இந்த காலத்துல அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போக ஆரம்பிசசதுலயிருந்து குழந்தைக கதி இப்படிதான் ஆகி போச்சு. வேல வேலனு ரெண்டு பேரும் இயந்திரமா மாறீட்டாங்க. ஆதரவு காட்டற பாட்டி தாத்தவயும் முதியோர் இல்லத்துல சேர்த்தாச்சு கடைசில குழந்தைக நிலைமைதான் மோசமா போச்சு.
இந்த படம் குடுத்த உதவி செஞ்ச
இவருக்கு ரொம்ப நன்றிங்கோ. அப்பாடி ஏதோ ஒரு பதிவு போட்டாச்சு.
25 comments:
ஹா ஹா ஹா...அட்ரா சக்கை... அருமையான பதிவு.... படத்தைப்பார்ர்தா அயல்நாட்டு காரனுக்காக யுனிசெப்ல இருந்து இத தயாரிச்சுருப்பாங்கன்னு தோனுது... ஆனா அயல்நாட்டில் மட்டும் அல்ல.. நம்ம ஊருலயும் இந்த நிலைமய நிறைய குழந்தைங்க அனுபவிக்குது... கடமைக்குனு பிள்ளைய பெத்துகிட்டு, பாட்டியிடமோ தாத்தாவிடமோ கொடுத்துவிட்டு பட்டணத்தில் வேலை பார்க்கும் தம்பதியினர் இப்போ நிறைய பேர் இருக்காங்க.. அவங்களோட குறி பணம் மட்டுமே... கேட்டா என் பிள்ளையோட எதிர் காலத்துக்காக சம்பாதிப்பதாக சொல்வார்கள்.. உன் பிள்ளையின் நிகழ்காலத்தையே உன்னால பார்க்க முடியவில்லையே... நீ எப்படி எதிர்காலத்தை எப்படி பார்க்கப் போகிறார்.. இல்லை அந்தப்பிள்ளை எதிர் காலத்தில் உன்னை எப்படி பார்த்துக்கொள்ளும்...
குழந்தைங்க அப்பா அம்ம கூட இருப்பதுதான் அதற்கு ரெம்ப பிடிச்ச விசயம்... மாதம் ஒரு தடவை நிறைய பொம்மைகள் சாக்லேட்டுகளுன் போய் பார்த்துவிட்டு வந்தால் பாசம் பொத்துக்கொண்டு வந்துவிடாது... முதன் முதலில் குழந்தை பேசும் மழலை வாத்தைகளை கேட்க கொடுத்து வைக்காதவர்கள் துர்பாக்கியவாதிகளே...
அவர்கள் என்னதான் லட்சம் லட்சமாக சம்பாதித்தாலும் அது வெறும் பொருள்களை வாங்கும் காகிதம்தானே தவிர என்றும் பாசத்தையும் குழந்தையின் மழலை வாத்தைகளையும் வாங்கித்தராது....
பெற்றோர்கள் உணர்வார்களா???
அன்புடன்,
மனசு...
ரொம்ப generalised ah எழுதி இருக்கீங்க. எனக்கு தெரிஞ்சு ரொம்ப பேர் பாப்பா பொறந்தவுடனே, அம்மா ஆன சந்தோசத்துல வேலைக்கு போறத விட்டுட்டாங்க. அதே மாதிரி எல்லாருமே தாத்தா பாட்டிய முதியோர் இல்லத்துல விடரதில்ல.
கோபாலன் அவர்களின் கூற்றில் உண்மையிருந்தாலும், இன்றைக்கு நிலமை மாறிவருவதை நீங்கள் கண்கூடாகப்பார்க்கலாம். அந்த புகைப்படத்தைப்பாருங்கள். அது நம் நாட்டுக்காரர்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல. ஆனால் நமது நாட்டுக்கும் பொருந்தும்.
பெரும்பாலான மேற்க்கத்திய நாடுகளில் கூட்டுக்குடும்பம் எனும் முறையே அறவே கிடையாது. அப்படியே இருந்தாலும் எங்கேயாவது ஒன்றோ இரண்டோ. அவ்வளவே. அந்த மாதிரி நாமும் மாறிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறுக்க முடியுமா? இன்றைய நிலையில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஆண் பெண் என்று வீட்டில் இருவரும் வேலைக்குப் போய்வரும் வீடுகளைப் பாருங்கள். முன்பு இருந்ததை விட இப்போது குறைந்த சதவீதத்திலேயே கூட்டுக்குடும்பமாக இருக்கிறார்கள். அத்துடன் பிரைவசி என்ற கண்றாவி இப்போது குடும்பம் என்ற உறவை குலைத்துக் கொண்டு இருக்கிறது. கணவன் மனைவி, அத்தை மாமா, கொழுந்தனார்களுடன் குடும்பம் நடத்துவது எத்தனை பேருக்கு சந்தோசமாக இருக்கிறது சொல்லுங்கள்?. எனக்கு பிரைவசி வேண்டும் என்ற பெயரில் கணவனும் மனைவியும் இருப்பது மட்டுமே குடும்பமா ?
மேலை நாடுகள் மாதிரி முற்றிலும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை ஒழிந்துவிட வில்லை ஆனால் குறைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையே.
அன்புடன்,
மனசு...
//உன் பிள்ளையின் நிகழ்காலத்தையே உன்னால பார்க்க முடியவில்லையே... நீ எப்படி எதிர்காலத்தை பார்க்கப் போகிறார்.. இல்லை அந்தப்பிள்ளை எதிர் காலத்தில் உன்னை எப்படி பார்த்துக்கொள்ளும்...///
ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க நன்றி !
உண்மைதாங்க அனு, சுருக்கமா முடிச்சுட்டீங்க. நல்ல கருத்து.
இந்த காலத்து நிலைமைய சொல்லுது இந்த படம்,இருந்தாலும் கோபாலன் சொன்னது போல எல்லாரும் இப்பிடி இல்லங்கறது என் கருத்து (யாருக்கு வேனும் உன் கருத்து அப்பிடிங்கறது காதுல விழுது) :-)
கோபாலன் : உங்க கருத்து சரிதான். ஆனா நான் சொல்ல வரது அப்டி முதியோர் இல்லத்துல சேர்க்கறவங்கள பத்தி மட்டும்தான். அவங்க எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுதுனுதான் நான் சொல்லியிருக்கேன்.
இளா : நான் சுருக்கமாதான் எழுதியிருக்கேன். மனசு அதுக்கு விளக்கம் எழுதிட்டாரு.
பரத் : நன்றி
ஷ்யாம் : கருத்து சொல்லற உரிமை எல்லாருக்கும் உண்டு. அதிலும் நீங்க கண்டிப்பா சொல்லலாம் ஏன்னா? குழந்தைய கவனிக்கணும்கறதுக்காக ப்ளாக்ல எழுதறதயே நிறுத்தியிருக்கீங்களே. :)
:)
குட் ஜாப்..
வாழ்த்துக்கள் அம்மணி!
//குழந்தைய கவனிக்கணும்கறதுக்காக ப்ளாக்ல எழுதறதயே நிறுத்தியிருக்கீங்களே//
அப்ஜக்சன் யுவர் ஹானர்...நான் நிறுத்தல..நிறுத்தபட்டு இருக்கேன் :-)
இந்த காலத்துல ரெண்டு பேரும் வெலைக்கு பொறது ரொம்ப முக்கியம் .செலவு கட்டுபடி ஆகாது .குழந்தைங்க கண்டிப்பா நம்ம வீட்டு ஆளுஙகளோட கோட தன் வளரனும் .வேலைக்கரஙக ளொட விட்ட அவங்க புத்தி தான் வரும்.கண்டிப்ப நான் மாமியார் மாமனாரொட தான் இருப்பேன்.
பாலபாரதி : தாங்ஸ்
ஷ்யாம் : ஆகா அப்டியா சமாசாரம் உங்க வீட்டுக்காற அம்மா நிறுத்தியிருந்தா உங்க கேஸ் தள்ளுபடி (விசாரணையே கிடையாது) :)
சுபா : ஆகா பரவாயில்லீங்க இந்த காலத்துல மாமனார் மாமியாரோட வாழ்வேன்னு சொல்லறதே பெரிய விசயமாயிருக்கு.
//ஆதரவு காட்டற பாட்டி தாத்தவயும் முதியோர் இல்லத்துல சேர்த்தாச்சு//
ரொம்ப சரி...
இத இன்னும் கொஞசம் விரிவா எழுதிருக்கலாம்.இன்றைய நிலையில் இது முக்கியமான பிரச்சனை
//நான் மாமியார் மாமனாரொட தான் இருப்பேன்//
சுபா நீங்க சொன்னத நாங்க அவ்வளவு சீக்கிரம் மறந்துட மாட்டோம்...பார்க்கலாம்... :-)
பரத் : விரிவா எழுதியிருக்கலாம் அதான் நம்ம மனசு எழுதிட்டார்.
ஷ்யாம் : ஆஹா சுபா மாட்டடிட்டாங்களா?
//இந்த காலத்துல அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போக ஆரம்பிசசதுலயிருந்த//
அப்பா அம்மா யாராவது ஒருத்தர் வேலைக்கு போகலைன்னாத்தான் புள்ளைகள கவனிக்க முடியும்ன்னு சொல்றீங்களா?..
எனக்கு இது சரியா புரியலைங்க.. :(
உண்மையிலே நல்ல அர்த்தங்கள் சொல்லும் ஒரு படம்.. அப்பப்ப பதிவு போட்டாலும் சும்மா நச்சுன்னு தான் போடுறீங்க அனு..
இது குழந்தையை கவனிக்காதவங்களுக்கு..ஷ்யாம் போன்ற நல்ல உள்ளங்களுக்கு அல்ல..
//ஷ்யாம் போன்ற நல்ல உள்ளங்களுக்கு அல்ல..//
கார்த்திக் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....உள் குத்து ஒன்னும் இல்லயே... :-)
Mind Tickling Post
ராசா: நான் ரெண்டு பேரும் வேலைக்கு போறது தப்புனு சொல்லல ஆனா குழந்தைகளையும் கொஞ்சம் கவனிக்கனும்னுதான் சொல்ல வரேன். தாத்தா பாட்டிங்கற உறவையெல்லாம் கொஞ்சம் அனுசரிச்சு போகனும்னு சொல்ல வரேன் அவ்வளவுதான்.
கார்த்திகேயன் :
//அப்பப்ப பதிவு போட்டாலும் சும்மா நச்சுன்னு தான் போடுறீங்க அனு..//
பாராட்டுக்கு நன்றிங்க
ஷ்யாம் :
//உள் குத்து ஒன்னும் இல்லயே...//
கார்த்தி நல்லவர்னுதான சொல்லியிருக்காரு. ஆப்ப நீங்களா கேட்டு வாங்கறீங்களே ... :)
Dev : Thankq
oru kalaathula indha madiri kozhandaingala adopt pannika potta vilambaram..ippa ellam..appa amma irukkara kuzhaindhaigalukkum indha nelamadan..
நல்ல படம்...:)
Good picture!
Nice one , Keep it up
சூப்பர். :-)
இங்கே உங்க பதிவைவிட வந்திருக்கிற பின்னூட்டங்கள் நீளமாக இருக்கின்றதே? ;-)
Post a Comment