Wednesday, October 18, 2006

லாவண்டர்


கடந்த வாரம் திரு.கோபாலன் அவர்கள் லாவண்டர் பூ படம் எடுத்து அனுப்பியிருந்தார். சரி இந்த பூ பத்தி எதாவது தெரியுமானு கேட்டா ஒன்னுமே தெரியாது அங்க போனா கும்முனு வாசம் வரும் நிறைய தேனீக்கள் இருக்கும்னு மட்டும் சொல்லிட்டாரு.
லாவண்டர்னா பாய்ஸ் படத்துல ஷங்கர் காட்டுனதுதான் எனக்கு ஞாபகம் வருது. நானா வலைல தேடுனப்ப நிறைய விஷயம் தெரிஞ்சது. எனக்கு தெரிஞ்சத இங்க எழுதியிருக்கேன்.
லாவண்டர்னா கத்திரிபூ கலர்ல மட்டும்தான் இருக்கும்னு நினைச்சிட்டுயிருந்தேன். ஆனா
லாவண்டர்ல மட்டும் சுமார் 20 -30 வகையிருக்குது. அதுவும் பல நிறங்கள் இருக்கு. இங்க நீங்க பாக்கறது மஞ்சள் லாவண்டர் பூ.
லாவண்டர் பொதுவா சூரிய ஒளி அதிகம் விரும்பும் மலர். அதோட தாய்நாடு பிரான்ஸ்தான். ஆனா இப்ப பெரிய லாவண்டர் தோட்டம் ஆஸ்திரேலியாவுல டாஸ்மேனியாங்கற
இடத்துலயிருக்குது. இது குத்து செடி மட்டும் இல்ல சில வகையான பூ செடிகள் பல அடி உயரம் கூட வளருதாம்.



லாவண்டர் வெறும் வாசனைக்கு மட்டும் பயன்படுத்தறது இல்ல மருத்துவத்துக்கும் பயன்படுத்தறாங்க. இந்த லாவண்டர் பூச்சி கடி பூச்சிகள் வராமயிருக்கவும் பயன்படுத்தறாங்க. அதுபோக தலைவலி தைலம் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க.


லாவண்டர் பூ தெய்வ வழிபாட்டுக்கும் பயன்படுத்தறாங்களாம். இந்த பூ பூக்கும் காலம் நவம்பர் டிசம்பர் தான். கிட்டதட்ட நம்ம ஊர் துளசி மாதிரி. ஏதோ எனக்கு நெட்டுல கிடைச்ச விசயங்கள எழுதியிருக்கேன்.

14 comments:

Syam said...

பூவ பத்தி பிஹெச்டி பண்ணிருப்பீங்க போல...GR ஒரு போட்டோ அனுப்பினார் நீங்க எத்தனை விதமான லாவண்டர் இருக்குனு சொலிருக்கீங்க...
:-)

Gopalan Ramasubbu said...

//இப்ப பெரிய லாவண்டர் தோட்டம் ஆஸ்திரேலியாவுல டாஸ்மேனியாங்கற
இடத்துலயிருக்குது//

அங்க போனா, ஒரு 1000 ஏக்கருக்கு விட்டு விட்டு ஊதாப்பூ நிறம்தான் ரோட்டுக்கு ரெண்டுபக்கமும் தெரியும். கார்ல போகும் போது பத்து நிமிஷம் பார்க்க நல்லா இருக்கும் அதுக்கப்பறம் போர் அடிச்சிரும். ஒவ்வொரு தோட்டமும் 500 ஏக்கருக்கு மேலதான் இருக்கும். தோட்டத்துல இருக்கற விவசாயிகிட்டயே நீங்க சொன்ன லாவண்டர் தைலம்,மருந்து, வாசனை திரவியம் எல்லாம் கிடைக்கும்.

ambi said...

சூப்பர்! அப்படியே ஜீன்ஸ் படதிலேர்ந்து ஒரு படமும், (லாவண்டர் படம் தான்) போட்டு இருக்கலாம். ஷ்யாம் சந்தோஷபடுவான்! ;D

EarthlyTraveler said...

wow!Lavender poo pathi ivvalo vishayam irukka.Thanks for the info.
Yenga,andha kuruvi poo photo irundha poda mattena?illaiyae?adhu ivallo colorfula irukkama brown and yellow kalandhu irukkum.
sandaiKozhi peru yen ponnu perunga.
adhudhan special.--SKM

அனுசுயா said...

syam : எப்டியோ நாட்டாமை கையால பட்டம் வாங்கிட்டேன். நன்றி.

கோபாலன் : தகவலுக்கும் படங்களுக்கும் நன்றி.

அம்பி : //ஜீன்ஸ் படதிலேர்ந்து ஒரு படமும், (லாவண்டர் படம் தான்) போட்டு இருக்கலாம். ஷ்யாம் சந்தோஷபடுவான்!//
ஷ்யாமா ? நீங்களா?

சண்‍டை கோழி : நிஜமாவே உங்க பொண்ணு பேரா? நல்ல பேருங்க :)

Syam said...

//ஷ்யாம் சந்தோஷபடுவான்!//

//ஷ்யாமா ? நீங்களா?//

அம்பி எப்பவுமே இப்படித்தான்...பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டே பழகிட்டான்...ரொம்ம்ம்ம்ம்ம்பபபப நல்லவன் :-)

ambi said...

//ஷ்யாமா ? நீங்களா//
@anu,he hee, ரெண்டு பேரும் தான்!

//பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டே பழகிட்டான்...ரொம்ம்ம்ம்ம்ம்பபபப நல்லவன்//
@syam, எனக்கு அழுகை அழுகையா வருது! :D

Dr.Srishiv said...

எகிரி குதித்தேன் வானம் விழுந்தது...
பாதங்கள் இரண்டும் பறவையானது,
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது,
சிறகுகள் இரண்டும் பறவையானது...அல அலே...அருமையான கட்டுரை லாவண்யா சாரி சாரி லாவண்டர் மலர்களைப்பற்றி, வருகைக்கு நன்றி அனு...:)
ஸ்ரீஷிவ்...:)

மனசு... said...

ஆடேங்கப்பா... ஆராய்ச்சி கட்டுரை மாதிரி பின்னிருக்கிங்க போங்க... அருமையான, கண்ணுக்கு குளிர்ச்சியான படங்கள்.. நானும் உங்களை போல லாவண்டர்னா லாவண்டர் கலர்ல இருக்கும்னு நினச்சுட்டு இருந்தேன்...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...

மனசு...

Unknown said...

NIce Photos :)

ரவி said...

ஒரு பதிவு போடுவதற்க்கு இவ்ளோ நாளா ? ம்ம்ம்ம்...படங்கள் நல்லாருக்கு.

கைப்புள்ள said...

நல்ல படங்கள் அனுசுயா. லேவண்டர் பூ இளம் வயலட் கலர் மட்டும் தான்னு நெனச்சிருந்தேன். புது தகவல்களைச் சொல்லிருக்கீங்க. நன்றி.

அனுசுயா said...

ஸ்ரீஷிவ் : நன்றி :)

மனசு : ஆமாங்க நிறைய பேர் லாவண்டர்னா ஒரே கலர்னுதான் நினைச்சிருக்காங்க.

தேவ் : Thankz :))))))

செந்தழல் ரவி :
//ஒரு பதிவு போடுவதற்க்கு இவ்ளோ நாளா ? // பதிவு போட நேரமும் விசயமும் கிடைக்கனுமேங்க.

அனுசுயா said...

கைப்புள்ள : நன்றிங்க பின்னூட்டத்திற்கு.
// லேவண்டர் பூ இளம் வயலட் கலர் மட்டும் தான்னு நெனச்சிருந்தேன் //
அது கிட்டதட்ட 30 வகை கலர்ல இருக்குங்கஇ