Thursday, April 06, 2006
பாசம் ...............
சென்ற வருடம் இத்தாலி சென்ற போது தங்கியிருந்த இல்லத்தின் எதிர் வீட்டில் ஒரு வயதான பாட்டி குடியிருந்தார்கள். தினமும் வெளியில் கிளம்பும்போதும் திரும்பும்போதும் அந்த பாட்டியை பார்த்து ஒரு புன்னகைத்துவிட்டு செல்வது வழக்கம். அதுபோக எப்போது எங்களை சந்தித்தாலும் அந்த பாட்டி மிக அருமையாக பேசுவார்கள். இதில் கொடுமை என்னவெனில் அவருக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது. எனக்கோ கொஞ்சமே கொஞ்சம் இத்தாலி தெரியும் அவ்வளவுதான். எப்படியோ அபிநயம் முகபாவத்தில் எங்களுக்கு விசயத்தை புரிய வைத்துவிடுவார். விருப்பம் இருந்தால் மொழி ஒரு பிரச்சினையே இல்லை என்பது அங்கேதான் தெரிந்து கொண்டேன். ஒரு நாள் அந்த பாட்டியம்மாள் ஒரு மிகப் பெரிய கேக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் என்ன என விசாரித்ததில் அந்த கேக் அவரே எங்களுக்காக செய்தது என்று கூறினார். உண்மையில் அது மிக அருமையான சாக்லேட் கேக். வாழ்க பாட்டி என சொல்லிக் கொண்டே சாப்பிட்டோம்.
கடைசியில் நாங்கள் திரும்பி வரும் நாள் அன்று சொல்லி வர சென்றிருந்தோம். அப்போது அந்த பாட்டி கண்ணில் நீருடன் நீங்கள் என் பிள்ளைகளை போல உங்களை பிரிவது கடினமாக உள்ளது என்று கூறினார். அது மட்டும் இல்லை இந்தியா சென்ற பிறகு கடிதம் எழுதுங்கள் என்று அவர் இல்ல முகவரி கொடுத்தார். அந்த முகவரி என்னுடைய தொலைந்துபோன பெட்டியில் சென்றுவிட்டது நானும் மறந்து விட்டேன்.
சென்ற மாதம் எங்கள் நிறுவனத்தலைவர் இத்தாலியிருந்து வந்திருந்தார் அவர் என்னை அழைத்து "அனு, மேடம் லூயிசா உன்னை மிகவும் விசாரித்ததாக கூறினார்" என்ற போது உண்மையிலேயே எனக்கு வருத்தமாக போய்விட்டது. இத்தனை நாட்கள் மறந்து போனதற்கு.
பாசத்திற்கு நாடு, மொழி, இனம் ஒரு தடையே இல்லை என்பது உண்மையான விசயம்.
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
உண்மைதான், அன்பிற்க்கும் உண்டோ அடைக்குந் தாழ்
திருவள்ளுவரின் கூற்று என்றும் மாறுவதில்லை.
அதே வள்ளுவரின் குறள் எண் 785-ஐ படித்துப்பாருங்கள்... கோப்பெருஞ்சோழன்+ பிசிராந்தையார் விசயம் வரும்..
:)
உண்மைதான் பாலபாரதி அவர்களே நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்துபேசிப் பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமும் ஒத்த உணர்ச்சிகளே, நட்பு எனும் உரிமையைத் தத்துவிடும்.
நல்ல குறள் எடுத்து கூறியதற்கு நன்றி.
ஆமாம் அவர் பாசத்தால் உயர்ந்துவிட்டார். தற்போது உணர்ந்து அவருடன் தொடர்பு கொண்டாயிற்று.
நீங்கள் சொல்வது நிஜம்தான் அனுசுயா... எங்கு சென்றாலும் மக்கள்தான் வேறுபடுவார்களே ஒழிய மனசு வேறுபடுவதில்லை... நீங்கள் அனுபவித்த விசயத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். பிரச்சனை என்னவென்றால்... நாம் இந்த மக்களிடம் உணரும் விசயத்தை அவர்களின் சொந்த மகன் அல்லது மகள் உணருவதில்லை... இங்கே உறவு என்பதே போலியாகவும்... சம்பிராத சடங்கு போலவும் உள்ளது... ஆனால் இந்த மக்களுக்கு இந்திய மக்களின் மேல நல்ல அபிப்பிராயம் உள்ளது... கூட்டுக் குடும்பம், கலாச்சாரம் என்று நாம் இருப்பதே அதற்கு காரணம்... ஆனால் தற்போது நம் ஊரிலும் அது குறைந்து கொண்டு வருகிறது... இதைப்பற்றி விரைவில் எனது வலைப்பூவில் ஒரு பதிவு போடுவேன்...
அன்புடன்,
மனசு...
நன்றி மனசு தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். உண்மைதான் அந்நாட்டு மக்கள் தங்களின் பாசத்தை வெளிபடுத்த அன்னையர் தினம் கொண்டாடி கார்டு கொடுத்தால் முடிந்து விட்டது என எண்ணுகிறார்கள். வருங்காலத்தில் நம் மக்களும் அதேபோலதான் செய்ய போகிறார்கள் என எண்ணுகிறேன்.... :)
எனக்கு என்னவோ பாட்டிங்கள கண்டா பிடிக்கறதில்ல...உங்க பதிவ பாத்தவுடனே எங்க தப்பு பண்னறமோனு தோணுது...
உங்கள் எண்ணம் தவறு ரவி பெறியோர்களிடம் நாம் சிறிதளவு அன்பை காட்டினால் பலன் பல மடங்காக நமக்கு திரும்ப வரும்.
உன்மையான அன்பு பாசம் யாருடன் வேண்டுமனாலும் வைத்து கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துகாட்டு
நெல்லை தமிழ் : நன்றி
:)
:(
Dev : வாங்க ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க ஆனா ஸ்மைலி புரியல :)
:(
வரவேற்புக்கு நன்றி அனுசுயா...
பாசம் என்பதே இரண்டின் கலவைத் தானுங்களே... கரெக்ட்டா?
ஆமா உங்களையும் நம்ம வலைப் பக்கம் காணுமே ?
தேவ் : நன்றி மீண்டும் வந்ததுக்கு. உங்க வலைப்பக்கம் கரெக்டா வந்துட்டுதானுங்க இருக்கேன். :)
அனு ஏன் அன்பை காட்டி விட்டு பின் பலனை எதிர்பார்க்கிறீர்கள் புரியவில்லை. அன்பு மஷை போன்றது, எங்கு எப்படி தோன்றும் என யாரும் கணிக்க இயலாது, சிறிதளவு காட்டி பல மடங்கு எதிர் பார்ப்பது அன்பெனில், அன்பை எப்படி சொல்வீர்.
அன்புடன் nambiaruran manian.
hi
எப்படியாவது அந்தப் பாட்டியுடன் ஆன தொடர்பைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அன்பு கொடுக்கக் கொடுக்கப் பெருகும் செல்வம். அன்பே சிவம். சிவம் பெருக வழி தேடுங்கள். நிச்சயம் கிட்டும். எனது முன்வாழ்த்துகள்.
கனா கண்டேன் : நான் அவரிடம் இருந்து எதையும் எதிர் பாரக்கவேயில்லை. சில நாட்கள் தொடர்பு கொள்ளவில்லை என்னுதான் கூறியிருந்தேன். நீங்கள் சொல்ல வருவது எனக்கு புரியவில்லை.
ஜி ரா : வாங்க ஜிரா சார் என் வலைப்பக்கம் வந்து எட்டி பார்த்ததுக்கு நன்றி. அந்த பாட்டியுனான தொடர்பை அன்றே புதுப்பித்து விட்டேன்.
//பாசத்திற்கு நாடு, மொழி, இனம் ஒரு தடையே இல்லை என்பது உண்மையான விசயம்.//
100% உண்மை
Post a Comment