மாற்றான் தோட்டத்து மல்லிகை மணப்பதை போல அடுத்த வீட்டு அல்லியும் அழகாகதான் இருக்கிறது.
ஆபீஸ் பக்கத்து வீட்டுல இந்த அல்லி செடி வெச்சிருக்காங்க அதுவும் தினம் தினம் அழகா பூ விட்டுகிட்டு இருக்குது. உடனே போட்டோ பிடிச்சு போட்டாச்சு. ஆனா ஒரு சந்தேகம் இந்த அல்லியும், குமுதமலர் (குமுதவள்ளி இல்லீங்க) அப்டீனு சொல்லறதும் ஒன்னுதானா இல்ல வேற வேறயா?. தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கறேன்.
21 comments:
அல்லி என்பதே வெள்ளை நிறம் உடையதுங்க...அல்லியோட பேசிக் குவாலிபிகேஷனே பால்வெள்ளை நிறம் தான்...ஆங்கிலத்தில் லில்லி சரியா...நீங்கள் போட்டிருக்கும் படம் அனடோனியா கிளாராசனின் என்ற குரோட்டன்ஸ்...
http://home.earthlink.net/~bjshibata/images/photo/calla%20lilly--san%20mateo%2012-01.JPG
இது தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக லில்லி...
அன்புடன்,
செந்தழல் ரவி
அடுத்த வீட்டு அல்லி நிஜமாவே அழகாத்தான் இருக்குதுங்.கோயம்புத்தூர்லயா படம் பிடிச்சீங்க?
அட கடவுளே இது அல்லி பூ இல்லையா. நான் இதுதான் அல்லினு இத்தன நாள் நெனச்சிட்டிருந்தேனே.
....... :(
கோபாலன் : ஆமாங்க இது கோயமுத்தூருல எடுத்ததுதானுங்க.
கோவை அல்லி அப்படின்னு சொல்லலாம்...இல்ல்லையா...:)
//குமுதமலர் (குமுதவள்ளி இல்லீங்க)//
இதெல்லாம் கொஞ்சம் ஓவரு.. ஆமா..
:)
சரி விடுஙக அல்லியோ கில்லியோ அழகா போட்டோ புடிச்சு இருக்கீங்க :-)
ரவி,
இதுநாள் வரை தாமரை மலர் போல் உள்ள வெள்ளைப் பூவைத்தான் அல்லி என்பதாக சொல்லித்தந்தார்கள். தாங்கள் கொடுத்துள்ள பூவில் ஓரிதழ்தானே தெரிகிறது..
சரி. என்ன பூவாய் இருந்தா என்ன. கலக்கலான படம். மிகத் தெளிவாய் உள்ளது.
அழகுக்குப் பெயர் என்னவாக இருந்தால் என்னங்க :)
ராசா : சரி சரி விடுங்க... :)
Syam : படம் எடுத்திருக்கேன்னு சொல்லியிருக்கீங்க நன்றிங்கோ
பாரதி : எனக்கும் அதே சந்தேகம்தான் அல்லினா பல அடுக்கு இருக்கும்னுதான் படிச்சிருக்கேன். பார்ப்போம் யாராவது நாலும் தெரிஞ்சவங்க விளக்கறாங்களானு.
அருள்குமார் : நன்றி
போட்ட புடிக்கிறதுல.. இந்த ஆர்வமான அம்மணியா நீங்க.. நல்லது.. கோமராவோடவே சுத்திகினு இருப்பீங்களா..?
//குமுதமலர் (குமுதவள்ளி இல்லீங்க) //
கோவை குசும்பு... :-)
வயசான காலத்துல பூ பேர் எல்லாம் மறந்து போயிடுச்சு..
படம் நன்னா இருக்கு
யாழிசை செல்வன் : போட்டோ புடிக்குறதுல கொஞ்சம் ஆர்வம்தானுங்க. அதுக்காக கேமராவும் கையுமாவா சுத்த முடியும். :)
ஜி.பாலாஜி : முதன்முதலா என் வலைப்பக்கம் வந்திருக்கேள். நன்றிங்கோ
Ammu : Thank u :)
சரி அடுத்த படம் போடுங்க எழுதறுதுனாதான் கஷ்டபட்டு யோசிக்கனும்...போட்டோ போடுறதுக்கு என்ன... :-)
Ashok : Thank u
ஷயாம் :
//எழுதறுதுனாதான் கஷ்டபட்டு யோசிக்கனும்...//
கண்டுபிடிச்சிட்டீங்களா? :)
/*ஷயாம் :
சரி அடுத்த படம் போடுங்க எழுதறுதுனாதான் கஷ்டபட்டு யோசிக்கனும்...போட்டோ போடுறதுக்கு என்ன... */
syam sonnathai naan vazhimozhikiren... :))
barath : :(
Indha poo enakku migavum pidikkum!Idhan Nija tamizh peyar enna?
காயத்ரி : இந்த பூவின் பெயர் அல்லி என்று நான் நினைக்கிறேன். ஆனால் சரியாக தெரியவில்லை.
Post a Comment