Saturday, March 31, 2007

காந்தாரக் கலை

நமது பள்ளிகளில் இன்றும் மறவாது சொல்லிதரும் வரலாற்றில் முக்கியமானது காந்தாரக் கலை. இது புத்தமதத்தின் சார்பாக தோன்றி அதிகம் அது குறித்த கலைச் செல்வங்களை வழங்கி மறைந்த ஒன்றாகும். பாகிஸ்தான் தேசம் இந்த வாரத்தை (ஏப்ரல் 1வரை) காந்தாரக் கலை வாரமாக கொண்டாடுகிறது. பல்வேறு நெளிவு,சுளிவுகளை கொண்ட கலைப் படைப்புகளை தன்னகத்தே கொண்டது காந்தாரக் கலை. சில ஒளிப்படங்கள்...




புத்தரின் சிலை



புத்தர் பெருமான் தனது சீடர்களுடன் கையில்
கப்பறை எனும் உணவுஏற்க்கும் பாத்திரத்துடன் அமர்ந்துள்ளார். மேலாடையும், சிகையும் சுருள் வடிவம்பெற்றதே காந்தாரக் கலை எனப்படும். இனி வருவது நம் தாய்குலங்களுக்காக. அவர்கள் ஆதரவு இன்றி எந்தநாகரீகமும் வளராதே. இன்னமும் சொல்ல போனால் அவர்கள் தான் நாகரீகஅளவுக்கோல் ஆவர்கள்.



தங்க காதணிகள்.






தங்க கைக்காப்பு(Bracelet)




தங்க நெக்லஸ்

அடுத்து வருவது... புத்தப் பெருமான் அழகிய உருவம்



புத்தரின் தியான முத்திரை



புத்தரின் முகம்



தாமரை மலர் ஏந்திய புத்தர் கரம்



புத்தப் பெருமானின் அழகிய உருவச் சிலை.

இவ்வளவு அன்பு, அஹிம்சை என்று போதித்தும் காந்தாரகலை எனும் அழகிய ஒரு கலையால் அமைக்கப் பட்ட ஒரு படைப்புக்குநம் மனித இன நவநாகரீக வளர்ச்சியில் ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஆம். இரத்தக் கண்ணீர் விட ‍வேண்டிய படம்தான் கலங்கிய மனதுடன்...



தீவிரவாதிகளால் அழிக்கப் பட்ட பாமியான் குன்றுச் சிலை. இடது புறம்(முதல் பாகம்) சிலை உள்ளது. முன்புறம் ஒரு மனிதன் நின்றுக் கொண்டு உள்ளான் பாருங்கள். மனிதனை விட எவ்வளவுஉயரம் அப்பப்பா. வலது புறம் (இரண்டாம் பாகம்) ஏவுகணை மற்றும்பீரங்கி தாக்குதலால் அழிக்கப் பட்டு விட்டு காலியாகி விட்ட இடம்.இங்கும் முன்புறம் பல மனிதர்கள் நின்று கொண்டு உள்ளார். இனிவரும் நாட்களிலாவது கருணையும், சகிப்பு தன்மையும்உலகெங்கும் பரவட்டும். புத்தம் தர்மம் கச்சாமி...!!! சங்கம் தர்மம் கச்சாமி...!!!

7 comments:

மு.கார்த்திகேயன் said...

அனு.. நீங்க அகழ்வாராய்ச்சியாளரா.. படமெல்லாம் சொப்பரா இருக்கே.. எங்களைப் போன்றவர்களுக்கு அவ்வளவு எளிதா கிடைக்காதே..

கோவி.கண்ணன் said...

அனுசுயா அவர்களே !

புத்தபெருமானின் அரிய புகைப்படங்களுக்கும், உள்ளிட்ட தகவல்களுக்கும் நன்றி !

Syam said...

இந்த ஹேர் ஸ்டைல் தான தளபதி படத்துல ரஜினி பண்ணிட்டு வருவாரு :-)

Boston Bala said...

Did U see this invite for the sudar by... ஞானவெட்டியான்: சுடர்வழியே செய்தி

Bhupathi said...

Love to all
I am delighted by the intented/unintented service done to Tamil/Tamils BY the bloggers.I have been trying to save the pages of bloggs and some tamil sites for reading/showing to my daughter later but most of the times i am getting the message that 'this could not be saved'.I am wondering what could be the reason.Is it due my system problem or the choice of the bloggers?Or some censorship is there?
All our tamil bloggs' and websites'pages should be able to be saved for repeated readings and to present them to the younger generations at a latter period of convenience.Is it possible?
Thanks
Bhupathi

butterfly Surya said...

Xlent posting..

Good job

Surya
Dubai
butterflysurya@gmail.com

Anonymous said...

நல்ல இருக்குங்க அக்கா - friend