Wednesday, November 22, 2006

மழை....



எட்டிப்பிடிக்க முடியாத ஆகாயத்திற்கும்
எட்டநிற்கும் மண்ணிற்கும்
இடையில் ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்

கார்மேகமாய் காட்சி தந்து
நீ வரும் முன்னே இப்பூமிக்கு
உன் வாசத்தைக் கொடுத்து
இம்மண்ணிற்கு வளம் கொடுக்கும்
நீ கூட ஒருதாய் தான்.

உன்னில் நனைந்து என்னைத்
தேற்றி இயற்கை வியந்து என்
சோகத்தை மறப்பதால்
ஆம்! உன்னை நேசிக்கிறேன்.
நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!

28 comments:

ரவி said...

ஹை..சூப்பர்....எட்டும் அதிசயம்..நல்ல கற்பனை.

ILA (a) இளா said...

//நீ கூட ஒரு அஞ்சலகம்தான்//
//நீ கூட ஒருதாய் தான்.//
//நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!//
நல்ல உவமாங்கள், பூக்களுக்குள் கவிதைகளா?

மு.கார்த்திகேயன் said...

Wonderful poem on rain..

keep rocking anu..

(sorry for commenting in english)

மனசு... said...

ம்ம்ம் என்னங்க... மழையை பற்றி கவிதை மழை... இது எப்போ இருந்து...??? கோயமுத்தூர்ல ரெம்ப மழையோ??? அது சரி அந்த படம் எங்க எடுத்திங்க... அவ்வளவு அருமையா இருக்கு... பேசாம புகைப்பட திலகம்னு உங்களுக்கு பட்டம் குடுத்துடலாம்... எங்க இருந்துப்பா இப்படி படம் பிடிப்பிங்க...???

அன்புடன்,
மனசு...

Udhayakumar said...

//நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!//

நல்லா சொல்லிருக்கீங்க...

Butterflies said...

taht is just excellent.....your poem rocks!!!Write more!

ambi said...

//நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!//

super! nice writing. pls continue....

வல்லிசிம்ஹன் said...

அனுசூயா, அருமையான பாடல்வரிகள்.

படங்களைப் பிடிக்கும் இடத்தைச் சொல்லலாமில்லியா.
நானும் போய்ப் பார்ப்பேனே.கொஞ்சும் கிளி தெரியும்.
கொஞ்சும் படமும் உண்டா?:-)

அனுசுயா said...

செந்தழல் ரவி : //எட்டும் அதிசயம்..நல்ல கற்பனை// ஆமாங்க மழை நமக்கு எட்டும் அதிசயம்தான?

இளா : நன்றி

மு.கார்த்திகேயன் : Thank you :)))

மனசு : //பேசாம புகைப்பட திலகம்னு உங்களுக்கு பட்டம் குடுத்துடலாம்//
பேசிட்டே குடுத்தாலுங்கூட வாங்கிக்கிறேனுங்க :))

அனுசுயா said...

உதயகுமார் : நன்றி

சுபா : Thankz

Ambi : Thankq

அனுசுயா said...

வல்லி : பாராட்டுக்கு நன்றிங்க. படம் நான் புடிக்கலீங்க. இது நெட்டுல சுட்ட படம்ங்க :))))

Syam said...

எட்டாம் அதிசயம்..எட்டும் அதிசயம்...என்னமா யோசிச்சு இருக்கீங்க...சூப்பர் :-)

யாழ்.பாஸ்கரன் said...

அனு உங்கள் வலைப்பூ மலர் தோட்டமா இருக்கு பூக்களை பார்க்கலாம் பறிக்கதீங்கனு ஒரு பலகை வையுங்க
நொய்யல் நதிகரையன்

Swamy Srinivasan aka Kittu Mama said...

மிக மிக அருமை anu

ungala blogrolla potaachu :)

பிரியமுடன்... said...

கார்மேகம்
கறையும் காட்சியை
கண்முன்னே
காட்டி நிற்கும்
கவிதையை
கைத்தட்டி
வரவேற்கிறேன்!

மழையில் நனைந்ததுபோல
மகிழ்ச்சி மனதில்!
ஈரமான மனதுடன்
இனிமையாக வாழ்த்த
இங்கே வந்திருக்கிறேன்!
மளைக்கும் கவியை
மழைக்காக தந்த
மங்கையை
மனமாற வாழ்த்துகிறோம்!
உன்
மழைத்துளிகள்
மனதில் பெரும்
வெள்ளத்தை ஏற்படுத்திவிட்டது!
அனுவுக்கு
ஆயிரம் வாழ்த்துக்கள்!

நாமக்கல் சிபி said...

//நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!
//

சூப்பர்! வித்தியாசமான கற்பனை!

புகைப்படம் அருமை! டெம்ப்ளேட், மற்றும் புகைப்படங்கள் ஒரு பூந்தோட்டத்தினுள் நுழைந்த உணர்வை சொல்லென்று ஏற்படுத்துகிறது!

அனுசுயா said...

Syam //என்னமா யோசிச்சு இருக்கீங்க...சூப்பர் // நன்றிங்க :)

பாஸ்கரன் ; முதல் வருகைக்கு நன்றி.

கிட்டு : நன்றிங்க என்னயும் உங்க ப்ளாக்ல சேர்த்ததுக்கு :)

அனுசுயா said...

பிரேம் : ஆகா உங்க பின்னூட்டமே ஒரு கவிதையாயிருக்கு. ரொம்ப ரொம்ப நன்றிங்க.

அனுசுயா said...

சிபி : டெம்ளேட் நல்லாயிருக்குனு சொன்னதுக்கு நன்றிங்க.

EarthlyTraveler said...

Beautiful kavidhai.keep writing.
--SKM

Dr.Srishiv said...

அனு
எப்படிப்பா உங்க பிளாக் மட்டும் நல்லா தெரியுது நெருப்பு நரில? எனது எல்லாம் வெட்டி வெட்டி தெரியுது எழுத்துக்கள் :(, என்ன எழுத்துறு உபயோகிக்கின்றீர்கள்?
ஸ்ரீஷிவ்..

பரத் said...

கவிதை ரொம்ப அழகா,எளிமையா இருக்கு.வாழ்த்துக்கள்
புது டெம்ப்லேட் நல்லாயிருக்கு.கலக்கறீங்க!

மு.கார்த்திகேயன் said...

//இடையில் ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்
//

நன்றாக அனுபவிச்சு எழுதியிருக்கீங்க அனு..

கதையெல்லாம் நல்ல இருக்கு..அனு

ஜி said...

எப்டீங்க இப்படியெல்லாம் எழுதுறீங்க.. உக்காந்து யோசிப்பீங்களோ?

Syam said...

Wish You a Wonderful New Year!!!

missing CBE on new year's eve :-(

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழியே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

அனுசுயா said...

Sandai kozhi: Thanks :)

Srishiv : பதில் கிடைச்சுடுச்சுனு நினைக்கிறேன். :)

பரத் : நன்றிங்கோ

மு.கார்த்திகேயன் : பாராட்டுக்கு நன்றி.

ஜி : உக்காந்து தான் யோசிக்க முடியும் நின்னுட்டு யோசிச்சா கால் வலிக்கும்ல அதான். :)))

அனுசுயா said...

Syam : நாட்டாமை உங்களுக்கும், உங்கள் மனைவி மற்றும் முகில் குட்டிக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். :)