Monday, June 05, 2006

ஸ்மைல் ப்ளீஸ்

கொஞ்சம் சீரியஸா எழுதறேன்னு சிலரும் கொஞ்சம் ஆழமா (எவ்வளவு அடினு தெரியல?) எழுதறேனு சிலரும் சொன்னதால சும்மா சிரிக்கறா மாதிரி (நகைச்சுவை மாதிரி) எழுதலாமேனு யோசிச்சப்ப நமக்கு வர குறுஞ்செய்திகள (SMS) போடலாம்னு தோணிச்சு அதான் இது,

முதல்ல குணா பட பாடல் ஒன்னு,

கண்மணி அன்போடு ப்ரெண்ட் நான் அனுப்பும் மெஸேஜ், இல்ல sms, வேணா மெஸேஜ்னே இருக்கட்டும்
பொண்மணி உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா?
என் செல்லில் இங்க கிடைக்குதே!
உன்னை எண்ணி பார்க்ககையில் மெஸேஜ் கொட்டுது, அதை அனுப்ப நினைக்கயில் பாலன்ஸ் முட்டுது,
" மனிதர் புரிந்து கொள்ள இது மொக்க மெஸேஜ்
அல்ல அல்ல அல்ல ........ ‍
அதையும் தாண்டி மட்டமானது "
அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல, என் செல்லுல மட்டும் பாலன்ஸ் நிக்கறதேயில்ல‍ை.

அடுத்தது ஒரு ஜோக், ஒரு சின்ன பையன் வீதில
நடந்துபோகும்போது தும்மிகிட்டே போனான்.
அது ஏன்?
ஏன்னா அவன் பொடி பையன். :)

அப்புறம் ஒரு தத்துவம்,
1. முதல்வரே ஆனாலும் முதல் சீட் டிரைவருக்குதான்.
2. ட்ரெயின் டிக்கட் எடுத்து ப்ளாட்பார்ம்ல உக்காரலாம்
ஆனா ப்ளாட்பார்ம் டிக்கட் எடுத்துட்டு ட்ரெயின்ல
உர்கார முடியாது
3. என்னதான் கராத்தேயில ப்ளாக் பெல்ட்
எடுத்திருந்தாலும், சொறி நாய் துரத்துனா ஓடித்தான்
ஆகனும்.


பின்குறிப்பு : முக்கியமான விசயம் தயவுசெய்து மேலே உள்ளதெல்லாம் படிச்சிட்டு கொஞ்சம் சிரிச்சிருங்க. இதெல்லாம் ‍‍ஜோக்னு நம்பி அனுப்பி வெச்சிருக்கிற என் நண்பர்களுக்காக....... :)

18 comments:

Gopalan Ramasubbu said...

//*கொஞ்சம் சீரியஸா எழுதறேன்னு சிலரும் கொஞ்சம் ஆழமா (எவ்வளவு அடினு தெரியல?*//

பூக்கள்,பக்தி,பாசம்னு மென்மையாதான எழுதறீங்க?(எவ்வளவு மென்மைனு கேக்காதீங்க;)?

S. அருள் குமார் said...

ஏங்க.. ஏன் இப்படி...?! நல்லாத்தானே எழுதிகிட்டிருந்தீங்க..? :)

நெல்லைகிறுக்கன் said...

எம்மோ என்னாச்சு உங்களுக்கு? செட்டப்பு கெட்டப்பு எல்லாத்தயும் மாத்திட்டீயளே? சிரிக்க வைக்கிறதும் பெரிய விசயம் தான். சிரிக்க வைச்சு சிந்திக்கவும் வையுங்க...

நாமக்கல் சிபி said...

//பின்குறிப்பு : முக்கியமான விசயம் தயவுசெய்து மேலே உள்ளதெல்லாம் படிச்சிட்டு கொஞ்சம் சிரிச்சிருங்க. இதெல்லாம் ‍‍ஜோக்னு நம்பி அனுப்பி வெச்சிருக்கிற என் நண்பர்களுக்காக....... :)//

இந்த ஜோக் நல்லா இருந்ததுங்க!

அனுசுயா said...

கோபாலன் : நான் சீரியஸா எழுதலைனு சொன்னதுக்கு நன்றிங்க :)

அருள்குமார் : அப்ப இத்தன நாள் நல்லா எழுதிட்டிருந்தேனா? நன்றிங்கோ !

நெல்லை கிறுக்கன் : செட்டிங் மாருனதுக்கு காரணம் ஞாயிற்று கிழமை பொழுது போகலைங்க. வேற ஒன்னும் பெரிசா காரணம் இல்லீங்க

நாமக்கல் சிபி : வாங்க சார் முதல் முதலா நம்ம வலைப்பக்கம் எட்டி பாத்துட்டீங்க. நன்றி. பெரியவங்க நீங்க சொன்னா சரிதானுங்க. எப்படியோ கடைசில சிரிக்க வெச்சுட்டேன் :)

ILA(a)இளா said...

//என் செல்லுல மட்டும் பாலன்ஸ் நிக்கறதேயில்ல‍ை//
உக்காந்துகிட்டா இருக்கு?

//"ஸ்மைல் ப்ளீஸ்" //
ஏதொ பூ, பாசம்ன்னு ஒரே செண்டியா நல்லாத்தான் இருந்தது, அப்புறம் ஏன் இப்படி.

அனுசுயா said...

இளா : //என் செல்லுல மட்டும் பாலன்ஸ் நிக்கறதேயில்ல‍ை//
உக்காந்துகிட்டா இருக்கு?//
இத தான் நக்கல்னு சொல்றது.
கடைசில என்ன செண்டினுட்டீங்களே :(

மனசு... said...

அதுசரி எதோ தமாசு சொல்லப் போறேனு ஆரம்பிச்சிங்க கடைசில சொல்லாமலே முடிச்சுட்டிங்களே அனுசுயா... மறக்காம அடுத்த பதிவுல எழுதிருங்க...

மனசு...

Syam said...

நல்லா இருந்தது...முக்கியமா குணா...சத்தியமா சிரிச்சேன் :-)

அனுசுயா said...

மனசு : ..... :(

Syam : நன்றி ஷ்யாம் நீங்க ஒருத்தராவது சிரிச்சீங்களே அதுவரைக்கும் பரவாயில்லை. :)

மு.கார்த்திகேயன் said...

Chemma kadinga Anu..muthaalla nalla oru doctor-ai parkanum..

மு.கார்த்திகேயன் said...

நன்றி அனுசூயா..என் நண்பனை உங்களின் இந்த பதிவின் மூலம் கண்டுகொண்டேன்..என் நண்பன் வேறு யாருமல்ல..மனசு தான்..

அனுசுயா said...

கார்த்திகேயன் : இரு நண்பர்கள் சந்திக்க என் வலைபதிவு காரணம் என்பதில் மிக்க மகிழ்ச்சி :)

Dubukku said...

//அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல, என் செல்லுல மட்டும் பாலன்ஸ் நிக்கறதேயில்ல‍ை//

:)))

Delhi_tamilan said...

kadacila sonnadhudan top, let me now read your other posts...

ambi said...

Hahaa, really a good one..
keep rocking..

அனுசுயா said...

dubukku, delhi_ thamilan & Ambi : Thanks for comments :)

செந்தழல் ரவி said...

மேலும் சில எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ் ப்ளீஸ்...