Saturday, April 21, 2007

தமிழ்நாடு தேசிய மலர்


சித்திரை கனி முடிஞ்சு ஆபீஸ் வந்தவுடன் என் சகா ஒருத்தரு கேரளா காரர் தன் கணிணி பெட்டியில் மஞ்சள் நிற கனி பூ படம் வச்சிருந்தாரு. நான் போ்ய் இந்த பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோட பேர் என்னங்கனு கேட்டேன். உடனே அவரு இதுக்கு பேரு கனிக்கொன்னா பூ இத வச்சுதான் நாங்க விஷு பண்டிகை கொண்டாடுவோம்னு சொன்னாரு. அத்தோட விட்டா பரவாயில்ல இதுதான் எங்க மாநிலத்தோட பூ (State flower of Kerala) அப்டீனு சொன்னாரு. சொல்லிட்டு உங்க மாநில பூ எதுனு வேர கேட்டாரு பாருங்க ஒரு கேள்வி. அதுலதான் பிரச்னையே நானும் தேடறேன் தேடறேன் தேடிட்டேயிருக்கேன். கிடைக்க மாட்டேங்குது.


கூகுள் ஆண்டவர கேட்டேன், விக்கி அண்ணன கேட்டேன் ஒன்னும் பிரயோசனம் இல்ல. என் அரட்டையில ஸ்டேடஸ் போட்டு பார்த்தேன். என் நண்பர்களுக்கும் தெரியல. சிலரு சட்னு தாமரைனு சொல்லி சிரிக்க வெச்சாங்க. சிலர் அப்டி ஒரு விசயம் இருக்கானு கேள்வி கேட்டாங்க. இப்டியே போகுதே தவிர பதில் இன்னும் கிடைக்கல. நம்ம ப்ளாக்க படிக்கற மக்கள் யாராவது விபரம் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா மாநிலங்களுக்குனு மலர் உண்டா? அதாவது தேசிய மலர் போல. அப்டியிருந்தா நம்ம மாநில மலர் எதுனு ‍சொல்லுங்க? அது சம்பந்தமா இணையத்துலயிருந்தா லிங்க் கொடுங்கப்பா.

11 comments:

Unknown said...

tamil nadu state flower is

" kaanthal malar" very beautiful one

state animal is " nilgiri tahr" or "varai aadu'found in nilgiri mountain

bird is pura or pigeon
tree is panai or palm tree
enough!

Unknown said...

tamilnadu state symbols

flower: seng kaanthal malar or
Gloriosa superba (technical name)

animal: nilgiri tahr or "varai aadu"

tree is palm or panai tree

bird is pura or pigeon

enough!

Anonymous said...

கள்ளிப் பூ தான் தமிழகத்தின் தேசிய மலர்.

Raji said...

First time to ur blog..
Nice blog..
Nice info too:)

Syam said...

எப்படியோ உங்க புண்ணியத்துல நம்ம அறிவும் கொஞ்சம் வளந்துருச்சு :-)

மனசு... said...

அடப்போங்கப்பா...விட்டா மாவட்டத்துக்கு மாவட்டம் கேப்பிங்க போலேயே... இப்பவே சொல்லிடறேன் எங்க மதுரை மாவட்ட பூ மல்லிகைதான்...

வாழ்த்துக்கள் அனு, புதுசா ப.பா.ச ஆரமிச்சுருக்க்ங்க போல... ஒரே வேலை.. அதான் பிளாக் பக்கமே வராமுடியல.. பதிவும் போட முடியல..

Butterflies said...

hahahha unga status pathappo...en ippdi oru doubt nu yosichen ippo purithu.....finally u knew it great!

காரூரன் said...

நல்ல முயர்ச்சி. தமிழ் நாட்டு கோபுர சின்னம் சிறிவில்லிபுத்துர் ஆண்டாள் கோபுரம் தான். அக்கிராமத்தில் இருந்து 3 வருடத்தின் பின் தான் எனக்கு தெரியும்
First visit to your site.
Till some one ask you, you don't know that you don't know.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

கொஞ்ச வருடங்கள் முன்பு தேசிய மலராக குஷ்பு அக்காதான் இருந்தாங்க..இப்ப யாருன்னு தெரியலையே..? ஒருவேளை திரிசாவா.?

Guna said...

ம்..என்ன கேட்டீங்க ?? நம்ம மாநில பூவா ??
ம்ம்ம்... 'ஆப்பு' ???

சத்தியமா, இப்படி ஒரு பூ விஷயம் இருக்கும்னு தெரியாதுங்க.
இந்த புதிய தகவலுக்கு நன்றி.

Anonymous said...

I DONT KNOW WHETHER TAMIL NADU HAS ITS STATE FLOWER, BUT UNION TERRITORY OF PUDUCHERRY HAS ITS OWN
BIRD :KUIL
ANIMAL : ANIL
TREE : VILVAM
FLOWER :NAGA LINGA POO