Saturday, May 13, 2006

சித்தார்த்தா......

இன்று புத்தர் பிறந்த தினம். வட இந்தியாவிலும் சீனா,ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புத்தரோட கொள்கைகள்னு பார்த்தா முக்கியமானது பிற உயிர்களுக்கு துன்பம் தரகூடாது,ஆசைதான் துன்பத்திற்கு அடிப்படை அப்டீனு சொல்லியிருக்காரு. எல்லாம் நம்ம பாட புத்தகங்களோட புண்ணியத்துல தெரிஞ்சுகிட்ட விசயங்கள். புத்த துறவிகள் வாழ்க்கைல அவங்களால முடிஞ்சவரைக்கும் பிறருக்கு உதவியா இருந்திருக்காங்க. வைத்தியம் செய்யறது, ஓவியம் வரையது அவங்கபாட்டுக்கு அமைதியா வாழ்ந்திருக்காங்க. இது போக சில துறவிகள் நல்ல பல நூல்களும் இயற்றியிருக்காங்க.
நம்ம அசோகர் (அதாங்க மயிலுக்கு மன்னிக்கவும் மையிலுக்கு ஒரு குளம் வெட்னவரு) காலத்துல புத்தரோட கொள்கைகளை நல்லாதான் வளத்துனாரு. தன்னோட மகன் மகள் எல்லாரையும் அனுப்பி புத்த மதத்தை பரப்பியிருக்காரு. அட நம்ம சிலப்பதிகாரம் மணிமேகலை காலத்திலகூட புத்த மதம் நல்லாதான் இருந்திருக்குது. இப்பவும் புதுக்கோட்டை சித்தன்னவாசல் குகைகளில் அவங்க ஓவியங்களும் கல் படுக்கை களும் இருக்குது.
விசயம் என்னனா புத்தர் பிறந்து வளர்ந்தது போதனை செய்தது எல்லாம் இந்தியாவில, ஆனா புகழ் பெற்று அது ஒரு தனி மதமா சிறந்து விளங்கறது வெளிநாட்டுங்கள்ல. இதுக்கு காரணம் என்னனே தெரியல. ஒரு வேலை அவர் தென் இந்தியாவில் பிறந்திருந்தா ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரிசையில அவரும் ஒருத்தரா ஆயிருப்பார்னு நெனக்கிறேன். எப்படியோ
இந்த ஒரு நாளாவது புத்தரைப்பற்றி நினைக்கலாம்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் எப்படி புத்தரை கண்டுக்காம விட்டுதுனு தெரியல?

26 comments:

நாகை சிவா said...

//வட இந்தியாவிலும் சீனா,ஜப்பான், சிங்கப்பூர் //
அங்கு மட்டும் இல்லை, மியான்மர், பூடான், நேபாள், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் புத்த மதத்தை கடைப்பிடிப்பர்க்கள் அனேகம். புத்த மதம் இந்தியாவில் பரவ தவறியதற்க்கு காரணம் அந்த மதத்தின் பெருபான்மையான கருத்துக்கள் இந்து மதத்துடன் ஒத்து போகின்றது. அதுக்கும் இந்து மதத்துக்கும் மிக பெரிய வித்தியாசம் பெரிதாக இல்லாது ஒரு காரணமாக இருக்கலாம் என எண்ணுகிறேன்.
அன்புடன்
நாகை சிவா

அனுசுயா said...

நன்றி சிவா தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

thiagarajan said...

hello anu

nenga sollurathu 100% real. But.........

மனசு... said...

இன்றைக்கு உலகெங்கும் புத்த கோவில்களும் சிலைகளும் இருக்கின்றன.அதிக மக்களால் பின்பற்றப்படுவது என்ற பெருமையும் இருக்கிறது.. ஆனால் புத்த துறவிகளைத்தவிர மற்றவர்கள் புத்த கொள்கைகளை கடைபிடிக்கிறார்களா என்பது சந்தேகமே.

இந்து மத இதிகாசங்களும் புராணங்களும் இதிகாசங்களும் புத்தர் சொன்ன கருத்துக்களை அடிக்கோடிட்டு காட்டி இருக்கின்றன. ஆனால் நாம் இதிகாசங்களையும் மறந்துவிட்டோம் அதில் இருந்த கருத்துக்களையும் மறந்துவிட்டோம். நாம் மெத்த படித்து மேதாவி ஆகிவிட்டோம் என்ற தலைக்கனமும் அலட்சியமுமே இன்றைய சமூக இழி நிலைக்கு காரணம் அனுசுயா. என்றைக்கு மாறும் இழிநிலைகள்???

அன்புடன்,
மனசு...

அனுசுயா said...

தியாகராஜன் - நன்றி தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

மனசு - //புத்த துறவிகளைத்தவிர மற்றவர்கள் புத்த கொள்கைகளை கடைபிடிக்கிறார்களா என்பது சந்தேகமே//
சந்தேகமே இல்லை யாரும் கடைபிடிப்பது கிடையாது. புத்தரின் கொள்கைகளை கடைபிடித்தால் உலகில் இத்தனை வன்முறைகளும் போர்களும் நடைபெற வாய்ப்பே இல்லை. நன்றி தங்களின் வருகைக்கு

ILA(a)இளா said...

//வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் எப்படி புத்தரை கண்டுக்காம விட்டுதுனு தெரியல?//
சுத்தமான தமிழ் தெற்கே இருக்கு அங்கே புத்தருக்கு நல்ல மரியாதை உண்டு.
ஆசையே துன்பம்னார்-யாரவது கேட்கிறோமா? நமக்கு சரின்னு பட்டா அது கொள்கை இல்லாட்டி கண்டுக்கிறதே இல்லை. இது மனுச இயல்புங்க

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

உண்மையில் புத்த மதம் தோன்றிய போது
நம் தேசத்தில் இந்து மதம் பரவலாக அறியப்பட்ட மதமாக இருந்தது. அப்போது அது சைவ+வைணவ மதங்களாக இருந்தது..
இவ்விரண்டு மதங்களிலும் சாதிய கொடுமைகளும் அடக்கு முறைகளும் அதிகமாக இருந்தன.. ஆனால்.. புத்த மதம் சாதிய வேறு பாடுகளை மறுதலித்து வந்தது.. சாதிகளில்ஆழமாய் ஊறிப்போன நம் மக்கள்.. புது மதத்தை ஏற்றுக் கொள்ல வில்லை... மதுரையில் எண்ணாயிரம் சமணர்களை காலி செய்த வரலாறு தமிழில் படிக்கலாமே...
அது தான் காரணமாக இருக்கும்...

Gopalan Ramasubbu said...

Dr.Ambedkar converted to Buddhism in his last days.he said he doesn't wanna die as Hindu.Our people are more caste oriented.That's why Buddhism didn't impress anyone i guess.

அனுசுயா said...

//சரின்னு பட்டா அது கொள்கை இல்லாட்டி கண்டுக்கிறதே இல்லை//
இளா சரியா சொன்னிங்க

//புத்த மதம் சாதிய வேறு பாடுகளை மறுதலித்து வந்தது//
பாலபாரதி இந்த மாதிரி கொள்கை இருந்தா அப்புறம் அரசியல் எப்படி பண்ண முடியும். அதான் துரத்திட்டாங்கனு நெனக்கிறேன்.

நன்றி கோபாலன் நம்ம வலைப்பக்கம் வந்ததுக்கு.

Muthu said...

///(அதாங்க மயிலுக்கு மன்னிக்கவும் மையிலுக்கு ஒரு குளம் வெட்னவரு)///
:-)) :-))

அனுசுயா said...

நன்றி முத்து :)

தமியன் said...

ஆழமான பதிவு.. அதிலும் உங்களின் நகைச்சுவை தனித்தன்மையை காட்டுகிறது.
தொடருங்கள்..

அனுசுயா said...

தமியன் - நன்றி தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

கொங்கு ராசா said...

14.. ஓகே..:)

barathee said...

புத்தம் என்று பார்க்கையில் அஜந்தா குகைகள் மற்றும் ஓவியங்களை நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பிரம்மாண்டமான வேலை அது.

அனுசுயா said...

ராசா : நன்றி :)))

பாரதி : தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி

நெல்லைகிறுக்கன் said...

எம்மோ அனுசுயா, பதிவு நல்லாருக்குமோ... ஏ ஆசப் படக் கூடாதுன்னு புத்தரே ஆசப் பட்டாருல்லா.. அப்போ நாம எல்லாம் எந்த மூலைக்கு... என்ன நான் சொல்லுதது சரி தான?

நெல்லைகிறுக்கன் said...

க்ட்

அனுசுயா said...

நெல்லை கிறுக்கன் : உங்க சிந்தனை நல்லா வித்தியாசமா இருக்குதுங்க ஆனா புத்தர் ஆசைபடக்கூடாதுனு சொன்னது துன்பம் தரும் ஆசைகளதான். அடிப்படை விசயமான உழைப்பது,உண்பது உயிர்வாழ்வது போன்றவற்றை இல்லைங்கோ.
உங்க நெல்லை தமிழ் அருமையா இருக்குதுங்க. நன்றிங்கோ !

சிங். செயகுமார். said...

புத்தம் சரணம் கச்சாமி!

krk said...

Two reasons for for the spread of buddhism in neighbouring countries....of india.
1. Ikkaraikku akarai pachai- so our neighbours must have envied on our societies peacefulness and must have adopted it.
2. hehehhe...Indians must have outsourced it to them....

nice blog in tamil fonts...

அனுசுயா said...

சிங் : :)
krk : அதே அதே இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ‍ரொம்ப சரி. நன்றி இந்த பக்கம் வந்ததுக்கு.

thunder nambi said...

ஏன் அனு எனது வலைக்கெல்லாம் நீங்கள் வர மாட்டீர்களா?
எனது வலை பெயரே மரத்தினடியில் மேகங்கள்.
வந்து எங்களை போன்ற புதியவர்களை ஊக்குவிக்கலாமே. உமக்கு பெண் புத்தர் பட்டம் நிச்சயம் உண்டு.
அன்புடன் நம்பி.

thunder nambi said...

புத்தனுக்கும் ஆசை உண்டு
ஆசை இல்லாமல்
வாழ வேண்டும் என்று.

நம்பி.

thunder nambi said...

புத்தனுக்கும் ஆசை உண்டு
ஆசை இன்றி
வாழ வேண்டுமென்று.

thunder nambi said...

என்ன ரொம்ப பிஸியா இருக்குறீங்க போலிருக்கு.