Sunday, May 28, 2006

நாகலிங்கம்


இந்த படத்துக்கு மேட்டர் இங்க போய் பாருங்க. இது நான் முதல்ல போட்ட போஸ்ட்டிங்கோட தொடர்ச்சினு வெச்சிக்கலாம்.இந்த மலர் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. உள்ள இருக்கற லிங்க அமைப்பை சரியா படம் பிடிக்க முடியல. இத படம் பிடிக்க தேடின தேடல் ம்ம்... மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் எங்கயும் கிடைக்கல. கடைசில ஒரு நண்பர் கும்பகோணத்திலிருந்து எடுத்து கொடுத்தாரு.படம் எடுத்து கொடுத்த நண்பருக்கு நன்றிங்கோ.

29 comments:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

பரவாயில்லை அனு!
நிறைய பூக்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள்..
பழையபதிவையும் பார்த்தேன்.
நீங்கள் சொல்லும் இந்த மலர்கள் பற்றி எல்லாம் எனக்கு எந்த வாத்தியாரும் சொல்லிக்கொடுக்கலை.. :-({ஒழுங்க ஸ்கூலுக்கு போனாத்தானே..}

வேற என்ன சொல்றது...

ஞானவெட்டியான் said...

அவரு யாருங்கோ?

Gopalan Ramasubbu said...

நாகர்கோவில்ல இருக்கும் நாகலிங்கசாமி கோவிலுக்கு போனபோது அங்க இந்த நாகலிங்கபூவ நான் பார்த்திருக்கிறேனுங்கோவ்.

அனுசுயா said...

யெஸ்.பாலபாரதி : இந்த மலர்களை பற்றி பள்ளியில் சொல்லித்தர மாட்டார்கள் நாமாக கொஞ்சம் கதை புத்தகம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

அனுசுயா said...
This comment has been removed by a blog administrator.
அனுசுயா said...

ஞானம் அய்யா : அவரு யாருங்கோ ??
.
..
...

தலைவரு ஞானம் அய்யா தானுங்கோ..

கோபாலன் : நாகர்கோவிலில் இந்த பூக்கள் இருக்கிறதா? ம் முன்பு கோவையிலேயே இருந்தது தற்போது காணவில்லை.

barathee said...

படம் மிகத் தெளிவு. பெரிய கும்பிடு, எடுத்துக்கொடுத்த அய்யாவுக்கும், பதிந்த உங்களுக்கும். தற்போது அதையே வால்பேப்பராகப் போட்டுவிட்டேன். வளர்க உங்கள் பூஞ்சேவை.

சிங். செயகுமார். said...

அனுசுயா! உங்களுக்கு எவ்வளவு பூ இத மாதிரி வேணும் சொல்லுங்கோ. உடனே அனுப்பி வைக்கின்றேன்

அனுசுயா said...

பாரதி : அண்ணை வணக்கம் அண்ணே :)

செயக்குமார் : என் பட்டியல்ல இருக்கற பழங்கால பூக்கள் டபம் இருந்தா உடனே அனுப்பிவைங்கோ நான் என் பதிவுல போட்டுடறேன்.

மனசு... said...

படம் அருமையா இருக்கு அனுசுயா. கொஞ்சம் முயற்சி பண்ணிருந்தா உள்ள இருக்கிற விசயத்தையும் படம் பிடிச்சுருக்கலாம்.

நன்று..

அன்புடன்,
மனசு

ILA(a)இளா said...

அனுசுயா, உங்களை பாராட்டியே ஆகனும். பூ வைக்கிறதையே அநாகரிகம்ன்ன்னு நினைக்கிர இக்காலத்துல உங்களுக்கு பூவ பத்தின ஆர்வம் இருக்கிறது பெரிய விஷயம்.

அனுசுயா said...

மனசு : உள்ளே இருக்கும் விசயங்களை எடுக்க அடுத்த தடவை முயற்சி செய்யணும். படம் நான் எடுக்கலீங்க அய்யா எடுத்தது அதனால பாராட்டுக்கள் அனைத்தும் அவரையே சேரும்.

இளா : எனக்கு பூ (மத்தவங்க காதுல) ரொம்ப பிடிக்கும்.... :)

thiyagu said...

மலர்கள்எப்பொழுதும் மணம் வீசி கொண்டே இருக்கின்றன
நமது அன்பும் அவ்வாறு இருந்தால் உலகில்எந்த பிரச்சனையும் இல்லை

அன்புடன்
தியாகு

நாகு said...

சென்னையில், சாலையோரங்களில் தூங்குமூஞ்சி(?) மரங்களுக்கிடையில், நிறைய நாகலிங்க பூ மரம் காணப்படுகிறது. அதனைப் போல ஒரு இன்னுமொரு மரம் காணப்படுகிறது. அது ஐந்து பூவிதழ்களைக்கொண்டது. ஒவ்வொரு இலையும் இரட்டை இலைபோன்று காணப்படும். ஒவ்வொன்றும் ஆப்பிள் வடிவத்தில் காணப்படுவதால் அதை நான் ஆப்பிளிலை மரம் என்றே பெயர்வைத்துள்ளே. சென்னையில் ஒரு பூங்காவில் உள்ளது. மார்கழி மாதத்தில் பூக்கும்.

Syam said...

பென்களும் பூக்களும் பிரிக்க முடியாத ஒன்று. பழனி, பேரூர் கோவில்களுக்கு செல்லும் போது எல்லாம் இந்த பூவை பார்த்து ஆச்சர்யப்படுவேன், நல்லா போட்டோ புடிச்சிருக்கீங்க அம்மினி

Kuppusamy Chellamuthu said...

அனுசுயா, பொட்டானிக்கல் கார்டன்ல தேடிப் பாத்தீங்களா? மருதமலை போற வழியில ஒரு பார்வை விட்டுட்டு போயிருக்கலாமே??

அனுசுயா said...

தியாகு : மலரின் மணத்தையும் அன்பையும் இணைத்து விட்டீர்கள். நன்றி

நாகு : சென்னை சாலைகளில் இந்த மரம் உள்ளதா? புதிய தகவல். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆப்பிளிலை மரம் என்ன வென்று தெரியவில்லை. பார்ப்போம் யாராவது தெரிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

Syam : பெண்களையும் மலர்களையும் பிரிக்க முடியாது ஆனால் இங்குள்ள பின்னூட்டம் அனைத்தும் ஆண்களிடமிருந்துதான் வந்துள்ளது. நன்றி முதல் வருகைக்கு!

Kuppusamy : அய்யா உங்க கருத்து சரி ஆனால் பொட்டானிக்கல் கார்டன் நல்ல நிலையில் இல்லை. அதனால் செல்லவில்லை. நன்றி முதல் வருகைக்கு.

நெல்லைகிறுக்கன் said...

நாகலிங்கப் பூவப் பத்தி கேள்விப் பட்டுருக்கேன். எம்மோ உங்க புண்ணியத்துல அது எப்பிடி இருக்கும்னு இன்னைக்குத் தெரிஞ்சிக்கிட்டேன். நீங்க ச்சொல்லுத மத்த எல்லாப் பூவையும் பாத்திருக்கேன். அந்தி மல்லின்னு ச்சொல்லுதீயளே அது அந்தி மந்தாரை தான?

Gayathri Chandrashekar said...

Hi Anusuya,
Mudhal muraiyaaga thangal valaikku vandhen.Yennai pUkkalaal varaverththeergal! Enakku "Nagalinga pU" enraal migavum pidikkum.Enga Ur (Rasipuram near salem) Sivan kovil nyabagam vandhadhu!Ange Indha maram irukku.Idhai poojai prasaadhamaa tharuvaanga..Innum pUkkal patri therindhal padhivu seyyungal..PUkkalin rasigai kaaththukkondu irukkiren

அனுசுயா said...

நெல்லை கிறுக்கன் : நீங்க கேட்டதால நான் ஒரு ஆராய்ச்சியே பண்ணி கடைசில தெரிஞ்சது என்னனா? யாருக்கும் அந்தி மந்தாரைக்கும் அந்தி மல்லிக்கும் உள்ள சம்பந்தம் தெரியவேயில்லை.

அனுசுயா said...

காயத்ரி சந்திரசேகர் : நன்றி முதன்முதலா என் வலைப்பக்கம் வந்ததுக்கு.

thunder nambi said...

ANUSUYA, I DON'T KNW HOW TO PUT MY PADHIVUGAL IN THE BLOG EVEN AFTER READING UR HELP MENU I AM SAD.

thunder nambi said...

SENGANDHAL MALARIL IRUNDHU CYANIDE THAYARIKALAMAM AVVALAVU KODIYA VISHAM UDAYA POO ADHU, ADHANALDHANO PENGALIN VIRALGALUKKU VUVAMAYANADHO ANUSUYA?

இராம் said...

அனுசுயா இந்த பூவை நான் மதுரை தெப்பக்குளத்தில் நடுவில் இருக்கும் மண்டபத்தில் பார்த்திருக்கிறேன்.இதை படம் எடுத்தது நீங்களா.... அடா சாமிகளா அம்மணி படம் எடுங்கறாங்க

நாமக்கல் சிபி said...

//எனக்கு பூ (மத்தவங்க காதுல) ரொம்ப பிடிக்கும்.... :)
//

அதுசரி!

நாகு said...

சென்னையில் நாகலிங்கப்பூ பத்துரூபாய்க்கு மூனுங்கோவ்!!!!! ஆனால் கொஞ்சம் முயற்சி செய்தால் இலவசமாகவே பறித்துக்கொள்ளலாம், ஏனென்றால் சென்னைக் கே.கே.நகரில் ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன.

அனுசுயா said...

நம்பியாரூரான் : செங்காந்தழ் பூவிலிருந்து சையனைட் தயாரிக்கறாங்கங்கற விசயம் புதுசுங்க. ஆனா பெண் களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இருக்குனு சொல்லறது :(

ராம் : ஏனுங்க படம் புடிக்கறது ஒரு தப்புங்களா? இப்டி சொல்லிப் போட்டீங்க.

அனுசுயா said...

நாமக்கல் சிபி : :)))))


நாகு : தகவலுக்கு நன்றிங்க. ஆனா கோவையில் காண்பதே அரிதாய் இருக்குது.

Anonymous said...

From the time I heard about this poo (from Chandilyan's "Yavana Rani," I've been trying to see this flower. But unga punniyathula innaikku I saw the flower. Rombha nanringo!!!