Wednesday, January 25, 2006

குடியரசு தினவிழா

குடியரசு தினவிழா
அனைவருக்கும் குடியரசு தினவிழா நல்வாழ்த்துக்கள். பொதுவாக குடியரசு தினம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது விடுமுறை மட்டுமே. அதனையும் தாண்டி ஒரு சிலர் குடியரசை பற்றி நினைத்தால் அது அதிசயம்தான். நம் நாடு கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக குடியரசு நாடாக இருப்பதற்கு நாம் உண்மையிலேயே பெருமிதம் கொள்ள வேண்டும். வரும் காலங்களிலும் இந்த குடியாட்சி தொடர இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். நாம் எப்போது வருடப்பிறப்பு, தீபாவளி போன்று குடியரசு தினத்தையும், சுதந்திர தினத்தையும் கொண்டாட தொடங்குகிறோமோ அன்றுதான் நாம் உண்மையான குடிமக்கள் ஆகின்‍றோம். முன்‍பெல்லாம் குடியரசு தினத்தன்று பள்ளிகளுக்கு சென்று கொடியேற்றிவிட்டு வீட்டுக்கு வருவோம். அப்போது நமது தூர்தர்ஷனில் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் செங்கோட்டையில் குடியரசு தலைவர் கொடியேற்றும் நிகழ்ச்சி காண்பிக்கப்படும். அதில் இறுதியாக ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளின் அணிவகுப்பும் நடைபெறும் உண்மையிலேயே பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. ஒவ்வொரு குழுவும் தங்களுக்கென்று ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதற்கேற்றார்போல் அலங்காரம், நடனம், இசை அமைத்துக் கொண்டு ஒரே சீராக செல்வது மிகவும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த வருடமும் குடியரசு தினத்தை ஒவ்வொருவரும் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்.

7 comments:

பாலு மணிமாறன் said...

Nice View.

But, i have a request. Please try to separate this whole "pathivu" in to few paragraphs. It will make reading very easy.

And many will read and comment.

Regards

அனுசுயா said...

வருகைக்கு நன்றி. தங்களின் அறிவுரை ஏற்கப்பட்டது. பின் வரும் பதிவுகளில் பத்தி பிரித்து எழுதுகிறேன்.

சிங். செயகுமார். said...

hi anusuya ! ur blog commented in dinamalar dated on feb 1.2006.congrats.

அனுசுயா said...

வாழ்த்துக்கு நன்றி திரு ஜெயக்குமார் அவர்களே.


வருகைக்கு நன்றி திரு ராஜா அவர்களே.

Jayachanthar said...

It is a good blog. Keep it up !!!

அனுசுயா said...

நன்றி ஜெயகுமார் தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்

ஹாரி said...

Hi Anu

//ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன்//

I read somewhere....

The world's largest democracy celebrates its D-Day by parading the Weapons of Mass Destruction, mostly made by others, bought mostly on loan, used often on its own people.

What we've to say ?