிர் தியாகம் தெரிந்த விசயம்தானே?

Pandian R said...

தங்காச்சி,
சாப்பிட எவ்வளவோ இருக்க மிருகங்களையும் பறவைகளையும் வதைப்பானேன்.. நாகரீகம் பிறப்பதற்கு முன்புதான் வேட்டையாடித் தின்றோம். இனியாவது விளையவைத்து திங்கக்கூடாதா. எந்தப் பொருளையும் மசாலாவில் பொரட்டி எடுத்தால் அதற்கு சுவை இருக்கத்தான் செய்யும். அதற்காக அனைத்தையும் திங்க ஆரம்பித்தால்.. கொன்றுதின்னும் அசைவத்திற்கு நான் எதிரியே.

அனுசுயா said...

வாங்க அண்ணா அறிவுரைக்கு நன்றி. நானும் முயற்சி செய்கிறேன் இன்னும் சிறிது காலம் (சுமார் 40 வருடம்) கழித்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன்.

சிங். செயகுமார். said...

எல்லாம் சரியான திண்ணிகொள்ளிகளா இருக்கே ! பேஷ் பேஷ் ஊருக்குத்தான் உபதேசம் உனக்கு இல்லடா!

MyFriend said...

நல்ல ஒரு கேள்வி. :-)