Wednesday, April 18, 2007

அழகே அழகே

அழகு பத்தி எழுத சொல்லி தேவ் சொல்றாரு ஆனா பாருங்க எனக்கு இந்த சனி உச்சத்துல இருக்கும் போலயிருக்கு. கடந்த 2 வாரமா வீட்டுல இணையம் வேலை செய்யில சரினு ஆபீஸ் வந்தா தமிழ் வர மாட்டேங்குது இப்டி பல பிரச்னைகளுக்கு நடுவுல ஒரு வழியா சுடர ஏத்தி முடிச்சுட்டு பாத்தா நம்ம தேவ் அழகபத்தி எழுத சொலறாரு. ம்ம்ம்ம்... எனக்கு எது அழகுனு தோணுதோ அதை பத்தி ‍எழுதறேன்.

1. மலர்கள்


எனக்கு அழகுனு சொன்னவுடனே ஞாபகம் வரது மலர்கள்தான். எந்த பூவ பார்த்தாலும் எனக்கு அழகாதான் தெரியுது. எங்க பூ படம் பார்த்தாலும் புடிச்சு நம்ம கணிணியில நிறைச்சுடுவேன் :). மலர்களை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் தனியானது.

2. இயற்கை

அழகுங்கறது என்ன பொருத்தவரைக்கும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியதா இருக்கனும் அப்டி பார்த்தா இயற்கைய விட்டா சிறந்த அழகு எதுவும் இல்லை. மலைகள், பச்சை பசும் புல் வெளிகள், பனிவிழும் காலை நேரம், பறவைகள், பூக்கள் இப்டி சொல்லிகிட்டே போகலாம். இயற்கையில எல்லாமே அழகுதான்.

3. புன்னகை

மனுசனோட முகம் எப்டியிருந்தாலும் சரி புன்னகை செய்யும்போது அழகா ஆயிடுவாங்க அது புன்னகையின் சிறப்பு. எவ்ளோ அழகான முகமாயிருந்தாலும் புன்னகையில்லாம உம்முனு இருந்தா அழகு கெட்டு போயிடுது. ஒரு சின்ன புன்னகை மிக அழகா மாத்திடும். எனக்கு புன்னகை செய்யற முகம் எல்லாம் அழகுதான் :)

4. கருணை முகம்

பொதுவா எல்லாருக்கும் அவங்கஅவங்க அம்மாதான் முதல் அழகி. அவங்க எப்டியிருந்தாலும் அவங்க முகம் மடடும்தான் அழகா தெரியும் எல்லா குழந்தைகளுக்கும் அதுக்கு ஒரே காரணம் அன்புதான். எவ்ளோ முகங்களை பார்த்தாலும் அவங்க அம்மா முகம் மட்டும் அழக தெரிய காரணம் அவங்களோட தூய்மையான அன்புதான். அன்னை தெரசா எல்லாருக்கும் அழகா தெரிய காரணமும் அன்பு கருணைதான். நம்மிடம் அன்பா இருக்கற எல்லாரோட முகமும் அவங்கவங்களுக்கு அழகுதான்.

5. குழந்தைகள்.

எந்த நிறம் சாதி உயரம் எடை எப்டியிருந்தாலும் எல்லா குழந்தைகளும் அழகுதான். அவங்க சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான்.

அப்பாடி எப்டியோ தேவ் எழுத சொன்னத எழுதிட்டேன்.

நான் கூப்பிடறவங்க...

கொங்கு ராசா
இளா.
இராகவன்

12 comments:

Butterflies said...

anu romba nalla define pannirukeeenga.....as usual nalla post...unga forwards la yee naria flower pics anuppuvinga....i have always enjoyd that thanks

Pavals said...

//எந்த பூவ பார்த்தாலும் எனக்கு அழகாதான் தெரியுது.// அது வாஸ்த்தவம் தாங்க. மலர், செண்பகம், மல்லிகா'ன்னு நிறையா பூ வை ரசிச்சிருக்கோம் நாங்களும்..


//எல்லா குழந்தைகளும் அழகுதான//

ஆமா, ஆமா,, அதுனால தான எங்க மூணு பேரையும் கூப்பிட்டு இருக்கீங்க
//கொங்கு ராசா, இளா, இராகவன்//

ஒரு அழகே
அழகை பற்றி எழுதுகிறதே'ன்னு யாராவது கிறுக்கிடுவாங்கலேன்னு பார்க்கிறோம்.. இல்லாட்டி அழகை பத்தி எழுத எங்களுக்கு ஆட்சேபம் இல்ல.. என்ன சொல்றீங்க இளா, ஜீரா?? ;)

Gopalan Ramasubbu said...

அழகு என்றால் எனக்கு குழந்தைகள்தான் நியாபகத்துக்கு வர்றாங்க. இயற்கை,மலர்கள் எல்லாம் அழகுதான் என்றாலும் இப்பவெல்லாம் பழகிடுச்சு. நல்ல பதிவு அனு. :)

Gopalan Ramasubbu said...

அப்பறம் சொல்ல மறந்துட்டேன்.. எங்கூர்ல மார்கழி மாசம் காலங்காத்தால எந்திருச்சு மலர்களை கோலத்தின் நடுவே வைக்கும் மலர்களும் கூட கொஞ்சூன்டு அழகுதான் ஹி..ஹி..

Gopalan Ramasubbu said...

பூக்களிடம் பாடம் கற்போம்!

எம்.கே.எஸ். பாவா

இயற்கை நமக்குப் பல பாடங்களைக் கற்றுத் தருகிறது.

பூந்தோட்டங்களில் பூக்களைப் பார்க்கும்போது அவை நம் கண்களுக்குக் கவர்ச்சியாகவும் உள்ளத்திற்கு உவகை அளிப்பதாகவும் உள்ளன. இவற்றை ரசிப்பதோடு நின்றுவிடாமல், இவை கற்றுத் தருகின்ற பாடங்களை நம் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்வதும் அவசியமாகும்.

பூக்களை எல்லோரும் அதிகமாக விரும்புவதற்கான முக்கிய காரணம் அவற்றிற்கே உரிய சிறப்புத் தன்மைகளான மென்மை, அழகு, மணம் ஆகியவை எனலாம்.

பூக்களின் இதே தன்மைகள்தான், வண்டுகளையும் வசீகரித்து தம்மிடம் வந்து தேன் உண்ணச் செய்கின்றன. வண்டுகள் தேனைச் சுவைத்துக் கொண்டே பூக்களிலுள்ள மகரந்தத் துகள்களை எடுத்து வேறு பூக்களில் இணைத்து மகரந்தச் சேர்க்கையெனும் பூக்களின் இனப்பெருக்கத்திற்குத் துணை நிற்கின்றன. இவ்வாறு தன்னையே கொடுத்துத் தன் இனத்தைப் பெருக்கிப் பெருமை சேர்க்கின்ற, பூக்களின் தன்னலமற்ற தன்மை நமக்கு ஒரு படிப்பினையன்றோ!

பூக்களின் சிறப்புக் குணங்களை மற்றொரு கோணத்திலிருந்தும் சிந்திக்க வேண்டும். பூக்களின் மென்மை, நாம் பிறரிடம் பேசும் போதும் பழகும் போதும் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டுமென்பதையும், அவற்றின் அழகு நாம் பிறருடைய பார்வைக்கு அழகாகத் தோற்றமளிக்க வேண்டுமென்பதையும், அவற்றின் மணம் நாம் உலகில் சாதனைகள் படைத்து புகழ் மணக்க வாழ வேண்டும் என்பதையும் கற்றுத் தருகின்றன. இக் கருத்தின் அடிப்படையில் அறிவுமணம் பரப்புவது அறிஞர்களின் கடமை என்றிருப்பது போன்று, இதர நற்பண்புகளைப் பெற்றுள்ள செயல் வீரர்களும் சாதனையாளர்களும் கூட தம் ஆற்றலையும் அனுபவத்தையும் பிறரோடு பகிர்ந்து கொண்டு, பிறரையும் பயனடையச் செய்ய வேண்டும். இவையெல்லாம் மலர்களின் மணம் பரப்பும் தன்மை நமக்குக் கற்றுத் தரும் மற்றொரு பாடமாகும்.

பூந்தோட்டத்தில் பலநிறப்பூக்கள், செடிகளிலும் கொடிகளிலும் உயர்ந்தும் தாழ்ந்தும், பரந்தும் விரிந்தும் காணப்படுகின்றன. அவை தமக்குள் எந்தவிதமான நிறப்பாகுபாடோ, உயர்வு தாழ்வோ காட்டாமல் இணைந்து, (காற்றில்) தலையசைத்து இன்முகத்துடன் நம்மை வரவேற்கிற காட்சியானது, இப்பூக்கள் மனித சமுதாயத்தை நோக்கி "வேற்றுமையைப் போக்கி ஒற்றுமையுடன் வாழுங்கள்; கவலையை மறந்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்' எனச் சொல்லாமல் சொல்வது போன்று உள்ளது. நிமிர்ந்து நின்று இவ்வாறெல்லாம் அறிவுரை சொல்லும் பூக்களைப் பார்க்கும்போது மனித இனத்திற்குத் தலைகுனிவு அன்றோ!

பூக்களை செடி கொடிகளிலிருந்து, நம்முடைய உபயோகத்திற்காகப் பறித்து எடுத்த பிறகும்கூட, தம் உயிர் பிரிந்துவிட்டதை - இல்லை பிரிக்கப்பட்டுவிட்டதை உணர்ந்தும், அவை உடனே வாடிவிடுவதில்லை; நம்மீது வெறுப்படைவதில்லை; கோபம் கொள்வதுமில்லை. தொடர்ந்து சிறிது காலம் (நேரம்) அதே புன்னகையுடன் மணம் வீசுகின்றன.

இவ்வுதிரிப்பூக்களை சரங்களாகவும், மாலைகளாகவும், செண்டுகளாகவும், பந்துகளாகவும் செய்து மணமக்களுக்கு அணிவித்து மேடையேற வைத்து அழகு பார்க்கிறோம். வெற்றியாளர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதற்கும் சாதனையாளர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கும் அடையாளமாக, பூமாலை அணிவித்துப் பூச்செண்டு வழங்குகிறோம்.

நாம் இப்பூக்களுக்கு இன்னா செய்த போதிலும் இவற்றின் இப்பயன்கள், நமக்குப் பிறர் இன்னல் புரிந்தாலும் அவர்களுக்கு நல்லுதவி செய்யுமாறு இடித்துரைக்கின்றன.

பூக்களோடு உறவு வைத்துக் கொள்வதால் மனிதருக்கு ஓர் எழுச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படுகின்றன என்பது உளவியல் அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.

மலர்களின் ராஜா எனக் கருதப்படும் ரோஜாக்களைக் கவனித்தால், முட்கள் அவற்றைத் தாங்கிக் கொண்டு நிற்பதைக் காண்கிறோம். இன்னல்களையும் சிரமங்களையும் தாங்கினால்தான் வாழ்க்கையில் இன்பத்தைப் பெற முடியும் என்பதையும், இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை; ஆதலால் துன்பத்தை எண்ணித் துவண்டுவிடாமல், ரோஜாக்களைப்போல் இன்பத்தை வெளிக்காட்டி துன்பத்தைப் பின்தள்ளி வாழ வேண்டுமென்பதையும் ரோஜாப் பூக்களின் அமைப்பு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

அது மட்டுமன்றி ரோஜாப் பூக்களைச் செடியிலிருந்து பறிக்கும்போது அவற்றின் முட்கள் நம் விரல்களை உரசினாலும், பூக்கள் கைக்கு வந்தவுடன், நாம் காயத்தை மறந்துவிட்டு நேயத்துடன் முகர்ந்து பார்க்கிறோம். சிரமத்திற்குப் பின்னர் கிடைக்கிற இன்பம் இதமானது என்பதை ரோஜாவும் முள்ளும் நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வாறாக ஓரெழுத்து ஒரு சொல்லிலாலான பூ, நமக்குப் பல்வேறு பயன்களைத் தருவதோடு, நம் வாழ்க்கை வளம்பெற பல பாடங்களையும் கற்பிக்கின்றன. இவற்றை அறிந்து உணர்ந்து செயல்படுவதன் மூலமாக நம் வாழ்வில் பூவாசம் நிரம்பட்டும்; புகழ் மணம் பரவட்டும்..!

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20070417100506&Title=Editorial+Page&lTitle=R%FBXVeLm&Topic=0

Unknown said...

அனு அவசரமா எழுதியிருந்தாலும் அழகாத் தான் எழுதியிருக்கீங்க.. சொன்னதைச் செஞ்சுட்டீங்க பாராட்டணும் இல்ல:-)

Anonymous said...

சரியா மேற்கொள் காட்டினீங்க கோபாலன். இந்தப் பதிவைப் படிக்கையில் அந்த தினமணி தலையங்கம்தான் நியாபகத்துக்கு வந்தது. நன்றி.

கருணை முகம், மற்றும் குழந்தைகள். நல்ல உதாரணம். அவை அழகோடு சேர்த்து வேறு எதையோ வைத்திருக்கின்றன.
"பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான். அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்."

இணையம் மற்றும் தமிழ் உள்ளிட்டு தடைகளைத் தாண்டி வெளியிட்ட பதிவிற்கு நன்றி.

Udhayakumar said...

//ஒரு அழகே
அழகை பற்றி எழுதுகிறதே'ன்னு யாராவது கிறுக்கிடுவாங்கலேன்னு பார்க்கிறோம்.. //

ராசா, எப்படி இருக்கீங்க? இன்னமும் புது மாப்பிள்ளை மவுசு குறையல போல இருக்கு???

குழந்தைகளின் சுட்டித்தனமும் அழகுதான் :-) நான் சொல்ல மறந்த விசயமிது.

Anonymous said...

Romba nalla eluthuringa.
-Manic

G.Ragavan said...

அனுசுயா அழகு பத்தி பதிவு போட்டிருக்கீங்க. அழகுதான். மலர்கள் அழகில்லைன்னு யார் சொல்ல முடியும். பறக்கின்ற வண்டுகள் அனைத்தையும் ஈர்த்து தன்னோடு சேர்த்து மகரந்தத்தை அப்பி விளையாண்டு அனுப்பி வைக்கிறதே!

குழந்தைகள்....முன்னே சொன்ன மலர்களை விட மென்மையானர்கள். ஆனால் நாம் அப்படிக் கையாள்வதில்லை!

// கொங்கு ராசா said...
//எல்லா குழந்தைகளும் அழகுதான//

ஆமா, ஆமா,, அதுனால தான எங்க மூணு பேரையும் கூப்பிட்டு இருக்கீங்க
//கொங்கு ராசா, இளா, இராகவன்//

ஒரு அழகே
அழகை பற்றி எழுதுகிறதே'ன்னு யாராவது கிறுக்கிடுவாங்கலேன்னு பார்க்கிறோம்.. இல்லாட்டி அழகை பத்தி எழுத எங்களுக்கு ஆட்சேபம் இல்ல.. என்ன சொல்றீங்க இளா, ஜீரா?? ;) //

ஆமு ஆமு. மறுப்பில்ல. மறுப்பில்ல. :-)

salem thiagu said...

alagu enbathu...... malarel, manetharel.....eyarkaiyel mattum ellai.......

manithargal manathelum ullathu.....

agathen alagu mugathel theriyum enbathu pazhya pazhamozhi.....

agathen alagu karunai parivaielum ullathu.......

kallam kabadamatra kulanthaigal endru kurugerom..........

endravathu kallam kabadammattra mantharkal endru solgeromaaa...... ellai.............

eppoluthu appade oru nelai varugiratho appoluthu than manithargal alaganavargal.........

salem thiagu said...

alagu enbathu...... malarel,eyarkaiyel mattum ellai.......

manithargal manathelum ullathu.....

agathen alagu mugathel theriyum enbathu pazhya pazhamozhi.....

agathen alagu karunai parivaielum ullathu.......

kallam kabadamatra kulanthaigal endru kurugerom..........

endravathu kallam kabadammattra mantharkal endru solgeromaaa...... ellai.............

eppoluthu appade oru nelai varugiratho appoluthu than manithargal alaganavargal.........