Wednesday, October 03, 2007

போராட்டங்களும் வெற்றிகளும்

கடந்த வாரம் ஒரு பெரிய பந்த் நடந்து முடிஞ்சிருக்கு அப்டியே காந்தி ஜெயந்தியும் வந்து போயிடுச்சு. எனக்கு இந்த ரெண்டையும் பார்க்கும்போது இந்த போராட்டங்களால் என்ன வெற்றிகளை அடைஞ்சிருக்கோம்னு தெரியல. காந்தி காலத்துல அவரு உண்ணா விரதம் இருந்தாரு ஆங்கிலேயர்களை விரட்ட. ஆனா அதுல பொது மக்களுக்கு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் உடனே போராட்டத்த கைவிட்டுடுவாரு. அதுவும் போராட்டம்தான், இப்பவும் நடத்தறாங்களே தலைவர் போராட்டம் அறிவிக்கறதுக்கு முன்னாடியே பொது மக்கள் சொத்துக்கு கேடு விளைவிக்கனும்னு தெளிவா இருக்காங்க.
பஞ்சாலை நகரம் (Cotton City) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் அப்டினு பேர் வாங்குன ஊர் எங்க கோயமுத்தூர். ஏன் இந்த பேர்னா இங்க இருக்கற அளவு பஞ்சாலைகள் (cotton Manufacturing Mills) தென்னிந்தியாவுல வேற எங்கயும் கிடையாது. இங்க எப்டியும் வீட்டுக்கு ஒருத்தர் பஞ்சாலை தொழிலாளர் இருந்திருப்பாங்க. ஆனா இப்ப நிலைமை சுத்தமா மாறி போச்சு. பஞ்சாலை எல்லாத்தையும் மூடிட்டு காம்ளக்ஸ், ரியல் எஸ்டேட் அப்டினு மாத்திட்டாங்க. காரணம் ஸ்‍ரைக், ஏன் பண்ணறோம்? எதுக்கு பண்ணறோம்? னு யோசிக்காம மக்கள் பண்றத பாத்து பயந்துபோயி மில் மொதலாளிகள் மூடிட்டு போயிடறாங்க. உதாரணமா ஒரு நிரந்திர தொழிலாளி ஒரு நாளைக்கு 120 ரூபாய் முதல் 170 வரை சம்பாதிப்பவர் இந்த பெரிய ஆலை மூடப்படும்போது சிறு சிறு வேஸ்ட் காட்டன் யூனிட் என அழைக்கப்படும் சின்ன சின்ன தொழிற்சாலைகளில் வே‍லை செய்ய நேர்கிறது அவர்களுக்கு அங்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு 40 முதல் 70 வரை மட்டுமே. இது மட்டும் அல்ல அங்கு போனஸ் மருத்துவ செலவு எதுவும் கொடுக்கப்படுவதில்லை காலம் முழுவதும் அவர்கள் தற்காலிக பணியாளர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனாலும் பெரிய ஆலைகளில் போனஸ் பேச்சு வார்த்தையில் சற்று தோல்வி ஏற்பட்டாலும் உடனே ஸ்ரைக் செய்து மில்லை மூடிவிட்டு சிறு தொழில்சாலைக்கு தற்காலிகமாக செல்கிறார்கள். இதனால் நஷ்டம் கட்டாயம் தொழிலாளர்களுக்குதான் அதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.
அதே போல ப்ரிக்கால் ஒரு உதாரணம், அங்க கடந்த ஆண்டு போனஸ் மட்டும் 62 சதவீதம் கொடுக்கப்பட்டது. இது தனியார் துறையில் மிக உயர்ந்த அளவு. ஆனால் இந்த ஆண்டு ஐந்து தொழிலாளர்களை மாநிலம் விட்டு மாநிலம் இட மாற்றம் செய்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்ரைக் செய்து கொண்டு அந்த தொழிற்சாலையை மூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளாரகள். இந்த காலத்தில் ஐடி துறையில் நாடு விட்டு நாடே மாற்றினாலும் ஒருவரும் மூச்சு விடுவதில்லை. :)
இப்படி போராட்டம் செய்து செய்து என்ன சாதித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அதே போல இனிமேலாவது போராட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அப்படி முன் அனுமதி பெறுபவர் கட்டாயம் கொஞ்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் சட்டம் வந்தாலாவது திருந்துவார்களோ என்னவோ ?

5 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

"ஷேம் ஷேம் பப்பி ஷேம்"

உங்க ஸ்டேட்டஸ் மேசேஜ் சரியாதான் இருக்கு. :-)

தேவ் | Dev said...

என்னாச்சு அனு பொங்கிட்டீங்க? ம்ம் நீங்க சொல்லுற விஷயங்கள் அனைத்து நியாயமே.. ஆனால் யோசிக்க வேண்டியவர்கள் யோசிப்பார்களா என்பதே கேள்வி?

கோபிநாத் said...

சரியாக தான் சொல்லியிருக்கிங்க....ஆனா என்ன செய்ய முடியும் எல்லாத்திலும் அரசியல்... ;-(

அனுசுயா said...

மை பிரெண்ட் : இதுலயும் நீதான் firstu :)

தேவ் : பொங்கவெல்லாம் இல்லீங்க சின்ன ஆதங்கம்தான் கொஞ்சம் யோசிச்சு செஞ்சா எல்லாருக்கும் நல்லதுதான்

கோபிநாத் : நன்றிங்க பின்னூட்டத்துக்கு அரசியல் மட்டும்னு சொல்ல முடியாது மக்கள் அறிவு முதிர்ச்சி அடையனும்

harry said...

Hi Anu,

During my last visit to the city, I saw many factories shut down for years.

Lot of land inside the city being wasted.