Thursday, June 29, 2006

என்னை கவர்ந்த ஆறு

ஆறு பதிவுக்கு என்னை உண்மை, இளா ரெண்டு பேரும் அழைச்சிருக்காங்க. சரி நமக்கு பிடிச்ச ஆறுகளை பற்றி எழுதலாம்னு (யோசிச்சு) எழுதியிருக்கேன்.

1. சியன்னா - பிரான்ஸ்
இந்த ஆறு பிரான்ஸ்ல ஓடுது. ஈபிள் டவர் மேல இருந்து பாக்கும்போது ரொம்ப அழகா இருக்குது. அதவிட ஆத்துமேல அவங்க கட்டியிருக்கற பாலங்கள் தான் சூப்பர். எவ்வளவு அழகழகா கட்டியிருக்காங்க. பார்க்க பார்க்க அழகா இருக்குது. பல முக்கியமான இடங்கள் எல்லாமே இந்த ஆத்தங்கரையோரத்துலயேதான் இருக்குது. இரவு நேரத்துல படகுல போய் ஊர் சுத்தி பாக்கலாம் ரொம்ப நல்லாயிருக்கும்.

2. போ - இத்தாலி

இந்த ஆறு இத்தாலில ஓடுது. நம்ம ஊர் காவிரி மாதிரி அந்த ஊருக்கு. நான் தங்கியிருந்த பெராரா நகர்ல இந்த ஆறு ஓடுது. தினமும் என் டைம் பாஸ் இந்த ஆத்த வேடிக்கை பாக்கறதுதான். ஊர் பெரிசாயிருச்சுங்கறதுக்காக ஆத்தையே கொஞ்சம் தள்ளி வெச்சிருக்காங்க.


3. கங்கை - இந்தியா
இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலும் கட்டுரைகளிலும் படிச்சு படிச்சு கங்கை மேல ஒரு பெரிய மரியாதையும் பார்க்கனும்கற ஆவலும் அதிகமா இருக்கு. பார்க்கலாம் எதிர்காலத்தில் பார்க்க முடியுதானு.

4. காவிரி - கர்நாடகம்
முதன் முதலா காவிரிய சின்ன வயசுல கர்நாடகா சுற்றுலா போனப்போ ஸ்ரீரங்க பட்டினம்னு ஒரு இடத்துல பாத்தது. அப்ப எனக்கு ஒரே ஆச்சரியம் இவ்ளோ தண்ணியானு. அது வரைககும் நான் இவ்வளவு பெரிய ஆத்த பாத்தத‍ே இல்லை. இங்க கரை அகலமா இருக்கும் அதுல மீன் துள்ளி விளையாடிட்டு இருக்கும். சின்ன வயசுல பார்த்ததாலே அப்டியே மனசுல பதிஞ்சிடுச்சு.

5. வைகை - மதுரை
"வைகை நதியோரம் பொன்மாலை நேரம்... " அப்படீங்கற பாட்டு ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான் எனக்கும் வைகைக்கும் உள்ள உறவு. எப்டியோ ஆறு ஆறுகளைப்பற்றி எழுதனுமே கணக்குக்காக இத சேர்த்திட்டேன். :)

6. நொய்யல் நதி - கொங்கு நாடு
எங்க ஊர்ல இருக்கற ஒரே ஆறு இதுதான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இருக்கறது. எனக்கு தெரிய இந்த ஆத்துல தண்ணிய பார்த்ததே இல்லை.
நொய்யலை காப்பாத்த இப்ப சிறுதுளினு ஒரு அமைப்பு ஏற்பாடு பண்ணி தூர்வாறி, நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் பண்ணி எப்டியோ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் தண்ணி வர வழைச்சிட்டாங்க. வாழ்க சிறுதுளி. வெளி நாடுகள்ள ஆறு களை அவங்க மிக மிக சுத்தமா கரை கட்டி பராமரிக்கறாங்க. ஆத்துல ஒருத்தரும் குளிக்கறதோ, துவைக்கறதோ, இறங்கி விளையாடறதோ இல்ல. அனுபவிக்க தெரியாதவங்க. நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம். அப்படிபட்ட ஆறுகளை முடிஞ்சவரைக்கும் குப்பைகளை போட்டு நிறைக்காம இருந்தாலே போதும்.

நான் அழைக்கும் ஆறு பேர்,
1. மனசு
2. பரத்
3. தியாகு
4. கோபாலன்
5. நெல்லை கிறுக்கன்
6. காயத்ரி

31 comments:

barath said...

//நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம். அப்படிபட்ட ஆறுகளை முடிஞ்சவரைக்கும் குப்பைகளை போட்டு நிறைக்காம இருந்தாலே போதும்.//

True....
kadaiseela karuthu vera solliteenga :)
hi naanthaan firstu

நாகை சிவா said...

//இப்ப சிறுதுளினு ஒரு அமைப்பு ஏற்பாடு பண்ணி தூர்வாறி, நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் பண்ணி எப்டியோ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் தண்ணி வர வழைச்சிட்டாங்க. //
சிறுதுளி பெயர் ரொம்ப நல்லா இருக்குங்க. உண்மையில் பாராட்ட பட வேண்டிய விசயம். இந்த அமைப்பை பற்றி எதிலோ படித்த மாதிரி ஞாபகம்.

//அதவிட ஆத்துமேல அவங்க கட்டியிருக்கற பாலங்கள் தான் சூப்பர்//
பிரான்ஸ்ல,நீங்க சொன்ன இந்த ஆறை நானும் பார்த்து இருக்கேன். ஆனால் படகில் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அங்கு இருந்த பாலத்தில் ஒரு நடை நடந்து வந்தோம்.

Gopalan Ramasubbu said...

நொய்யல்ல நல்ல தண்ணியா!!! நெசமாதாஞ் சொல்றீங்ளா? நம்பவே முடிலீங்கோவ்

மனசு... said...

நல்ல பதிவு அனு, ம்ம்ம் நீங்க சொல்றது நிஜம்தான். பாரீசின் சியன்னா அழகுதான். அதுவும் இரவு நேரத்தில ஐபில் டவர்ல இருந்து பாத்துக்கிட்டே இருக்கலாம். இவ்வளவு ஆற்றை பற்றி சொன்னிங்களே கடைசில எல்லைகளை தாண்டி ஓடிட்டு இருக்கிற ரைன் (Rhein) பத்தி சொல்லவே இல்லை பாத்திங்களா...?

அன்புடன்,
மனசு...

Syam said...

ஏங்க உங்க பங்குக்கு ஆறு பத்தி போட்டுட்டீங்க.. சிறுவானிய விட்டுட்டீங்களே...ஐயோ நொய்யல சுத்தம் பன்னீட்டாய்ங்களா எவ்வளவு அழகா கலர் கலரா தண்ணி போகும் :-)

ஆழியூரான். said...

வணக்கம்... அடுத்த ஆறு பேரை அழைத்து விடுங்கள்.. இல்லாவிட்டால் யாழிசைத்தாத்தா வந்து புலம்பப் போகிறார்...

அனுசுயா said...

பரத் : சும்மா கடைசில ஒரு கருத்து சொல்லி முடிச்சிருக்கேன். உடனே கிண்டலா?

நாகை சிவா : சிறுதுளி அமைப்பு இப்ப ரொம்ப நல்லா வளர்ந்து வருதுங்க. நொய்யலை காப்பதுதான் அவங்களோ முக்கிய பணி. அதுவும் வனிதாங்கற ஒரு பெண்தான் தலைமையேற்று நடத்தறாங்க

அனுசுயா said...

கோபாலன் : நிசமாவே நொய்யல் இப்ப சுத்தமாயிட்டு வருதுங்க. நீங்க ஊருக்கு வரும்போது போய் பாருங்க கட்டாயம் மாற்றம் தெரியும்.

மனசு : ரைன் நதிய பத்தி எனக்கு ஒன்னுமே தெரியாதுங்க. அது மட்டும் இல்ல இந்த ஆறுகளை நான் நேர்ல பாத்து ரசிச்சதால எழுதியிருக்கேன்.

அனுசுயா said...

Syam : சிறுவாணிங்கறது ஆறு இல்லீங்க அது ஒரு மலை அருவியுடன் இணைந்த அணைக்கட்டு அவ்வளவுதான்.

ஆழியூரான் : நன்றி மத்தவங்கள அழைக்க மறந்திட்டேன். இப்ப அழைச்சாச்சு. :)

Syam said...

என்னங்க இப்பிடி சொல்லீட்டீங்க, பேரூர் பக்கத்துல ஒரு ஆறு ஓடுது அத அந்த ஊர் மக்கள் சிறுவானினு தான் சொல்ராங்க... ஒரே கன்பீசன் :-)

இராம் said...

அனுசுயா எங்க ஊரு மதுரை வைகை பத்தி ஒன்னு ...
இப்போ அது ஒரு மதுரையின் அறிவிக்கபடாத கூவம்.... :-(

தேவ் | Dev said...

சிங்காரமாம் ஊரு அதுக்கு சென்னையின்னு பேரு
ஊரைச் சுத்தி ஓடுதுய்யா கூவம்ன்னு ஆறு..

கூவம்ன்னு பேரைச் சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும்

சூப்பர் ஸ்டாரின் இந்தப் பாடல் பொருளான எங்கள் சென்னையின் கூவம் ஆற்றினை மறந்துட்டீங்களே:)

அனுசுயா said...

Syam : பேரூர் பக்கத்துல ஓடறது நொய்யல் நதிதானுங்க. சிறுவாணினு தனியா ஒரு ஆறு கிடையாதுங்க.

ராம் : மிகவும் வருந்த வேண்டிய விசயம் ஆனால் பொது மக்கள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி நதியை மேம் படுத்தலாம். அல்லது மேலும் பாழ்படுத்தாமலாவது இருக்கலாம்.


தேவ் : கூவமும் ஒரு நாள் தூய்மையாகும் என எண்ணுவோம். அப்போது அதை பற்றி ‍எழுதலாம். :)

கைப்புள்ள said...

//இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலும் கட்டுரைகளிலும் படிச்சு படிச்சு கங்கை மேல ஒரு பெரிய மரியாதையும் பார்க்கனும்கற ஆவலும் அதிகமா இருக்கு. பார்க்கலாம் எதிர்காலத்தில் பார்க்க முடியுதானு.//

நான் பாத்து இருக்கேன். கடும் கோடை மாதங்களிலும் ஐஸ் தண்ணி போல் இருக்கும் கங்கையின் நீர். ஹரித்துவாரில் கங்கையில் இறங்கும் போது குளிரில் வெடவெடவென உடம்பு நடுங்கும். குளித்து முடித்ததும் கிடைக்கும் புத்துணர்ச்சி ஒரு ஆனந்தமான அனுபவம்.

நானும் உங்களை ஆறு பதிவு போட கூப்பிட்டிருக்கேங்க. என்ன ஒன்னு? எனக்கு முன்னாடியே நீங்க போட்டுட்டீங்க.

http://kaipullai.blogspot.com/2006/07/blog-post.html

ambi said...

//நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம்.//

it's a fact.. another good post from u. Aaru - padam review kudupeengaloonu nenachen. :) jus kidding.

அனுசுயா said...

கைப்பு : நன்றி என்னை ஆறு பதிவுக்கு அழைத்ததற்கு.
கங்கைய பத்தி இப்டிதான் பல பேரு சிறப்பா சொல்லி சொல்லி அதை பாக்கனும்கற என் ஆவலை அதிகப்படுத்தறாங்க. பார்ப்போம் எதிர்காலத்தில்.
நன்றி முதன் முதலா என் வலைப்பக்கம் வந்ததற்கு

அனுசுயா said...

அம்பி : நல்ல பதிவுனு சொன்னதுக்கு நன்றிங்க

நெல்லைகிறுக்கன் said...

கொடுத்து வச்ச ஆளு நீங்க. நெறய ஆத்த நேர்ல பாத்திருக்கீய... நம்ம வத்தாத ஜீவ நதி தாமிரபரணிய விட்டுட்டீயளே.
ரொம்ப நன்றிம்மோ நீங்க என்ன ஆறு பதிவு போடச் சொல்லிக் கூப்டதுக்கு. வேல விசயமா சிட்னிக்கு வந்திருக்றதால ரெண்டு வாரமா எழுத முடியல. கூடிய சீக்கிரம் ஆறு பதிவு போட்டுருதேன்.

இளவஞ்சி said...

நொய்யல்ல தண்ணியா? அதுவும் நல்லத்தண்ணியா?!!!

நானெல்லாம் அந்தக்காலத்துல் திருப்பூரு சாயப்பட்டரை கலங்கல் மட்டுமே வந்த நொய்யல்லயே முங்குநீச்சல் போட்டவன் :)))

நல்லத்தண்ணின்னா கேக்கவே சந்தோசமா இருக்கு! வாழ்க சிறுதுளி!!!

மு.கார்த்திகேயன் said...

Anu, romba unmaingka, neenga nachchunnu chonna last point.. aaru aaru nnu ellorum chumma post panranga..naanum kooda.. neenga thaan athulaiyum oru karuththu solli karuththu kanthasamy akierukeenga.. :-))

அனுசுயா said...

நெல்லை கிறுக்கன் : தாமிரபரணி ஆறு எங்க ஓடுதுங்க. நான் இதுவரைக்கும் பாத்தது இல்ல அதான் அத பத்தி எழுதலீங்க. ஆறு பதிவு மெதுவா போடுங்க ஒன்னும் அவசரம் இல்லை.

அனுசுயா said...

இளவஞ்சி : வாங்க இளவஞ்சி முதன்முதலா என் வலைப்பக்கம் வந்திருக்கீங்க. பின்னூட்டத்துக்கு நன்றிங்க.
//திருப்பூரு சாயப்பட்டரை கலங்கல் மட்டுமே வந்த நொய்யல்லயே முங்குநீச்சல் போட்டவன்//
இப்ப பரவாயில்லைங்க கொஞ்சம் முன்னேறியிருக்குங்க. ஒரத்துப்பாளையம் அணை தண்ணிய ‍வெளியேத்தீட்டாங்க.
எல்லாம் சிறுதுளியின் முயற்சிதானுங்க.

அனுசுயா said...

கார்த்திகேயன் :
//karuththu solli karuththu kanthasamy akierukeenga//
கருத்து சொன்னா பெரியாளா ஆகலாம்னுதானுங்க.
அதுக்காக கருத்து கந்தசாமி ரேஞ்சுக்கு ஏத்தீட்டீங்களே. :(

barath said...

enna aachu?romba naala aalaye kaanom?

மங்கை said...

கோயமுத்தூருங்களா..

sorry இப்போதான் படிச்சேன் இந்த பதிவ..

கலக்கல் பதிவுங்கோய்...

மேட்டுப்பாளையம்.. பவானி ஆத்த நம்ம ஊர் லிஸ்ட்லே சேதிக்கலாமே plsss

மங்கை

சேதுக்கரசி said...

நீண்ட விடுமுறைல இருந்ததால இன்னிக்குத் தாங்க கைப்புவோட 6 பதிவிலிருந்து உங்க 6 பதிவுக்கு ஒரு விசிட் வந்து பார்த்தேன். உங்க பதிவுல பின்னூட்டமிட்டவங்க பலருக்கும் நொய்யல்ல (நல்ல)தண்ணி வருதான்னு ஆச்சரியம் போலிருக்கு..

விடுமுறைல கோயமுத்தூருக்குப் போயிருந்தப்ப தெரியவந்ததுங்க.. "நொய்யலுக்கு நூறு" அப்படின்ற இந்த சிறுதுளித் திட்டம் பிச்சிக்கிட்டுப் போச்சாம். தமிழ்நாட்டில் சிறுதுளி இயக்கத்தின் மாபெரும் வெற்றியே "நொய்யலுக்கு நூறு" தான்னு கூட சொல்றாங்க. ஒவ்வொரு நன்கொடையாளியிடமிருந்தும் வெறும் நூறு ரூபாய் வாங்கினாலே போதும், இப்படிச் சிறுகச் சிறுகப் பணம் சேர்த்தாலே நொய்யலை செழிக்கச் செய்யலாம்னு தான் இந்தத் திட்டம் உருவாச்சாம்.

அப்புறம்.. நொய்யல் பத்தி ஒரு வலைப்பூவும் ஒரு பிரத்தியேகப் பதிவும் பார்த்ததும் அதன் சுட்டியை இங்கே போடணும்னு தோணிச்சுங்க:

நொய்யல் நதிக் கரை:
http://noyyal.blogspot.com/2006/11/blog-post.html

கார்மேகராஜா said...

namma uurla ippa thanni pookuthunga!

பெத்த ராயுடு said...

//1. சியன்னா - பிரான்ஸ்//

அது வந்துங்க சேன் அல்லது சேய்ன் என அழைக்கப்படுகிறது.

நொய்யலைப் பற்றியும் சிறுதுளியைப் பற்றியும் எழுதியதற்கு மிக்க நன்றி.

விசு said...

அம்மனி கோயமுத்தூருங்களா..

இப்போதான் இந்த பதிவ படிச்சேன் ...

4 மாசத்துக்கு முன்னால‌ விடுமுறைல கோயமுத்தூருக்குப் போயிருந்தப்ப "நொய்யலுக்கு நூறு" அப்படின்ற இந்த சிறுதுளித் திட்டத்தித்கு நானும் என்னால் முடித்ததை பாகிர்த்தேனுங்க குடும்ப‌த்தோடு...

ஆனா நம்ம ஆத்துல தண்ணிய போய் பார்க்க தான் முடியலைங்க...

போன‌ மாச‌ம் ந‌ம்ம ஊர்ல‌ ந‌ல்ல‌ ம‌ழை வ‌ந்தப்போ, ஆத்துல தண்ணி வந்த‌துன்னு கேள்விப்ப‌ட்டேன்....

Rasukutti said...

siruthulli amaipula irukuravanga yellorume antha noiyel nathiya masupaduthuravangathan. yeanna antha siruthulli amaipa uruvakanavanga yellam yarna LMW charman,pannari sugars charman, innum yearalamana textilemills owners ivangathan antha amaippa uruvakanunga. muthilil intha nathi masupada karaname ivangathan. aanal ippa oru amaippa uruvakki makkalkittayum govt-kittayum amount vangi ivanga sutthapaduratha soluranga. muthalil noiyela kalukura ivangaloda factory kalivukalai nirathattum athanpiragu athanpiragu antha aaru oravalovu sutthamaiyudum. naama oru nallathai soluromna muthalil naama athai kadaipidikanum.
ageve siruthulli amaippu veru oru nokkathukaga uruvanathuthan. yeamarupavar irukumvarai yeamatrupavar irunthukonde iruppar.

.:: மை ஃபிரண்ட் ::. said...

குசும்புங்க உங்களுக்கு. :-))))