இரண்டாம் நாள்
அடுத்த நாள் காலைல தூங்கி எழுந்து பார்த்தா அவரு எனக்கு முன்னாடி ரெடியா இருந்தாரு எப்படினு கேட்டா எல்லாம் சிக்கன் புண்ணியம் 3 மணிக்கே எழுந்தாச்சுனு சொன்னாரு. அங்கன விடுதிகாரங்களே இலவசமா காலை உணவு குடுத்தாங்க சாப்பிட்டுட்டு தயாரானவுடனே அவருடைய மாணவி அந்த ஊருக்கார பொண்ணு வந்து நின்னாங்க. அவங்க கிட்ட இன்னிக்கு எங்க போலாம்னு விசாரிச்சோம் பக்கத்துல இருக்கற கோட்டைய பார்க்கலாம்னு சொல்லுச்சு ஆனா எங்களுக்கு உள்ளூரு வேண்டாம் வெளியூருல சுத்தி பாக்கலாம்னு சொன்னோம். ஏன்னா அந்த பொண்ணுக்கு ஸ்வாகிலி தெரியும் வழி கேட்கறது ரொம்ப எளிது. நாங்க ஊருல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி அலுவலகத்துல வேலை செய்யற ஒரு பாட்டி சொன்னாங்க சான்சிபார்ல ஒரு குகை இருக்கும் கண்டிப்பா போயிட்டு வாங்கனு. சரி இன்னிக்கு அந்த இடத்துக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டு வழிகேட்க ஆரம்பிச்சோம். சரியா காலை 11 மணிக்கு அந்த ஊருக்கு போற பேருந்து வந்துச்சு. இதுல முக்கியமான விசயம் இந்த தான்சானியா முழுக்கவே பஸ்னா உடனே நம்ம ஊரு பஸ் மாதிரினு நினைக்காதீங்க, நம்ம ஊரு ஆம்னி வேன் தான் இந்த ஊருல பஸ். எப்படியோ பேருந்து பிடிச்சு 1 மணிநேரம் பயணம் செஞ்சு ஒரு கிராமத்துல இறக்கி விட்டுட்டு போயிடுச்சு. அங்க பெயர் பலகை ஒன்னு குகைக்கு போக இங்கயிருந்து 1 கி மீட்டர் நடக்கனும்னு போட்டிருந்துச்சு சரி 1 கி மீ தான நடக்கலாம்னு நடக்கறோம் நடக்கறோம் நடந்துகிட்டே இருக்கோம் இடம் மட்டும் வரல இதுல அந்த ஊரு குழந்தைங்க ஒரு 10 பேரு எங்க பின்னாடியே வேடிக்கை பார்த்துகிட்டு வந்தாங்க. எப்படியோ காடு மேடு ஏறி இறங்கி அந்த இடத்துக்கு போய் சேர்ந்தோம். அங்க பார்த்தா ஒரு கிணறு மட்டும் இருந்துச்சு அதுக்கு 1 டாலர் கட்டணம் வேற. திட்டிக்கிட்டே வாங்கிட்டு பக்கத்துல போனோம். அப்பகூடவே ஒரு பையன் வழிகாட்டி பணி செய்ய டார்ச் எல்லாம் எடுத்துகிட்டு வந்தான். அத பார்த்து நாங்க சிரிச்சோம் சின்ன கிணத்த சுத்தி பார்க்க இவ்ளோ ஆர்பாட்டமானு.
அப்புறம் அசட்டையா கிணத்து படில இறங்க ஆரம்பிச்சோம் கொஞ்ச தூரம் போன பிறகு அப்படியே மலைச்சு போயி நின்னுட்டோம். அம்மாடி எவ்ளோ பெரிய குகை அசந்து போயிட்டோம். மேல பாக்க வெறும் கிணறு மாதிரி சின்னதா இருக்கு ஆனா உள்ளே பெரிய குகை. சரி இந்த பையன கேட்போம்னு சொல்லுப்பா தம்பி இந்த இடம் என்ன ஏதுனு கேட்க ஆரம்பிச்சோம். அவன் சொன்ன கதை “இந்த இடத்துக்குபேரு மங்காபானி (Mangapwani) அதாவது மங்கானா அரேபியர்கள்னு அர்த்தம் பானினா தண்ணி அதாவது இந்த இடத்துக்கு அரேபியர்களின் கடற்கரைனு பேரு. இங்க இந்த குகை சான்சிபார் புரட்சி 1960ல நடந்துச்சு அதுக்கு அப்புறமா கட்ட பட்டு இருக்கலாம். புரட்சிக்கு பிறகு அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. அந்த டைம்ல அடிமைகள மறைச்சு வெச்சு வியாபாரம் பண்ண இந்த குகைகளை உபயோகம் பண்ணி இருக்காங்க. வெளில இருந்து பார்த்தா சாதாரண விவசாய நிலம் அதுல ஒரு சின்ன கிணறு அவ்ளோதான் தெரியும் ஆனா உள்ள ஆயிரக்கணக்கான அடிமைகளை மறைச்சு வெச்சுக்கலாம். அது மட்டும் இல்ல இந்த குகைல இருந்து 3 கிமீ தூரத்துக்கு குகை போகுது அது கடற்கரைல போயி முடியும். இங்க இருந்து அடிமைய நிலத்துக்கே கூட்டி வராம அப்படியே குகை வழியா கடற்கரைக்கு கொண்டு போயி கப்பல்ல ஏத்தி வெளி நாட்டுக்கு அனுப்பிடலாம். இப்ப இங்க ரெண்டு வழி இருக்கு ஒன்னு நல்ல வழி ஆனா 3 கி மீ தூரம் மற்றது 1 கி மீ தூரம் ஆனா வழி ரொம்ப மோசமா இருக்கும். நீங்க எந்த வழிய தேர்ந்து எடுத்தாலும் அது வழியா போலாம்னு” சொல்லி நிறுத்துனான்.
அது மட்டும் இல்ல இந்த இடத்தை கண்டு பிடிச்சது ஒரு கதை ஒரு தடவை ஆடுமேய்க்கும் போது ஆடு தவறி கிணத்துல விழுந்திருக்கு ஆனா ஆடு சாகவும் இல்லாம கத்திக்கிட்டே இருந்திருக்கு அதனால கயிறு கட்டிகிட்டு இறங்கி பார்த்திருக்காங்க அப்பதான் இவ்ளோ பெரிய இடம் இருக்கறதே தெரிஞ்சிருக்கு.”
இந்த கதையயும் இடத்தையும் பார்த்தே மலைச்சு நின்னாச்சு சரிகொஞ்ச தூரம் போயி பார்க்கலாம் அப்புறம் முடிவு பண்ணலாம்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சோம். கொஞ்சம் போனவுடனே ஒரு சின்ன குளம் மாதிரி இருக்கு அதுல தண்ணி இருந்துச்சு அந்தபையன் இதுரொம்ப சுத்தமான தண்ணி எந்த அழுக்கும் கிடையாது பக்கத்து கிராம மக்கள் இந்த தண்ணிய மருந்து மாதிரி உபயோகம் பண்ணறாங்க. இதை குடிச்சா நோய் நீங்கும்னு நம்பறாங்கனு சொன்னான். சரினு நாங்களும் ஆளுக்கு கொஞ்சம் குடிச்சு வெச்சுகிடடோம்ல :).
அப்படியே உள்ள போக போக வவ்வால் நிறைய கூரைல இருந்துச்சு. பத்தாததுக்கு வேர்வை பயங்கரமா வர ஆரம்பிச்சுது. இதெல்லாம் டிஸ்கவரி சேனல்ல பார்க்கதான் நல்லா இருக்கும் என்னால முடியாதுனு சொல்லிட்டு நான் வரல சாமி ஆள விடுங்கனு சொல்லி திரும்புனேன் அந்த பொண்ணும் என் கூட வந்திடுச்சு ரெண்டு பேரும் மேல படிகிட்ட வந்த பிறகு தான் உயிரே வந்திச்சு. எங்க வீட்டுல அவரு இன்னும் கொஞ்ச தூரம் போறேனு உள்ள போனாரு ஒரு கால் மணிநேரம் கழிச்சு அவங்களும் திரும்ப வந்தாங்க. என்ன பார்த்திங்க முழுசா போலையானு கேட்டோம் அப்ப சொல்லறாங்க உள்ள போக போக வவ்வால் அதிகமா இருக்கு அது மட்டும் இல்ல மூச்சு திணறலும் ஆரம்பிச்சிடுச்சு அதான் வந்திட்டோம்னாங்க. சந்தோசம் திரும்ப போலாம்னு சொன்னப்ப அந்த கைட் பையன் இன்னொரு வழி இருக்கே அதுலவேணா போயி பார்க்கலாம்னு சொன்னான். அங்க நானும் அந்த பொண்ணும் மட்டும் போனோம். அட அந்த வழி கொடுமையிலும் கொடுமையா இருந்துச்சு ஒரே கல்லு கல்லா ஆண்டவா எப்டிதான் அங்க அடிமை இருந்தாங்களோ ரொம்ப பாவம் அவங்க. ஒரு 20 அடிக்கு மேல நடக்க முடியல போட்டோ மட்டும் எடுத்துகிட்டு திரும்ப வந்திட்டோம். மேல நிலத்துக்கு வந்த பிறகுதான் நிம்மதியாச்சு. நிஜமா வாழ்க்கைல மறக்க முடியாத அனுபவம் அது.

வெளிய வந்து மறத்துக்கு அடியில உக்கார்ந்து இருக்றோம் நம்ம கூட வந்த பசங்க எல்லாம் மரம் ஏறி பழம் புடுங்கி குடுத்தாங்க அட என்ன பழமா இருக்கும்னு பார்த்த நம்ம எழந்தைப்பழம்தான். ஒரே சநதோசம் ஆயிடுச்சு அவங்க நிறைய புடுங்கி புடுங்கி குடுத்தாங்க. அப்புறம் ஒரு பையனோட மிதிவண்டி வாங்கி கொஞ்ச தூரம் ஒட்டினோம் அவங்கள ஒளிபடம் எடுத்து காட்டினவுடனே ரொம்ப சந்தோசம் ஆயிடுச்சு அவங்களுக்கு.
அடுத்த இடத்துக்கு போகலாம்னா அதும் இன்னும் 2 கி.மீ தள்ளி இருக்குனாங்க. இப்பவே சலிச்சு போச்சு பக்கத்துல ஒரு விவசாயிகிட்ட மாட்டு வண்டில கொண்டு விடுங்கனு கேட்டோம் ஆனா அவரு மாட்டேன் சொல்லிட்டாரு அதனால நடராஜா சர்வீஸ்தான். காட்டு வழில ரெண்டு பக்கமும் விவசாய நிலம். ஆனா வெயில் கொழுத்தி எடுத்திடுச்சு :(. வேர்க்க விறுவிறுக்க அங்கபோயிசேர்நதோம். அங்க ஒன்னும்பெரிசா இல்ல நிலத்துக்கு அடில ஒரு ரெண்டு அறை மாதிரி கட்டி இருக்காங்க அடிமைகளை கப்பல் ஏத்தறதுக்கு முன்னாடி அடைச்சுவெக்கிற இடம் அது. கீழ இறங்கி பார்த்திட்டு இருக்கும்போது ஒரு பொந்துல இருந்து பாம்பு தலைய நீட்டிகிட்டு இருந்திச்சு நான் பார்த்து அலறிமேல வந்திட்டேன். ஆனா பின்னாடி வந்தவங்க அது பாம்பு இல்லவேற ஏதோ விலங்குனு சொன்னாங்க இருந்தாலும் பயமாதான் இருந்துச்சு. அந்த இடத்துக்குபேரு ஸ்லேவ் சாம்பர்(Slave Chamber). அங்க இருந்து எட்டி பார்த்தா கடல் தெரியுது. அங்கபோயி நல்லா கடல்ல நின்னு நிறைய போட்டோ எடுத்தோம். அழகான ரம்மியமான இடம் இயற்கை இந்த நாட்டுக்கு ரொம்ப அழக குடுத்திடுச்சுப்பா. எங்க பார்த்தாலும் அழகா இருக்கு. ஆள் நடமாட்டமே இல்லாத கடற்கரை அவ்ளோ அழகா தனியா இருக்கு. கூட வந்தபையன் இந்தி சினிமா ரொம்ப பார்த்து பார்த்து மாதுரி தீட்சித், சல்மான்கான் எல்லாரையும் கேட்டதா சொல்லி அனுப்புனான். அப்பதான் தெரிஞ்சுது இந்தி படம் எங்க எல்லாம் பிரபலமாகி ஆகியிருக்குனு.

எப்படியோ பேசி முடிச்சு திரும்ப கிளம்பனும்னு சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது எல்லாருக்கும் கால்வலி பின்னி எடுக்குது இனிமேலும் 2 கி மீ நடக்கற காரியமா தெரியல அதனால பக்கத்துல ஏதாவது கார் கிடைக்குமானு கேட்டோம் அந்த ஆளு இன்னும் உள்ள அரை கி மீ நடந்தா ஒரு உணவு விடுதி இருக்கும் அங்க டாக்சி கிடைக்கும்னு சொல்லிட்டு கூடவே நடந்து வந்தான். உள்ள காட்டுக்குள்ள ஒரு அருமையான விடுதி அது கடலுக்கு ரொம்ப பக்கத்துல அழகா இருக்கு அங்க எல்லாரும் வெள்ளை காரங்கதான் இருக்காங்க எப்படியோ ஒரு டாக்சிய கெஞ்சி கேட்டு முக்கியசாலை வரைக்கும் கொண்டு போய் விட சொல்லி கொண்டு வந்து விட்டான்.
இப்ப அடுத்தது மதிய சாப்பாடுக்கு என்ன பண்றதுனு பார்த்தோம் எல்லாருக்கும் பசி ரொம்ப அதிகம் நடந்து நடந்து. அங்க முக்கியசாலை சொல்லற எடத்துலயே ரெண்டு கடைதான் இருக்குது. அதுல ஒரு கடைல ஒன்னுமே இல்ல ஏன்னா எல்லாம் தீர்ந்திடுச்சு 3 மணிக்கே. இங்கெல்லாம் கடைனா ஏதோ பெரிசா நம்ம ஊரு கடைங்க மாதிரினு நீனைச்சுகாதீங்க, தென்ன ஓலை போட்டு ஒரு குடிசை மாதிரி இருக்கும் அதுல நாலு பெரம்பு சேர்போட்டு பலகைல டேபிள் இருக்கும் அவ்ளோதான். எப்படியோ ஒரு கடைல ஆளுங்க இருந்தாங்க அங்க போயி என்ன சாப்பிட இருக்குனு கேட்டோம்.
அவன் சிப்ஸ் மட்டும்தான் இருக்குனாங்க. எனக்கு அதுபோதும்னு சொல்லிட்டேன் ஆனா எங்க வீட்டு காரரும் அவரு நண்பரும் சிப்ஸ் என்னத்துக்கு ஆகும் சாப்பாடு இருந்தாதான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்னு சொல்லி புலம்பிகிட்டே சிப்ஸ் ஆர்டர் பண்ணுனாங்க. நாங்க ஆர்டர் பண்ணுனதுக்கு அப்புறம்தான் அவன் அடுப்பு பத்தவெச்சு தயாரிக்க ஆரம்பிச்சான். எல்லாம் கொடுமை. இந்த சிப்ஸ் மயாயி அப்படீங்கறது என்னனா.உருளை கிழங்க நீள நீளமாவெட்டி எண்ணைல (as like our finger chips) பொரிச்சு எடுத்துக்கனும் அப்புறம் முட்டைய உடைச்சு நல்லா அது கூட இந்த சிப்ஸ் போட்டு மிக்ஸ் பண்ணி ஆம்லெட் மாதிரி ஊத்தி எடுத்து தருவாங்க. இதுக்கு பேருதான் சிப்ஸ் மயாயி. மயாயினா ஸ்வாகிலில முட்டைனு அர்த்தம். இதுக்கு தொட்டுக்க பீலி பீலினு ஒன்னு வெச்சிருப்பாங்க அது என்னனா வெறும் பச்ச மிளகாய அரைச்சு கொஞ்சூண்டு தக்காளி சேர்த்து சாஸ் மாதிரி வெச்சிருப்பாங்க. இந்த கொடுமைதான் தான்சானியா முழுக்கவே நானும் சாப்பிட்டு பழகிட்டேன் வேற வழி.ரொம்ப நேரம் கழிச்சு சிப்ஸ்கொண்டு வந்தான் பரவாயில்லை நல்லா செஞ்சிருந்தான் சிப்ஸ் மயாயி கூட நிறைய வெஜிடபிள் போட்டு சாஸ் ஊத்தி குடுத்தான். நாங்க சாப்பிட ஆரம்பிச்சவுடனே ஒரே ஒரு ப்ளேட் சாப்பாடும் மீன் ஒன்னும் கொண்டு வந்து குடுத்தான். எப்படி இதுனு கேட்டேன். கூட வந்த நண்பர் சொன்னாரு வெயிட் பண்ணிகிட்டு இருக்கும் போது வெளிய போயி பார்த்தேன் அங்க வேலை செய்யற வங்களுக்கு சாப்பாடு செஞ்சுட்டு இருந்தாங்க அவங்க கிட்ட கெஞ்சி கேட்டேன் அதான் ஒரு கப் ஸ்பெஷலா எனக்கு மட்டும் குடுத்தாங்கனாரு. அவருபேசிட்டு திரும்பி பார்த்தா தட்டுல இருந்த மீன கானோம் எங்கனு பார்த்தா கோழி கொத்திட்டுபோயி சாப்பிட்டுட்டு இருக்கு. சரினு இருக்கற சாப்பாட்ட பீலி பீலி ஊத்தி எப்படியோ சாப்பிட்டாங்க. இங்க சாப்பாடுனு கேட்டா வெறும் சாப்பாடு மட்டும்தான் தருவாங்க நம்ம ஊரு மாதிரி குழம்பு ரசம் ஏதும் கிடையாது. ஆனா என்ன இவங்க அரிசி சாதம் செய்யும் போது கூடவே கொஞ்சம் எண்ணை விட்டு உப்பு போட்டு அளவான தண்ணி வெச்சு வடிக்காம வேக வெச்சுடுவாங்க அதனால வெறும் சாப்பாடே கொஞ்சம் ருசியாதான் இருக்கும். எப்படியோ சாப்பிட்டு முடிச்சு கிளம்பலாம்னு பார்க்றோம் அப்பதான் ஒரு விசயம் ஞாபகம் வந்திச்சு நாங்க வந்த இந்த ஒரு மணி நேரத்துல ஒரு பஸ் கார் கூட எங்கள தாண்டிபோகவே இல்ல. ஆகா நல்லா மாட்டி கிட்டோம்னு நினைச்சு புலம்பி கிட்டே நின்னோம். அப்ப ஒரு பேருந்து வந்திச்சு கடைகாரர் இது நகரத்திற்க்கு தான் போகும் நீங்களும் போலாம்னு. நாங்க ஓடிபோயி பார்த்தா என்ன கொடுமை சாமி இது. நம்ம ஊரு மினிடெம்போல பின்னாடிரெண்டு பலகை அடிச்சு உக்காற வெச்சிருக்காங்க அதுக்குமேல தார் பாயி கட்டி இருக்காங்க ஏறி நிமிர்ந்து நடக்க முடியாது குமுஞ்சு கிட்டே போயி உக்காற வேண்டியதுதான் இதுல அல்ரெடி பஸ் புல்லு. நடுவுல கீழ குத்த வெச்சு உக்கார்ந்திட்டு வரதுனா ஏறுங்கனு சொல்லறாங்க. எங்களுக்கு வேற வழி இல்ல இதையும் விட்டா அடுத்த வண்டி எபபோ வரும்னு தெரியல கார் மாதிரி வண்டிகளும் கிடையாது சரி ஏறுவோம்னு எப்படியோ ஏறி வந்து சேர்ந்தோம் அந்த ஊருகாரங்க எங்கள பார்த்து சிரிக்க நாங்க அவங்கள பார்த்து சிரிக்க எப்படியோ சிட்டிக்கு வந்து சேர்ந்தோம்.
சிட்டிகிட்ட வரும் போது அந்த பொண்ணு கிட்ட இந்நேரத்துக்கு அறைக்கு போயி என்ன பண்ணறது வேற ஏதாவது இடம் இருந்தா சொல்லுனு கேட்டோம். உடனே அந்த பொண்ணு வேற ஒரு இடம் இருக்குனு ஒரு பழைய கோட்டைக்கு கூட்டி கிட்டு போச்சு.
அதுபேரு மருகுபி பேலஸ் (Maruhubi Palace) அதுவும் பழைய சுல்தான் யாரோ வாழ்ந்த இடம் ஆனா அங்க ஒரு பெரிய குளம் இருந்துச்சு நல்ல தண்ணி அதனால நல்லா மூஞ்சி கழுவி குளிச்சு புத்துணர்சி ஆகிட்டோம். அப்புறம் கோட்டைய சுத்தி பார்த்துட்டு பின்னாடி வந்தா கடல். அங்க முழுசும் கப்பல் செய்யற இடம். நிறைய பெரிய பெரிய கப்பலுங்க கிடக்குது. அங்கயெல்லாம் நல்லா போட்டோ எடுத்துகிட்டு கடல் ஓரமா சுத்தி வந்தோம் அங்க ஒரு ஆள் என்னவோ துணி துவைக்கற மாதிரி கல்லுல அடி அடினு அடிச்சுகிட்டு இருந்தான் என்னனு பக்கத்துலபோயி பார்த்தா அது ஆக்டோபஸ் மீன். அட ஆண்டவா அதை என்ன பண்ணறீங்கனு கேட்டா ஆக்டோபஸ் சமைக்கறதுக்கு முன்னாடி இப்படி அடிச்சு கழுவுனா சமைக்கறது ஈசினு சொன்னாங்க. ஆப்டோபஸ் அடிச்சு அடிச்சு அது நுரை மாதிரி வருது அப்புறம் கழுவி சமைக்கறாங்க. இன்னிக்குதான் ஆக்டோபஸ் முழுசா பாத்திருக்கேன். ஆனா பாவம் அது.

இதுல நாங்க அங்க இருக்கும் போதே ஒரு பையன் போன் மேல போன் அவங்க வீட்டுக்கு வந்தே ஆகனும்னு. நாங்க இங்க ஊரு சுத்திகிட்டு இருக்கோம் அங்க இருக்கோம்னுசொல்லி கிட்டே வந்தோம். எல்லாம் ஒரே பாசக்கார பசங்களா இருக்காங்க என்ன பண்ணறது.
நகரத்திலே வந்து இறங்கும் போதே அந்த பையன் அங்க காத்துகிட்டு இருந்தான். அவன் முதல் நாளு எங்கள அலைய விட்ட அதேபையன். மனசுக்குள்ள இவன் வீட்டுக்கு போயி என்னத்த பண்ணறது. அதே பீலி பீலி சிப்ஸ்தான தரபோறான் இதுக்கு இங்க இருந்து அவ்ளோ தூரம் போகனுமானு யோசிச்சு கிட்டே இருந்தோம் இருந்தாலும் அவன் இவ்ளோ தூரம் கூப்பிடறானே போய்தான் பார்ப்போம்னு கிளம்பி அவன் கூட போனோம் அந்த பொண்ணு அவ வீட்டுக்கு போயிட்டா. அவன்கூடபோனோம் ஒரு அரை மணிநேர பயணம் அப்பவும் அவங்க வீட்டுக்கு பக்கத்துல பஸ்போகாதுனு டாக்சி எடுத்தான். டாக்சில ஏறி வண்டி எடுக்கும் போதே ரெண்டு பேரு தள்ளி விட்டுதான் வண்டி ஸ்டார்ட் ஆச்சு. நேரா பெட்ரோல் பங்க் போயி பெட்ரோல்போட நிக்கறோம் வரிசையா ஸ்கூட்டரா வருது. அந்த சான்சிபார் டவுன் முழுக்கவே வெஸ்பா ஸ்கூட்டர் தான் ஓட்டறாங்க. அதை பார்த்து சந்தோசம் ஆயிடுச்சு. என்ன இருந்தாலும் நம்ம ஊரு வண்டியில்ல அதான். அப்புறம் அவங்க வீட்டுக்கு போயி சேர்ந்தோம் வெளில ஒரு 5, 6 குழந்தைங்க விளையாடிட்டு இருந்துச்சு நான் நினைச்சேன் அதெல்லாம் பக்கத்து வீட்டு குழந்தைங்கனு உள்ளபோயி பார் த்தா வீடு சூப்பரா இருக்கு.
அவங்க அண்ணன் வந்தாரு சான்சிபார் ஜெயில்ல ஆபீஸர்னு அறிமுகம் பண்ணிகிட்டாரு. அப்புறம் அவங்க அம்மா அக்கா எல்லாரும் வந்து அறிமுகம் பண்ணிகிட்டாங்க. அவரு இந்தியர்கள் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்ததுக்கு சந்தோசம்னு சொன்னாரு. கடைசியா அவரு சம்சாரம் வந்து அறிமுகம் பண்ணிகிட்டு குழந்தைகள அறிமுகம் செஞ்சுது. வெளிய விளையாடிட்டு இருந்த 5 ம் அவருடைய சொந்த குழந்தைங்க தானாம். அட ஆண்டவா எப்படிதான் சமாளிக்கறாங்ளோ இவ்ளோ குழந்தைங்கள வெச்சு. அப்புறம் காபி சாப்படறீங்களானு கேட்டாங்க. உடனே நாங்க சரினு சொன்னோம்ல ஏன்னா மதியம் கொஞ்சம் சாப்பிட்டது அதுக்கு பிறகு ஒன்னுமே சாப்பிடலை. அவங்க சம்சாரம் உள்ள போனது ரொம்ப நேரம் வரவே இல்ல. நாங்க நினைச்சோம் உள்ள போயி வெறும் காபிக்கு இவ்ளோ நேரமானு. கடைசில பார்த்தா தட்டு தட்டா எடுத்துட்டு வந்து வெச்சாங்க. என்ன என்ன ஐட்டம் தெரியுமா? பஜ்ஜி,போண்டா, கட்லெட்,ஸ்வீட் பிஸ்கட்ஸ் அப்புறம் தேங்காய் சட்னி. இதெல்லாம் பார்த்து ஆனந்த கண்ணீரே வந்திடுச்சு. ஏன்னா இதெல்லாம் இந்தியால பார்த்தது இப்பதான் 4 மாசம் கழிச்சு பாக்கறோம். ஆகா விடுவமா புகுந்து விலாசிட்டோம்ல. அவங்க கிட்ட அப்புறம் கேட்டோம் இதெல்லாம் எப்படி உங்களுக்கு செய்ய தெரியும்னு கேட்டோம் அதுக்கு அவங்க சொன்னாங்க இந்தியர்கள் (குஜராத்துகாரங்கதான்) இங்க இருந்தாங்க அவங்க கத்துகுடுத்ததுதான் இதெல்லாம்னு சொன்னாங்க. ஆகா நீங்க உங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்கனும் சாமி ஏன்னா இந்திய சாப்பாட கண்ணுல காட்டுனதுக்கு ரொம்ப நன்றினு சொல்லிட்டு அவங்க கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்புனோம்.
கிளம்பி வரும்போது மறுபடியும் வண்டி தள்ள வேண்டியதா போச்சு எங்க வீட்டுகாரரு நான் எந்த நாட்டுக்கு போனாலும் வண்டி தள்ளற வேலை மட்டும் விட்டு போகாது போல இருக்குனு கிண்டல் பண்ணிகிட்டே வந்து சேர்ந்தோம். எங்க போனாலும் இந்த குடும்பம்ங்கற அமைப்பும் உபசரிப்பும் ஒரு சந்தோசத்தை தருதுனு நினைச்சு கிட்டே தூங்குனோம்.
இன்னமும் வரும்.. :) :)

2 comments:
ரொம்ப நீண்ட பதிவு. அருமை. கூடவே பயணிப்பது போல் இருந்தது,
உங்கள் வலைத்தளத்தை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துகள்
Post a Comment