உலக அதிசயங்களும் இந்தியாவும்
உலக அதிசயங்களை கட்டுரைகள் மற்றும் கதைகளில் படிக்கும்போதும்
படங்களை பார்க்கும்போதும் மிக அதிசயமாக உள்ளது. அந்த நாட்டைப்பற்றி வியப்பும் மதிப்பும் அதிகரிக்கின்றது. ஆனால் அவற்றை நேரில் சென்று பார்க்கும்போதுதான் அதன் உண்மை நிலை என்ன என்பது விளங்குகிறது.
உதாரணத்திற்கு பைசா நகர சாய்ந்த கோபுரத்தை எடுத்துக் கொள்வோம்.
அக்கட்டிடம் ஒரு மிகப்பெரிய மாதா கோவிலின் மணிக்கூண்டு அவ்வளவுதான்.சரியான அடித்தளம் இல்லாததால் ஏற்பட்ட கோளாறால் அது சாய்ந்துவிட்டது. ஆனால் அதையும் அவர்கள் ஒரு சிறந்த கட்டிடமாக உலக அதிசயமாக கொண்டாடி விளம்பரம் செய்து பராமரித்து வருகிறார்கள். நாமும் சென்று பார்த்துவிட்டு வருகிறோம். சற்றே சிந்தித்தால் இதுபோல் எவ்வளவோ கட்டிடங்கள் நம்நாட்டில் கேட்பாரற்று பராமரிக்க ஆள் இல்லாமல் கிடக்கிறது. தமிழகத்தில் தஞ்சாவூர், தாராசுரம் கர்நாடகத்தில் பேளூர், ஹளேபேடு போன்று இன்னும் எத்தனை எத்தனையோ கோவில்களில் எண்ணிக்கையில் அடங்காத சிற்பங்களும் கட்டிடங்களும் அதன் சிறப்பை புகழை பரப்ப ஆளில்லாமல் கிடக்கிறது. ஏதோ அதைப்பற்றி தெரிந்த சிலர் சென்று பார்ப்பதோடு சரி. நம் நாட்டினரும் வெளிநாட்டிற்கு சென்று பார்ப்பதை
விரும்பும் அளவு உள் நாட்டில் உள்ள கலை களை காண விரும்பம் கொள்வதில்லை.இதற்கு ஒரு முக்கிய காரணம் நம்மிடையே இன்னமும் வெளிநாட்டு பொருட்களின் மேல் உள்ள மோகம் தனியவில்லை. இனியாவது சற்று நம்நாட்டு கலைகளையும் பராமரிக்க புகழை பரப்ப நம்மால் இயன்றதை செய்வோம்.
9 comments:
நல்ல பதிவு,
ஆனால் நாம் பின் தங்கி இருப்பது Marketing துறையில் நல்ல விஷயங்களை நாம் மக்களிடம் சரியாக எடுத்துச்செல்ல வேண்டும்.
200 சதவீத உண்மைதான். சந்தைபடுத்துதலிலேயே நாம் பின்தங்கி விடுகிறோம்...
மிக சரியான கருத்து. marketing இல்லாமல் எந்த பொருளும் விலைபோகாது. நன்றி திரு சந்தோஷ் & தமிழ்பயணி.
இதே கருத்து தான் எனக்குத் தஞ்சை பெரியக் கோயிலைப் பார்க்கும் போது ஏற்பட்டது...மாற்றான் தோட்டத்து மல்லிகையில் மயங்கிக் கிடங்கும் நமக்கு நம் தோட்டது பூக்களின் மீது ஈர்ப்பு ஏற்படுவது எக்காலமோ?
Hi Anusuya,
Congrats...Anusuya
Your BLOG entree got published in DINAMALAR Daily News Paper. It came in DotCom Section(2n Page) of Feb 01 2006 Issue.
Keep Bloging... :-)
நன்றி திரு சுவாமிநாதன் அவர்களே தங்களால்தான் தினமலர் செய்தி அறிந்தேன். நன்றி பலபல.
தினமலர் லெவலுக்கு பெரிய ஆளா நீங்க...
சூப்பர். அசத்துங்க...
இன்றைய வலைச்சரத்தில் உங்களது இந்தப் பதிவு அறிமுகம் ஆகியிருக்கிறது.
இணைப்பு:http://blogintamil.blogspot.in/2013/01/blog-post_15.html
பாராட்டுக்கள்.
உண்மையான கருத்தை சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
Post a Comment