Friday, December 29, 2006

முதலாம் பிறந்த நாள்.

2006 ம் ஆண்டு முடிஞ்சுது புது வருசம் பிறக்க போகுது அதே நேரம் என் வலைப்பூவுக்கும் ஒரு வருடம் முடியுது. அதனால ஒரு சின்ன பார்வை. ஏன்னா பெரியவங்க சொல்லியிருக்காங்கள்ள கடந்து வந்த பாதைய எப்பவும் மறக்க கூடாதுனு அதான்.

பொதுவா இந்த ஆண்டு என்னை பொறுத்த வரைக்கும் வலையுலக ஆண்டுனே சொல்லலாம். அந்த அளவு 2006 வாழ்க்கையில் அதிலும் தமிழ் வலை உலகம் நிறைஞ்சிருக்குது.

இந்த வருட ஆரம்பத்துலதான் வலைப்பூ (Blog) அப்படீனா என்னனே எனக்கு தெரியும். என் சகோதரர் அறிமுகப்படுத்தி வெச்சாரு. அப்ப முதன்முதலா நான் படித்தது நம்ம கொங்கு நாட்டு ராசாவோட வலைத்தளம்தான் அதுக்கு பிறகு ஜிராகவனுடையது அப்புறம் அப்டியே தமிழ்மணம் ‍ஜோதியில நானும் இணைஞ்சுட்டேன்.

நான் பாட்டுக்கு அடுத்தவங்க கட்டுரைய படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு முதன் முதலா நான் இந்தியாவும் உலக அதிசயமும் அப்டீனு ஒரு கட்டுரை எனக்கு தோனுத எழுதுனேன். அதைய தினமலர் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணினாங்க உடனே எனக்கு ஒரு நினைப்பு அட நாமளும் பெரிய எழுத்தாளர் போல இருக்கு. இனிமே நாமளும் எழுதுவோம்னு கண்டதையும் கிறுக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் போனவுடனே படம் போட்டு கதை எழுதறது கொஞ்சம் ஈசியா இருந்துச்சு. ஒரு படத்த போட்டு அதுக்கு ஒத்து வரமாதிரி ரெண்டு லைன் எழுத வேண்டியது. இப்டியே கொஞ்ச நாள் ஒப்பேத்துனேன். :)))))

அப்புறம் எனக்கு இந்த பூக்கள் மேல ஒரு பைத்தியம். எங்க பூ படம் பார்த்தாலும் உடனே புடுச்சு போட்டுடுவேன். அப்டியே எழுதி எழுதி கடைசில பூக்கள பத்தி மட்டுமே எழுதற நிலைமைக்கு வந்துட்டேன். கடைசியா கவிதைங்கற பேர்ல ஒரு கிறுக்கல் வேற.

ஆனா போன மாதம் திடீர்னு ஜி.கெளதம் வைச்ச போட்டில ஆறுதல் பரிசு வாங்கி குங்குமத்துல வேற பப்ளிஷ் பண்ணுனாங்க. அது ஒரு சந்தோசம். அப்பப்ப நான் எழுதி அடுத்தவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைக்கும் போது ஏதாவது ஒரு பரிசு கொடுத்து தொடர்ந்து எழுத வைச்சிடுறாங்க. பாவம் படிக்கறவங்க.

இந்த வலையுலகத்தை பொருத்த வரைக்கும் நான் ஒரு வருடக்குழந்தை. ஆனா இந்த ஒரு வருடத்துல கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய.
நிறைய நிறைய நண்பர்கள். நிறைய விதவிதமான மக்களை பற்றிய அறிமுகம். இந்த உலகத்தை சுருக்கி சின்னதாக்கிடுச்சு இந்த வலையுலகம். ஒரே விசயத்தை மத்தவங்க எவ்வளவு விதமா நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

இனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :))

11 comments:

Gopalan Ramasubbu said...

//இனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :)) //

படம் போட்டு கதை சொல்றத அடுத்த வருசம் நிறுத்துவீங்கனு நம்பறேன். இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனு :)

Udhayakumar said...

ஒரு வருஷந்தான் ஆச்சா?

நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள்!!!

salem thiagu said...

padam pottu kathai solvathu than nalla erukkum

oru padam ayeram varthagalukku samam

so keep in posting blogs with figure
Wish you a happy and prosperous new year
endrum anbudan ungal thambi

thiagu

மனசு... said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..அட உங்க வலைப்பூ பிறந்தநாளுக்குதான்... புத்தாண்டு வாழ்த்துக்களும் சேர்த்துக்கோங்க... வரும் வருசம் இனிய வருசமாக அமைய வாழ்த்துக்கள்..

மனசு...

ஜி said...

ஒரு வருசமா? அப்டீனா நீங்க பெரிய எழுத்தாளர்தான்....

புத்தாண்டு மற்றும் ஓராண்டு நிறைவு நாள் வாழ்த்துக்கள்...

Santhosh said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அனு.

//இனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :)) //

எதுக்கு நீங்க இப்படி பீல் பண்றீங்க

arun said...

congraz, vazhthukkal

ithe mathiri ezhuthi (urupadiya... neenga sonnathuthan) innum niraiya award vanganumnu vazhthurane.

ippadikku
arun

அனுசுயா said...

கோபாலன் : //படம் போட்டு கதை சொல்றத அடுத்த வருசம் நிறுத்துவீங்கனு நம்பறேன்//
உங்க நம்பிக்கை வீண் போகாதுனு நினைக்கிறேன். :)

உதய் : ஒரு வருஷந்தானுங்க ஆச்சு. வாழத்துக்கு நன்றி.

தியாகு : நன்றி

அனுசுயா said...

மனசு : பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றிங்க.

ஜி : பெரிய ஆள் எல்லாம் இல்லீங்க ஏதோ மொக்கையா எழுதிட்டு இருக்கிறேன்.

சந்தோஷ் : //எதுக்கு நீங்க இப்படி பீல் பண்றீங்க //
பீல் எல்லாம் எனக்கு இல்லீங்க படிக்கறவங்க பாவம் பீல் பண்ணுவாங்களேனு நினைச்சேன் அவ்ளோதான் :)

arun : Thanks

கைப்புள்ள said...

//இப்டியே கொஞ்ச நாள் ஒப்பேத்துனேன். :)))))//

நாங்களும் இதையே தானே பண்ணறோம்?
:)))

இன்னிக்குத் தான் உங்கப் பதிவைப் பாக்கறேன். ரெண்டாவது வருசம் பிறந்தநாள் விழா கொண்டாடும் போது எனக்கும் மறக்காம வாழ்த்து சொல்லிடுங்க...ஏன்னா நானும் டிசம்பர் 29,2005 அன்னிக்குத் தான் என்னோட கலையுலக சேவையைத் தொடங்குனேன்(சரி...அமைதி...அமைதி)
:))

MyFriend said...

இப்பவே வாழ்த்து சொல்லவா? இல்ல ரெண்டு வயசு ஆனதும் சொல்லவா? ;-)