Friday, October 05, 2007

முகவரி மறந்ததே !



இன்று நான்

வீடு திரும்ப மாட்டேன்


உன் பிசாசு நினைவுகள்

என் வீட்டிற்கான பாதைகளை

கலைத்து விட்டன


என் வீட்டிற்கு வழிகாட்டும்

விளக்குகளை உன்

பிரியத்தின் கண்களின் வெளிச்சம்

மூழ்கடித்துவிட்டன


என் வீட்டின் எண்களை

உனது பறவைகள் தானியங்களெனெ

கொத்திச் சென்றுவிட்டன


இனி நான் வீடென்று நம்பிய

என் வீட்டிற்கு

ஒரு போதும் திரும்ப மாட்டேன்
டிஸ்கி : கவிதை எழுதிய நண்பருக்கு நன்றி. அப்புறம் யாரும் இதை படிச்சிட்டு நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு நினைச்சு சந்தோசப்படாதீங்க. :)

55 comments:

ILA (a) இளா said...

காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புல வரனும்.

Anonymous said...

சார் அட்ரஸ் தெரியலை. போஸ்ட் ரிட்டர்ன் பண்ணிடவா?

MyFriend said...

நீங்க எப்போ கவிதாயினி ஆனீங்க?

MyFriend said...

ஒன்னுமே புரியல உங்க கவிதையில

MyFriend said...

திருவிழால யாராவது காணாமல் போயிட்டாங்கலா?

MyFriend said...

இல்ல வீட்டை விட்டு ஓடியாச்சா?

MyFriend said...

குச்சி மிட்டாய் தரலைங்கிற ஒரு ரீசனுக்கெல்லாம் இப்படி பண்றது நல்லா இல்ல. :-))))

MyFriend said...

கூட போறது யாரு அது??

MyFriend said...

போங்கப்பா. ஓனர் கடையை மூடிட்டாங்க.. வாங்க வேற களத்தை தேடி போகலாம். :-)

ILA (a) இளா said...

ஓஹ் வீடு மாறி வந்துட்டேனா? சரி சரி., சாப்பாடு போடுங்க சாப்பிட்டே போறேன்

Anonymous said...

உங்க வீடு, என் வீடு . என் வீடு உங்க வீடு. விடு விடு எல்லார் வீடும் நம் வீடு

Unknown said...

சிபி நேத்து அண்ணாநகர்ல்ல காணாமப் போன விசயம் கவிதை வரைக்கும் வந்துருச்சா..அதை அனு வேற பதிவாவேப் போட்ருக்காங்களே...:)))

Anonymous said...

நாங்க 4 பேரு. எங்களுக்கு வேலையே சோக கவிதை போடுற பதிவுல கும்மி அடிக்கிறதுதான். இதுவே எங்க தத்துவம்

ஜே கே | J K said...

//உன் பிசாசு நினைவுகள்
என் வீட்டிற்கான பாதைகளை
கலைத்து விட்டன//

பக்கத்துல தான ஈரோடு. அந்த எபெக்ட் நல்லாவே வேலசெய்யுது.

Anonymous said...

அண்ணாநகர்ல காணாம போன சிபி தம்பி நகர்ல கிடைப்பாரா? ஆராயும் தனிப்படை

Anonymous said...

ஆமா இங்க என்ன நடக்குது?

Anonymous said...

//உன் பிசாசு நினைவுகள்//
பேய காதலிச்சா வேற எப்படி நினைவு வருமாம்?

MyFriend said...

கும்மிக்கு வர்றவங்க எல்லாம் வாங்க.. ஒருத்தர் 10 பின்னூட்டம் போடலாம்.. ஓடி ஓடி வாங்க.. :-)

Anonymous said...

//இன்று நான்
வீடு திரும்ப மாட்டேன்//

ஏங்கன்னு இந்த சந்தோசமான செய்திய இவ்வளவு லேட்டா சொல்ற.

MyFriend said...

//J K said...
//உன் பிசாசு நினைவுகள்
என் வீட்டிற்கான பாதைகளை
கலைத்து விட்டன//

பக்கத்துல தான ஈரோடு. அந்த எபெக்ட் நல்லாவே வேலசெய்யுது.
//

நானும் அதேத்தான் சொல்றேண். ஈரோட்டு எஃபெக்டு கோவை வரை பரவிடுச்சு.. இன்னும் விட்டா இந்தியாவே இந்த நோயால் அவதியுற நேரும். :-(

Anonymous said...

//டிஸ்கி : கவிதை எழுதிய நண்பருக்கு நன்றி. அப்புறம் யாரும் இதை படிச்சிட்டு நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு நினைச்சு சந்தோசப்படாதீங்க. :)//

ஏங்கன்னு , என்னோட சந்தோசத்துக்கு அற்ப ஆயுள் தானா?

Anonymous said...

//அண்ணாநகர்ல காணாம போன சிபி தம்பி நகர்ல கிடைப்பாரா? ஆராயும் தனிப்படை//

அவரைத்தான் அக்கா காலணிக்கு கடத்திட்டோமே.. இன்னும் வெவரம் புரியா பச்சை புள்ளையாவே இருகீயளே??

Anonymous said...

இதனால் எல்லாருக்கும் நாங்க என்ன சொல்றோம்னா. இந்த நாள் இனிய நாள்.
விட்டது சனி, அடுத்தது ஞாயிறு, அடிடா கோழிய. வருடா மீனை. ம்ம், கிளப்புங்கள் ஆட்டத்தை

ஜே கே | J K said...

//Labels: கவிதை//

ஆமா, கவிதை எங்கே?

Anonymous said...

//தெரியாதவன் said...
ஆமா இங்க என்ன நடக்குது?//

நடக்கத் தெரியாததனால தான் இந்த அழுவாச்சியே. கேள்வி கேட்டா புடிக்கும், கேக்குறது நாங்களா மட்டும் இருக்கனும்

ஜே கே | J K said...

//கிறுக்கி :அனுசுயா //

என்னங்க இப்படி இருக்கு?

ஒருவாட்டி நல்லா செக் பண்ணுங்க.

Anonymous said...

இந்த வியாதிய கட்டுப்படுத்துறது ரொம்ப கஷ்டம். சிகுன் குனிய்யாக்கு அப்புறம்., இதுதான் புரியாத வியாதி. இந்த மாதிரி சோக கவிதை எழுதறவங்களை நாடு கடத்தினாதான் உண்டு, சாரி

Anonymous said...

ஆஹா.. வந்துடுச்சு.. கமேண்டு வந்துடுச்சு

Anonymous said...

//அவரைத்தான் அக்கா காலணிக்கு கடத்திட்டோமே.. இன்னும் வெவரம் புரியா பச்சை புள்ளையாவே இருகீயளே??//

அப்படியே வேன்ல ஏத்தி ரைட்ல போய், லெப்டுல மாறி, ஸ்ட்ரெய்டா போய் மறுபடி லெப்டு, மறுபடி ரைட்டு மறுபடி லெப்டு, இல்ல ரைட்டு ....

அடப்போங்கடா எங்கயோ கொண்டு போங்க...

கும்மி, மொக்க, கவுஜனு அந்த ஆளு பண்ற லொல்லு தாங்கல...

Anonymous said...

//என் வீட்டிற்கு
ஒரு போதும் திரும்ப மாட்டேன்//
ஏன் ரிவர்ஸ் கியர்லையே வரப்போறீங்களா?

Anonymous said...

ஆத்தா ஆடு வளர்த்துச்சு.. கோழி வளர்த்துச்சு... மீன் வளர்த்துச்சு.. ஆனா, நால் மட்டும் வளர்க்கலை. அதுக்குதான் என்னை வளர்த்துச்சுல..

நாப் போறேன்..
இன்று வீடு திரும்ப மாட்டேன்..

Anonymous said...

//முகவரி மறந்ததே !//

அப்பாடி, அட்ரஸ் மறந்துட்டியா?

எங்க சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவியோனு பயந்துட்டோம்...

Anonymous said...

எல்லையில பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுறிவிட்டாங்க.. இந்தியாவை நாந்தான் காப்பாத்தணும்..

நான் இன்று வீடு திரும்ப மாட்டேன்

Anonymous said...

//J K said...
//Labels: கவிதை//

ஆமா, கவிதை எங்கே?//

ஆமா கேள்வி எல்லாம் நீ கேக்கப்படாது.

நீ ஏன் கேள்வி கேக்குற...

Anonymous said...

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீயே கண்ணு..
நாந்தான் இன்னைக்கு வீட்டுக்கு திரும்ப மாட்டேனே..

Anonymous said...

நான் வீடு திரும்ப மாட்டேன்!

அது!!!!

Anonymous said...

எதையும் கஷ்டப்பட்டு செய்யகூடாது.. இஷ்டப்பட்டு செய்யணும். அதனால இன்னைக்கு நான் வீடு திரும்ப மாட்டேன்

Anonymous said...

வீட்டுக்கு திரும்ப போக முடியலைன்னா நேரா போக வேண்டியதுதானே? இலல் சைட்ல துள்ளி துள்ளி ஓட வேண்டியதுதானே?

Anonymous said...

அவ்வ்வ்... முடியல....

Anonymous said...

//இன்று நான்
//வீடு திரும்ப மாட்டேன்

1. நீ திரும்பனா என்ன திரும்பாட்டி என்ன என்கிறார் உனது ஹாஸ்டல் வார்டன்

2. விட்டுது தொல்லை அடுத்த பிகர பார்க்கலாம் என்கிறான் அடுத்த ஜன்னல் பையன்

3.ஏன் நேற்றே வீட்டுக்கு வந்திட்டியா என்கிறார் ப்ரெண்ட்.

//உன் பிசாசு நினைவுகள்
//என் வீட்டிற்கான பாதைகளை
//கலைத்து விட்டன

1. நான் பிசாசை நினைத்து உனக்கு எப்படி
தெரியும்..? நான் அந்த அழகிய பெண்மோகினியை அல்லவா நினைத்திருந்தேன்.

2. ஆமா புறம்போக்கில் வூடு கட்டிட்டு வழியை
காணோமுன்னா இன்னா அர்ததம் என்கிறார் கவுன்சிலர்.

3. வூட்டுக்கு வர்ற வழியை கலைச்சிட இதென்ன சட்டமன்றமா உன் வீடும் வழியும்..என்கிறார் மத்திய அமைச்சர்.


//என் வீட்டிற்கு வழிகாட்டும்
//விளக்குகளை உன்
//பிரியத்தின் கண்களின் வெளிச்சம்
//மூழ்கடித்துவிட்டன

1. பியூசு போன பல்பை பார்த்து இப்படி
சமாளிக்க கூடாது.புது பல்பு வாங்கி போடு

2. அப்ப எங்க ப்ரியா கண்ணு என்ன லைட் ஹெவுசு லைட்டான்னு கேட்கிறார் ப்ரியா காதலர்..

3. வெளிச்சத்தில் முழ்கனும்னா எம்புட்டு அடிக்கனும் என்கிறார் நம் குடிமகன் ஆப்பா? புல்லா?


//என் வீட்டின் எண்களை
//உனது பறவைகள் தானியங்களெனெ
//கொத்திச் சென்றுவிட்டன

1. கி கி எனது தூது புறாவை அடிச்சு
சாப்பிடாய் அல்லவா அது இது சரியா போச்சு.

2. ஒழுங்கா வீட்டு நம்பர் பிளேட்டுக்கு ஆணி அடிக்காம வுட்டுபோட்டு என்ன டபாய்க்கிறே..

3. ஆனா பாரு எனது பறவைகளை நீ அடிச்சு சாப்பிட்டு விட்டு அவைகள் உனது எண்ணை கொத்தி சென்றதா கதை விடறேயே இதுநல்லா இருக்கு..

//இனி நான் வீடென்று நம்பிய
//என் வீட்டிற்கு
//ஒரு போதும் திரும்ப மாட்டேன்

1. அப்பாடா ஒரு தொல்லை ஒழிஞ்சுது என்கிறார் குடும்ப உறுப்பினர் ஒருவர்.

2. வூட்டுக்குள்ளேயே இருந்துகிட்டு எப்படி வூட்டுக்கு திரும்ப முடியும் என்கிறார் நண்பர்.

3. சரி இனி அதை வீடென நம்பாமல் கோவிலென நம்பி திரும்பி வந்திடுவாய் அல்லவா..?

Anonymous said...

ஒரு நாள் வீடு திரும்பாதது முக்கியம் இல்ல. கடைசிவரை வீடு திரும்பாம இருக்கனும் அது தாம் முக்கியம்.

Anonymous said...

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நான் வீடு திரும்ப மாட்டேன்.

ஜே கே | J K said...

இன்னும் 8 கமெண்ட் இருக்கே!

ஜே கே | J K said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

இது வேற வந்துட்டே இருக்கு.

Anonymous said...

//ஏன் நேற்றே வீட்டுக்கு வந்திட்டியா என்கிறார் ப்ரெண்ட்.//

இன்னிக்கு வீட்ட விட்டு போனாதானே திரும்பனும். நான் வீட்டுக்குளேயே தான் இருக்கேன்.

Anonymous said...

ஓனர் சரியில்லப்பா. கமெண்ட் பப்ளிஸ் பண்ண லேட் ஆகுது.

சீக்கிரம் 50 போட்டுட்டு போலாம்னு பாத்தா ...

Anonymous said...

கமெண்ட் எல்லாம் வ்ருமா வராதா?

Anonymous said...

48

ஜே கே | J K said...

சரி இன்னும் ஒன்னு அடிச்சிடலாம்

ஜே கே | J K said...

இது 50.

கோபிநாத் said...

\\J K said...
இது 50.\\

இது 51 :))

Pavals said...

என்ன கொடுமை சார் இது :)

இராம்/Raam said...

கவுஜ'யை விட கமெண்ட்'ஸ் தான் நல்லாயிருக்கிற உண்மைய சொல்லிக்கிறேன்... :))

ஜே கே | J K said...

//கவுஜ'யை விட கமெண்ட்'ஸ் தான் நல்லாயிருக்கிற உண்மைய சொல்லிக்கிறேன்... :))

Posted by இராம்/Raam//

அய்யய்யோ...

இப்படி உண்மைய சபைல ச்ல்லிட்டீங்களே!.

G3 said...

//டிஸ்கி : கவிதை எழுதிய நண்பருக்கு நன்றி//

இதைத் தான் சகவாச தோஷம்னு சொல்லிறாய்ங்களோ ;)