Saturday, February 18, 2006

மலர்களும் மனிதர்களும்


மலர்களும் மனிதர்களும்

மலர்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு ஆதிகாலம் முதல் தற்காலம் வரை பிரிக்க முடியாமல் தொடர்கிறது. இந்த வாரம் விகடனில் எஸ்ரா அவர்களின் தேடல் மலர்களைப்பற்றி இருந்தது. அப்போதுதான் மலர்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு பற்றிய எண்ணம் எழுந்தது.

அந்த கால இலக்கியங்களில் நம் தமிழர் பண்பாட்டை விளக்கும்போது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்ப போருக்கு செல்ல, வெற்றி பெற, திருமணம் என பல்வேறு நிகழ்வுகளுக்கும் பல வகையான மலர்களை பயன்படுத்துவதை பற்றி பாடல்கள் இடம் பெற்றிருக்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களில் இடம் பெற்ற ஒவ்வொரு ஓவியத்திலும் தாமரை, அல்லி போன்ற மலர்கள் இடம்‍பெற்றுள்ளன. புத்த பிரானின் ஓவியம் வரையும் போது கட்டாயம் தாமரை இடம் பெற்று வருகிறது.

என் சிறுவயதில் வெள்ளிங்கிரி மலைக்கு சென்ற போது என் தந்தை எனக்கு நாகலிங்க பூவை காட்டினார். உண்மையில் மிக அதிசயமான மலர் அது கடவுளின் படைப்பில் பல அதிசயங்கள் உண்டு அவற்றில் அதுவும் ஒன்று. ஒரு சிறு மலருக்குள் பீடம் நடுவில் லிங்கம் அதனை சுற்றி ஐந்து தலை நாகம் போன்ற அமைப்பு என எவ்வளவு அருமையான படைப்பு. மணமும் அபாரம். நான் நினைக்கிறேன் மனிதன் அந்த மலரை பார்த்துதான் சிவலிங்கத்தை சிற்பமாக செய்திருப்பான் என எண்ணுகிறேன். அன்று இருந்து இன்று வரை இந்த நாகலிங்க பூவின் மீதுள்ள வியப்பு தீரவே இல்லை.

மகுடமல்லி (மகிழ மல்லி) எனும் இப்பூவினை எனக்கு அறிமுகம் செய்தவர் எனது தமிழ் ஆசிரியை. அவர் தினமும் ஏதாவது ஒரு மலரை பற்றியும் அதனை தமிழர் வாழ்வில் உபயோகப்படுத்தியது பற்றியும் எடுத்துரைப்பார். உண்மையில் அப்படி ஒரு ஆசிரியை அமைவது ஆபூர்வம் அவர் வெறும் பாடம் மட்டும் நடத்தாமல். தமிழர் பண்பாடு, மலர்கள், உணவு பழக்கம் பற்றி ஏதாவது ஒன்றை விவாதிப்பார். இதனாலேயே தமிழ் வகுப்புகள் இனிமையாக அமைந்தது. அதற்கு பிறகு மகுடமல்லியை பூம்புகார் சென்ற போது பார்த்தது. வேறு எஙகும் காண கிடைக்கவில்லை. சிறியதாக இருந்தாலும் மணம் மிக அதிகம்.

பவளமல்லி என் உறவினர் வீட்டில் பார்த்தது. இது மற்றொரு அதிசயம். எல்லா பூ விற்கும் காம்பு பச்சை நிறத்தில் இருக்க இதற்கு மட்டும் பவிள நிறத்தில் அமைந்துள்ளது. இது மாலையில் மட்டுமே மலர்கிறது. அருமையான மணம் கொண்டது.

இப்படியே பார்த்தால் செண்பகம், அல்லி, செம்பருத்தி, அந்திமல்லி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால் தற்போது உள்ள இட நெருக்கடியில் பின் வரும் சந்ததியினருக்கு இந்த மலர்களை சந்திக்க வாய்ப்பே இருக்காது என எண்ணுகிறேன். ஏன் நம்மில் பலருக்கு நம் முன்னோர் பார்த்து ரசித்த பல மலர்கள் காண கிடைப்பதில்லை. இது போக நம் இலக்கியங்களில் வரும் ஆத்தி மலர், அனிச்சை, காந்தள், இச்சி மலர் என பல வகையான மலர்களை காலம் தொலைத்து விட்டது. ஆனாலும் அந்த இடத்தை நிறைவு செய்ய தற்போது ரோஜா டூலிப், லாவண்டர் என பல புதுப்புது அயல்நாட்டு மலர்கள் வந்து விட்டது. எந்த நாட்டை சேர்ந்தததாக இருந்தாலும் மலர் மலர்தான். ரசிக்கும் வகையில்தான் உள்ளது. மலர்களை பார்த்து மயங்காத மனித மனம் ஏதும் உண்டா?

8 comments:

பாலு மணிமாறன் said...

Your post reminds me of the saying that a rose is a rose is a rose !!!

Nice pathivu!!!!

பாலு மணிமாறன் said...

When i was in Attakatti ( Minparai ) during late 80s, we had a rose "chedi" in our house.

That rose chedi may not be there now.. but the mories are there.

Pavals said...

//பவளமல்லி// நம்ம வீட்டு வாசல்லயே ரெண்டு பெரிய மரம் இருந்துதுங்க. எங்கய்யன் தான்.. நடக்கும் போது பூவை மிதிச்சுட்டு நடக்க சங்கடமா இருக்குன்னு, வெட்ட சொல்லிட்டாரு,, அப்படியும் ஒரு மரத்தை தான் வெட்டினேன்... இன்னொன்ன மேல்கிளைய மட்டும் வெட்டி.. புதர் மாதிரி விட்டுட்டேன்.. இப்போ மிதிக்க வேண்டியதில்லை.. ஆனா பூவாசாம் இருக்கும்னு, சாயங்காலம் வீட்டுக்கு போய் அப்படியே சித்த நேரம் மரத்துக்கு பக்கத்துல உலாவறதே.. தனி சுகம்..

அனுசுயா said...

நன்றி சரோஜ்னி தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

அனுசுயா said...

நன்றி பாலு அவர்களே. நம் வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மலரின் நினைவும் நமக்கு என்றும் புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.

அனுசுயா said...

அமாங்க ராசா ஒவ்வொருத்தரும் இருக்கிற பூ செடிகளை வெட்டாம பாரத்துக்கிட்டாலே பின்வரும் காலத்துல பூக்களோட இனம் அழியாம இருக்கும்.

Pavals said...

i have tagged u, visit my blog for details

அனுசுயா said...

Thanks for Tagging Mr.Raasaa