Friday, September 22, 2006

புத்தகங்கள் ... ... ...

புத்தகங்களை பற்றி எழுத சொல்லி பரத். ரவி ரெண்டு பேரும் மாட்டி விட்டுட்டாங்க. நமக்கு இந்த படிப்பு வாசனை கொஞ்சம் கம்மிதானுங்க இருந்தாலும் ஏதோ நமக்கு தெரிஞ்சத எழுதியிருக்கேனுங்க.

One book that changed my life
இதுவரை படிச்சதுல வாழ்க்கைய மாத்தக்கூடிய அளவு எதுவும் படிக்கல. ஆனா, ஏதாவது பிரச்னைனா நெனச்சு பார்க்கிற அளவு ஞாபகம் இருக்கறது சில புத்தகங்கள். அதுல பட்டாம்பூச்சினு ஒரு புத்தகம் (Bapillon in english) ஆசிரியர் ஹென்றி ஷாரியர் எழுதுனது சுதந்திரமான வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டம் வேணாபடலாம்னு எழுதியிருப்பாரு.
அப்புறம் ஏழைபடும் பாடு, மோபிடிக் இதெல்லாம் ரொம்ப பிடிச்சது.

The book you have read more than once
பொன்னியின் செல்வன் 5 தடவைக்கு மேல படிச்சாச்சு ஆனா திரும்ப படிக்கற ஆசை இன்னும் இருக்கு. சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு 3 தடவை படிச்சிருக்கேன்.

One book you would want on dessert island
ஜெயமோகனோட விஷ்ணுபுரம் ஆளில்லாத தனி தீவிலயாவது வேற வழியில்லாம படிப்பேன்னு நினைக்கிறேன் :).

One book that made you laugh
எல்லா ஜென் கதைகளும் பிடிக்கும் படிச்சா மனச கொஞ்சம் லேசாக்கி சந்தோசத்த தரும் புத்தகங்கள்.

one book that made me cry
வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.

One book you wish you had written
குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகம் எழுதனும்னு ஆசை.

One book that you wish had never been written
தெரியல

One book you are currently reading
இப்ப கைவசம் படிச்சிட்டு இருக்கறது ஊர்மண் ஆசிரியர் மேலாண்மை பொன்னுசாமி எழுதியிருக்கறார். அதுபோக வழக்கமான விகடன், இந்தியாடுடே, காமிக்ஸ் எல்லாம் படிச்சிட்டு
இருக்கறேன்.

One book you have been meaning to read
படிக்க விரும்பற புத்தகங்கள் நிறைய இருக்கு. கற்றது கை மண் அளவுதானுங்க..

இந்த புத்தகம் படிக்கற பழக்கம் சின்ன வயசுலயிருந்து இருக்கறதால நிறைய விசயம் தெரிஞ்சிக்கறதவிட கல்லூரியில பெரிய பெரிய புத்தகங்களை பாத்து பயப்படாம இருக்க முடிஞ்சுது. (முக்கியமா புக் படிக்கும்போது தூங்காமயாவது இருக்க முடிஞ்சுது :) )

அப்புறம் நான் மாட்டிவிட நினைக்கிறது சந்திர S சேகரன்.

9 comments:

FAIRY said...

after a long time..உங்க பிளாக்-உள் வந்தேன் நல்ல கருத்து புத்தகங்கள் மீது. I don't have that habit.

Gopalan Ramasubbu said...

//வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.//

I just love Chemistry as a subject.Neriya padikkareenga pola theriuthu?

அனுசுயா said...

Fairy : வருகைக்கு நன்றி.

கோபாலன் : வேதியியலுக்கும் எனக்கும் எப்பவும் ஒத்து வர்ரதேயில்ல. ரொம்பவெல்லாம் படிக்கறதில்லீங்க. ஏதோ கொஞ்சம் நேரம் போகலைனா படிக்கறதுதான்.

பரத் said...

Good one..
////வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.//
:))

//நமக்கு இந்த படிப்பு வாசனை கொஞ்சம் கம்முதானுங்க //
thannadakkam!!!

ரவி said...

Thanks for Participating in my Tag...

Eppadiyoo Oppeethiteenga anu...

:)))))

Gnaniyar @ நிலவு நண்பன் said...

நீங்க கிழ்ச்சு போட்ட புத்தகம் ஏதாவது இருக்கா..? :)

ILA (a) இளா said...

அருமையான பதிவு/தொகுப்புங்க.

//வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.//
ஐய், நம்ம கட்சி

அனுசுயா said...

பரத் : நன்றிங்... :)))

ரவி : என்ன பண்றது எப்டியோ எழுதி ஒப்பேத்திட்டேன்.

நிலவு நண்பன் : நன்றி. நான் அதிகமா புத்தகங்கள கிழிக்கறது இல்லீங்க. அந்த அளவு படிக்கறதில்லீங்க.

இளா : நன்றி.. ஏதோ என் கட்சியிலயும் ஆள் இருக்குது ரொம்ப சந்தோசம் :))

Syam said...

படிப்பு வாசனை கம்மின்னு சொல்லீட்டு இத்தனை புத்தகம் படிச்சிருக்கீங்க (உள் குத்து எல்லாம் இல்ல நேர் குத்து தான்)...

//வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான//

கரெக்டா சொன்னீங்க...எனக்கு இது கூட தமிழ்,இங்கிலீசு,கணக்கு,பிசிக்ஸ்,கம்ப்யூட்டர் சைன்ஸ் எல்லாமே அழ வெச்சுது :-)