Monday, February 04, 2013

ஜான்சிபார் - 1

வணக்கம்,
இந்த கட்டுரை  நானும் எனது கணவரும் (2008) சென்று வந்த சுற்றுலா பற்றிய குறிப்பு மட்டுமே வேற ஒன்னும் உருப்படியா இல்லீங்க. நாங்களிருவரும் தான்சானியா எனும் ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஜான்சிபார் எனும் தீவிற்கு போய் வந்தோம்.

முதன் முதல்ல இந்த ஊருக்கு போறதால கூகுள்ள தேடி நிறைய விசயங்கள தெரிஞ்சு கிடடோம். முக்கியமா சொல்ல வேண்டியது என்னனா எங்க வீ ட்டுக்காரரு வேலை செய்த கல்லூரில நிறைய பசங்க அந்த ஊருல இருந்து வந்து படிக்கராங்க.

இவங்க கல்லூரி விடுமுறைங்கறதால நாலு நாள் சேர்ந்தா மாதிரி விடுமுறை கிடைச்சுது. தான்சானியாவில இருந்து இந்த ஜான்சிபார்  போகனும்னா ரெண்டு வழிதான் இருக்கு ஒன்னு விமானம், ரெண்டாவது கப்பல். விமானத்துல போனா கால் மணி நேரத்துல போயிடலாம் கப்பல்னா 2 மணிநேரம் ஆகும். எங்க வீட்டு காரரு விமானம்னு சொல்ல நான் கப்பல்னு சொல்ல கடைசில கப்பல்தான் ஜெயிச்சுது. கப்பல்ல போனாதான் கடல நல்லா பாக்கலாம்னு சொல்லி சம்மதிக்க  வெச்சேன்     நாங்க கிளம்புனது வியாழன் காலை 7 மணி கப்பல். கப்பல் பேரு சீ எக்ஸ்ப்ரஸ் (Sea Express) இதுல முக்கியமான விசயம் எங்க ரெண்டுபேரு கூட மூணாவதா ஒரு நண்பரும் வந்திருந்தாரு. அவருக்கு தண்ணிய பார்த்தலே பயம் தெனாலி மாதிரி. சரியா 7.30க்கு செக் இன் எல்லாம் முடிஞ்சு வண்டி கிளம்புச்சு. அப்ப பக்கத்தில பார்த்தா யாரோ முணங்கற சத்தம் திரும்பி பார்த்தா அந்த நண்பர் சாமி கும்பிட்டுட்டு இருக்காரு கப்பல் கவுந்திடகூடாதுனு. அப்பறம் நாங்களும் வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணி பேசிட்டு உக்கார்ந்தாச்சு. அப்புறம் எங்க வீட்டுகாரரு சொன்னாரு வெளிய நின்னு பார்த்தாதான் கடல் நல்லா தெரியும்னு. வர மாடடேனு சொன்ன நண்பரையும் கூட்டிகிட்டு வெளில வந்து  அலைகள் பிண்ணனியில நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். அங்கவெளியதான் பாதி பேர் இருந்தாங்க. வயசானவங்க முதல் குழநதைங்க வரைக்கும். ஆனாலும் நாங்க உள்ள வந்து உக்கார்த்தாச்சு கொஞ்ச நேரங்களிச்சு பார்த்தா பக்கத்து சீட் குழந்தை வாந்தி எடுத்துச்சு அதை பார்த்து எங்களுக்கும் குமட்ட எப்படியோ கரை வந்து சேர்ந்தோம் 9 மணிக்கு. ஜான்சிபார் வந்த பிறகு தான் தெரிஞ்சுது எங்கள கூப்பிட வரேனு சொன்ன பையன் வரவே இல்ல போனும் பண்ணல. அப்புறம் என்ன வழக்கம்போல ஒரு சின்ன டீக்கடைல போயி இனிப்பா ஒரு ஆப்பம் டீ அப்புறம் சப்பாத்தி சாப்பிட்டுட்டு வெயிட் பண்னுனோம் அப்பதான் அந்த பையன் போன் பண்ணி அவன் அலுவலகத்தில வேலையா இருக்கறதாவும் நீங்களே கார் பிடிச்சு வந்து சேருங்கனு சொன்னான். அவனை கண்டபடி மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு கார் எடுத்திட்டு அலுவலகம் போய் சேர்நதோம் பெரிய அலுவலகம்தான் TTCL (Tanzania Tele Communicztion Limited) அப்புறம் கொஞ்ச நேரம் அங்க பேசிட்டு அவனை கூட்டிக்கிட்டே பழைய  டீக்கடைக்கிட்ட வந்தோம்  அங்கதான் அவன் எங்களுக்கு பார்த்து வெச்சிருந்த ஹோட்டல் இருந்தது அங்க போயி கொண்டுபோன சாமான் எல்லாம் வெச்சிட்டு எதிர்தாப்புல இருந்த அரபு பிரியாணி கடைலபோயி பிரியாணி ஆர்டர் பண்ணுனோம். ரொம்பநேரம் கழிச்சு வந்தது பிரியாணி, என்னானு பார்த்தா  சாப்பாட்டுல கொஞ்சம் மசாலா சேர்த்து செஞ்சுட்டு அது கூட ஒரு கரண்டி சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவிவெச்சு தந்தான் கொடுமை. அதுக்கு பிறகு கிழம்பி சும்மா இன்னிக்கு பக்கத்தில இருக்கற இடத்தை மட்டும் பாருங்கனு ஒரு அரபு சுல்தான் கோட்டைகிட்ட இரக்கி விட்டுட்டு போயிட்டான்.

அந்த இடத்துக்குபேரு (Mtoni marine) முட்டோனி மரைன் அங்க ஒரு பழையகோட்டை இருக்கு அதுலதான் சையது பின் சுல்தான் அல்புசையது வாழ்ந்திருக்காரு. நிஜமா ரொம்ப சொகுசாத்தான் இருந்திருக்காங்க. அங்க என்ன அதிசயம்னா அந்தகோட்டைக்கு கழிவு வெளியேற கடல்ல இருந்து சின்ன கால்வாய்வெட்டி அதுகோட்டை முழுக்க சுத்தி சுத்தி வருது. கோட்டை கதவு  வரைக்கும் கடல் தண்ணி வர மாதிரி கட்டி இருக்காங்க.

அதுல ராணி குளிக்க மசாஜ் ரூம், ஸ்டீம் பாத் எடுக்க ஒரு குகை மாதிரி கட்டி இருக்காங்க. அது மட்டும் இல்ல இங்க முன் மண்டபத்தில ஒருபெரிய ஹால் எதுக்குன்னா அங்கதான் அடிமைகள அடைச்சு வெச்சிருந்து தினம் பக்கத்து தோட்டத்துல வேலை செய்ய கூட்டிட்டு போவாங்களாம். பாவம் அவங்க சரியான சுகாதாரம் இல்லாத இடத்தில இருந்திருக்காங்க. கோட்டைய சுத்திட்டு வெளிய வந்தா கடல் முன்னாடியே இருக்கு. அங்க தான் ஒரு மணிநேரம் நல்லா காத்து வாங்கிட்டு வநதோம். ஆனா தண்ணி ரொம்ப உள்ள இருந்துச்சு சாயந்திரம்தான் தண்ணி கரை வரும்னு சொன்னாங்க. அந்த கோட்டை பக்கத்துயே முட்டோனி மரைன் ஹோட்டல் இருக்கு அது பீச் ரிசார்ட் பூராம் வெள்ளக்காரங்க சன் பாத்து எடுக்கறாங்க. அங்க போயி ஒரு கைக்கு மருதாணி வைக்க 50 டாலர் பணம்னு சொன்னாங்க சரி சரி நாங்க 5 ரூபாய்க்கு எங்க ஊர்லயே வெச்சுக்கறோம்னு வந்திடடோம்ல. சாயங்காலம் கிளம்பி திரும்ப சிட்டிக்குள்ள வந்தோம். அங்க இந்து கோவில் இருக்கறதா சொன்னாங்க. சரினுதேடி பிடிச்சு போனா நம்ம குஜராத்தி மக்கள் எல்லாம் பய பக்தியா பஜனை பாடிட்டு இருந்தாங்க. அந்த கோவில் பூசாரிகிட்டபேசினா அவரு தமிழ் அதும் கோயமுத்தூர் RS புரமாம் அப்பறம் விடுவமா நல்லா 1 மணி நேரம் பேசிட்டு பிரசாதம் வாங்கிட்டுதான் திரும்ப வந்தோம். அவரு சொன்ன தகவல்படி 1960 க்கு முன்னாடி ஜான்சிபார் முழுக்க அராபியர்களும் இந்தியர்களும்தான் இருந்திருக்காங்க. 1960ல புரட்சி வந்துதான் இந்தியர்கள் எண்ணிக்கை 4000ல இருந்து 400 ஆ குறைஞ்சிருக்கு.திரும்ப வரும் வழில ஒரு சந்துல நிறைய தள்ளு வண்டிங்க இருந்துச்சு பக்கத்துல போயி பார்த்தா எல்லாம் சீ புட் விக்கற கடைங்க எல்லா வெளி நாட்டு காரங்களும் அங்கதான் இருக்காங்க. நாங்களும் போயி புதுசா என்னவோ தான்சானியா பிட்சானு விக்கறாங்ளே வாங்கி பார்ப்போம்னு வாங்குனா நல்லாதான் இருக்குது. நம்ம ஊருல ​போளினு ஒன்னு செய்வாங்கள்ள அதே மாதிரி ஆனா முட்டயெல்லாம் போட்டு சூப்பர் டேஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கறி இன்னும் என்ன என்னவோ குவிச்சு வெச்சு இருக்காங்க. நாங்க போட்டோ மட்டும் எடுத்திட்டு ஓடி வந்திட்டோம். திரும்ப பழைய கடைக்கு வந்து க்ரில் சிக்கன், சிப்ஸ் சாப்பிட்டுட்டு வந்து தூங்கியாச்சு. இப்படியாக முதல் நாள் முடிஞ்சிடுச்சு.

ஆகா முடிஞ்சுடுச்சுன்னு சந்​தோச படாதீங்க.. இன்னமும் சில பாகம் வரும்.. :) :)

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஐயோ... சாமீ...! இத்தனை சீ புட்...

பாண்டியன் said...

இதென்ன சாப்பாட்டு சுற்றுலா போலிருக்கே.

நெடுநாள் கழித்து தரிசனம் தந்தவரை வருக வருக என்று வரவேற்கிறோம்

jaisankar jaganathan said...

அருமை. நல்லா எழுதறீங்க