Thursday, November 16, 2006

இலவசம் .....


வேணும் எனக்கு நல்லா வேணும் அப்பவே சொன்னாங்க கேட்டனா இலவசமா தர்ராங்கன்னு எல்லாத்துலயும் மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணினேனே. இப்ப தினமும் வந்த மெயில செக் பண்ணவே பாதி நேரம் சரியா போயிடுது.
வேணும் எனக்கு நல்லா வேணும், அது பத்தாதுன்னு ஆட்குட்ல வேற ஒரு ஐடி. இதுல ஸ்க்ராப் எழுதறவங்களுக்கு பதில் எழுத பாதி நேரம் போகுது.
வேணும் எனக்கு நல்லா வேணும் இலவசமா தர்ராங்கன்னு ப்ளாக் ஓபன் பண்ணினேனே. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். இலவசம்ன உடனே ப்ளாக் ஓபன் பண்ணியாச்சு இப்ப பாருங்க என்ன பதிவு போடலாம்னு மண்டை உடைய யோசனை பண்ணுனா. கல்லுதான் ஒடைஞ்சிருக்கு. பாவம் கல்லு. :)
டிஸ்கி : மக்களே ஒருத்தரும் பயப்படாதீங்க இந்த பதிவு சத்தியமா போட்டிக்கு இல்லீங்க யாரும் பயப்பட தேவையில்லை. :))))))))))

24 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல கான்செப்ட்! அருமை!

ஆனா இதை ஏன் விவாதமேடைல போட்டீங்க?

அனுபவம்/நிகழ்வுகள் பகுதில வந்தா சரியா இருக்கும்!

அது சரி! இதுவும் ஒரு விவாதிக்கக் கூடிய விஷயம்தான்!

ILA(a)இளா said...

எல்லாம் இலவசமாத்தான் கிடைக்குது, அதுக்காக?????

உடைஞ்சது நாமக்'கல்' இல்லியே?

ஆன்லைன் ஆவிகள் said...

தமாசா கீதுப்பா!

போட்டில கெலிக்க வாழ்த்துக்கள் பெண்ணே!

நாமக்கல் சிபி said...

//உடைஞ்சது நாமக்'கல்' இல்லியே? //

நாமக்கல்லே உடையுற அளவுக்கு அனுசூயாவோட தலை பெருந்தலையோ இளா?

தேவ் | Dev said...

நாமக் கல் உடைஞ்சுப் போச்சா... ?!!! கவலை வேண்டாம் நம்ம இலவசக் கொத்தனார் கிட்டச் சொன்னா போதும் இலவசமா கொத்தி பூசிடப் போறாரு...

:)))

Anonymous said...

nice kavithai and nice pic

அனுசுயா said...

சிபி : //நல்ல கான்செப்ட்!
அருமை!// நன்றிங்க.

//ஆனா இதை ஏன் விவாதமேடைல போட்டீங்க?//

யாருங்க விவாத மேடையில போட்டாங்க அதுவா போயிடுச்சு. :)

இளா : //உடைஞ்சது நாமக்'கல்' இல்லியே?//
கிளம்பீட்டாங்கய்யா கிளம்பீட்டாங்க. ))

அனுசுயா said...

ஆவி அண்ணாச்சி : இது போட்டிக்காக இல்லீங்க. சும்மா கொட்டாவி வருதேனு போட்டது.

அனுசுயா said...

சிபி : //நாமக்கல்லே உடையுற அளவுக்கு அனுசூயாவோட தலை பெருந்தலையோ இளா? //
ஆகா என் தலை அவ்ளோ பெருசு இல்லீங்க.

தேவ் : //நம்ம இலவசக் கொத்தனார் கிட்டச் சொன்னா போதும் இலவசமா கொத்தி பூசிடப் போறாரு//

நீங்களுமா? :(

செந்தழல் ரவி said...

Is this for Potti ?? How mokkai Post this was ?? !!!!!

:((( Po unkakku - - - - minus mark

:)))))))))

அனுசுயா said...

காண்டீபன் :// nice kavithai and nice pic //
கவிதையா என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே. :)

அனுசுயா said...

செந்தழல் ரவி : ஏனுங்க இது போட்டிக்கு இல்லீங்க. தூக்கம் வருதேனு ஏதோ ஒரு மொக்க பதிவு போட்டேன் அதுக்கு போயி நெகட்டிவ் மார்க்குனு சொல்லி பயமுறுத்தாதீங்க. :)

செந்தழல் ரவி said...

Thank God...Thenkoodu Escape AAgiruchi...

:))))

நாமக்கல் சிபி said...

//சும்மா கொட்டாவி வருதேனு போட்டது.
//

நாங்கள்ளாம் கொட்டாவி வந்த கொட்டாவி விடுவோம்! நீங்க பதிவு போடுறீங்க!

பதிவு எழுதணும்னு தோணுனா என்ன பண்ணுவீங்க!

இதுக்குப் பேர்தான் சொல் பேச்சு கேளாமை!

(எள் என்றால் எண்ணையா நிக்கும் வடிவேலுகிட்டே பார்த்தி இப்படித்தான் சொல்லுவார்)

Udhayakumar said...

இவ்வளவு நாள் இப்படித்தான் ஓடுச்சா என்ன? புதுசா புலம்பறீங்க....

ரொம்ப நாளா பூ படம் ஒன்னையும் காணோமே???

அனுசுயா said...

சிபி : //நாங்கள்ளாம் கொட்டாவி வந்த கொட்டாவி விடுவோம்! நீங்க பதிவு போடுறீங்க! //
நாங்களுந்தான் கொட்டாவி விடுவோம் ஆனா ஆபீஸ்ல வேல செய்யறா மாதிரி ஒரு ஆக்ட் குடுக்கும்போது கொட்டாவி விட மடியாது அதான் சின்சியரா போஸ்ட்டிங் போடுறோம். :)

அனுசுயா said...

உதய் : வாங்க உதயகுமார் புதுசா என் வலைப்பக்கம் வந்திருக்கீங்க. ஆனா கூடவே ஆப்பயும் சேர்த்து எடுத்துட்டு வந்திருக்கீங்க. :)
புது பூ படம் ஒன்னும் கிடைக்கலீங்க. அதான் லேட்.

மு.கார்த்திகேயன் said...

//மக்களே ஒருத்தரும் பயப்படாதீங்க இந்த பதிவு சத்தியமா போட்டிக்கு இல்லீங்க யாரும் பயப்பட தேவையில்லை//

முதல் முறை இங்கே அனு.. அம்பி பதிவு மூலம் இங்கே குதித்தேன்.. பின்னூட்டம் போடுறதும் இலவசம் தானேன்னு பின்னூட்டம் போட வந்தேன்..

Syam said...

நீங்களும் நம்ம ஜாதியா...நானும் இலவசமா குடுத்தா பினாயில கூட குடிப்பேன் :-)

thunder nambi said...

அனு நீண்ட நாட்களுக்கு பிறகு என் வருகை. எப்படி இருக்குறீங்க. நலம் நலம் அறிய ஆவல்.

அனுசுயா said...

மு.கார்த்திகேயன் : இலவசமா பின்னூட்டம் போட்டதற்கு இலவசமா நன்றிங்க :)

Syam : வாங்க நாட்டாமை ஜாதி பிரச்னைய கிளப்பறீங்களே ஞாயமா? அப்பறம் ஜாதி சங்கம் தொடங்கீற போறீங்க.


நம்பி : வருகைக்கு நன்றி. நலமே

நாமக்கல் சிபி said...

ஆஹா... நம்ம கான்ஸப்ட் மாதிரியே யோசிச்சிருக்கீங்க...

காசு கொடுக்கற மாதிரி இருந்தா நானெல்லாம் சத்தியமா எழுத ஆரம்பிச்சிருக்கமாட்டேன் :-)

MSV Muthu said...

cute pic!

Sandai-Kozhi said...

New template is very nice.
sense of humour jasthingo ungalukku.mutti mutti yosichu kall udainju pocha?:D
--SKM