Saturday, September 29, 2007

ஆப்பிள் பூவே நீ யாரோ.. ...


"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ"னு பாட்டு கேட்டுருக்கறோம் ஆனா ஆப்பிள் பூவ பத்தி பாட்டு இல்ல. இங்க பாருங்க ஆப்பிள் பூ சூப்பரா இருக்குது. மத்த எல்லா பூவயும்விட இது அழகா இருக்கு.
ஆப்பிள் மரம் 6 லயிருந்து 30 அடி வரை வளரும். அது மண்ணோட தன்மைய பொறுத்தது. ஆப்பிளோட சரித்திரம் தெளிவா கிடையாது ஆனா இது காஸ்பியன் மற்றும் கருங்கடலுக்கு நடுவுல இருந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் கருதுறாங்க.இது ரோமானியர் களுக்கும் கிரேக்கர்களுக்கும் பிடித்தமான உணவா இருந்திருக்குது. அவ்ளோ ஏனுங்க ஆதாம் ஏவாள் கதைலயே ஆப்பிள்தான வருது.
அ‍மெரிக்காவுக்கு ஆப்பிள் வியாபாரிகளாலும் ஐரோப்பியர்களாலும் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.





ஆப்பிள் பூ பெரிய அளவுல வெள்ளை மற்றும் இளம் ரோசா வண்ணத்துல இருக்கும். 2 - 4 இன்ச் அளவுல நடுவுல அதிகமான மகரந்த துகள்களுடன் இருக்கும். இந்த மலரில் தேன் அதிக அளவுல இருக்கறதால தேனீக்களுக்கு எப்பவும் கொண்டாட்டம்தான். இத விட சிறப்பு இந்த மலரோட நறுமணம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் பாத்ததில்ல நீங்க யாராவது பாத்திருந்தா சொல்லுங்கப்பா.
ஆப்பிள் பழத்த பத்தி ஒன்னும் சொல்ல வேண்டியதில்ல நமக்கே தெரியும்ல.ஆப்பிள் பழத்தோட விதையும் வேர்களும் மிக விஷத்தன்மையுள்ளதுனு சொல்லறாங்க.இதுல முக்கிய விசயம் ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டா டாக்டரே தேவையில்லங்கற பழமொழிதான். பாத்துங்க டாக்டருக்கு படிக்கறவங்க யாரும் ஆப்பிள் மரத்த வளர்த்துடாதீங்க அப்புறம் உங்க தொழிலுக்கு கஷ்டம் ஆயிடும். :)

11 comments:

குசும்பன் said...

"ஆப்பிள் பழத்தோட விதையும் வேர்களும் மிக விஷத்தன்மையுள்ளதுனு சொல்லறாங்க."

அப்படியா விதையுமா? ஜூஸ் கடையில் எல்லாம் விதையை எல்லாம் எடுக்க மாட்டாங்களே!!!

ஜே கே | J K said...

//இந்த மலரோட நறுமணம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் பாத்ததில்ல நீங்க யாராவது பாத்திருந்தா சொல்லுங்கப்பா.//

அதெப்படிங்க நறுமணத்தை பாக்குறது.
:(

//குசும்பன் said...
"ஆப்பிள் பழத்தோட விதையும் வேர்களும் மிக விஷத்தன்மையுள்ளதுனு சொல்லறாங்க."

அப்படியா விதையுமா? ஜூஸ் கடையில் எல்லாம் விதையை எல்லாம் எடுக்க மாட்டாங்களே!!!//

ரிப்பீட்டேய்!!!

MyFriend said...

ஆப்பிள் மரத்துல பூப்பூக்கும்ங்கிற விஷயமே இப்போதான் எனக்கு தெரிய வந்திருக்கு. :-)

MyFriend said...

//இத விட சிறப்பு இந்த மலரோட நறுமணம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் பாத்ததில்ல நீங்க யாராவது பாத்திருந்தா சொல்லுங்கப்பா.//

சத்தியமா நானும் பார்த்ததில்ல.

MyFriend said...

//பாத்துங்க டாக்டருக்கு படிக்கறவங்க யாரும் ஆப்பிள் மரத்த வளர்த்துடாதீங்க அப்புறம் உங்க தொழிலுக்கு கஷ்டம் ஆயிடும். :)//

:-)))))

G.Ragavan said...

இதான் ஆப்பிள் பூவா....அழகா இருக்கே. அதான் பழமும் அழகா இருக்கு. கிரீன் அப்பிள்னு சொல்றாங்களே...அதோட பூ எப்பிடி இருக்கும்?

அனுசுயா said...

குசும்பன் : ஆமாங்க அப்டிதான் ஆராய்ச்சியாளர்கள் சொல்லறாங்க. அதுக்காக நாம ஜீஸ் குடிக்காம இருக்க முடியுமா

JK : ஆகா தெரியாதனமா அடிச்சுட்டேனுங்க :)

அனுசுயா said...

மை ப்ரெண்ட் : என்ன கொடுமையிது பூ பூக்காம எப்டி பழம் வரும். கண்ணு நீ இன்னும் நிறைய படிக்கனும் :)


GRagavan : எல்லா ஆப்பிள் பூக்களும் இப்டிதானுங்க இருக்கு ஆனா கொஞ்சம் கலர் வித்தியாசம் இருக்கு. பொதுவா இளம் ரோஜா நிறம் க்ரீன் ஆப்பிளோட மட்டும் வெளிர் க்ரீம் நிறமா இருக்குங்க.

Unknown said...

ஆப்பிள் பூவ இப்பத்தான் நான் முதன்முதலாகப் பார்க்கிறேன்..நன்றி அனுஷையா..

Unknown said...

ஐ ஆப்பிள் பூ அழகா இருக்கே

அனுசுயா said...

360 degree : Thanks for u r comments :)

Dev : I apple poo illa verum Apple poo :)