Monday, June 18, 2007

சிவாஜி படம் அனுவின் பார்வை

அப்பப்பா ஒரு ஆறு மாசமா ஆடி தள்ளுபடி, ஆட்சி மாற்றம், மழை, வெயில் கொடுமை எதுவுமே தெரியாத அளவு சிவாஜி பட வெள்ளத்துல மூழ்கடிச்சிடுச்சு நம்ம தமிழ்நாட்டு மக்கள. நான் பொதுவா சினிமாவுக்கே போக மாட்டேன் ஏதோ ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை போனா உண்டு. அப்டியாபட்ட நானே சிவாஜி படம் பாக்க வேண்டியதா போயிடுச்சு. எல்லாம் நேரம்....

என் கல்லூரி நண்பனோட கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போயே ஆகனும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இதுக்கு டிக்கட் விலை வேற ரொம்ப அதிகம் (ரொம்ப டூ மச் :( )

சரி சொந்த நொந்த கதை அப்புறம் படத்த பத்திய என் கருத்துக்கள் கீழே
ஞாபகம் வருதே ஞபாகம் வருதே

1. எத்தன நாளைக்கு ஒரு தனி மனிதன் ஆறு மாசத்துல நாட்ட திருத்துவான்னு படம் எடுப்பீங்க.? லஞ்சம் கேட்கற அதிகாரிங்ககிட்ட ஏன் நான் லஞ்சம் தரனும் எதுக்கு நான் தரனும்னு அதே கேள்விகள். (இந்தியன் படம் ஞாபகம் வருதே)
2.அப்புறம் திருடுன பணத்த பழைய பேப்பர் கூட ஒழிச்சு வெக்கிறது (ஜென்டில்மேன் படம் ஞாபகம் வருதே)
3. பாடல் காட்சிகள் குறிப்பா சகானா பட காட்சி அமைப்புகள் (ஜீன்ஸ் படம் ஞாபகம் வருதே)
4. அதே போல ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் 250கோடி சம்பாதிக்க எவ்வளவு வருசம் பாடுபடனும் அதே மாதிரி படிச்சு முடிக்கவே 25 வருசம் போயிடும் அப்டீனா அவரோட வயசு என்ன அந்த வயசுல காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்டி லாஜிக் ரொம்ப இடிக்குதே? (லாஜிக் பார்த்தா சினிமாவே பாக்க முடியாதுனு என் ப்ரெண்ட் சொன்னா அது கரெக்ட்தானுங்க :) )

சிறப்பு அம்சம்
1. நல்ல நகைச்சுவை காட்சிகள் பரவாயில்ல வாய்விட்டு சிரிக்க வெக்கறாங்க சில இடங்கள்ள.
2. ரஜினி நடிப்பு பரவாயில்ல நல்லாயிருக்கு.
3. இசை சிறப்பாயிருக்கு ஆனா பாடல் வரிகள் புரியற மாதிரி அமைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

இதெல்லாம் என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன விசயங்கள். எனக்கு இருக்கற சின்ன மூளைக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான் கடைசியா, இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)

16 comments:

Udhayakumar said...

208 மைல் போய் பார்த்துட்டு வந்திருக்கேன். சிவாஜியால் வந்த பக்க விளைவுகள்:

1. 6 நண்பர்களை 6 வருடம் கழித்து தியேட்டரில் பார்த்தேன்.
2. வீட்டுக்குத் தேவையான மளிகை சாமன்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு வந்தாயிற்று. ஒரு ஆறு மாசத்துக்கு கவலையில்லை...

Anonymous said...

இங்கே கும்மியடிக்க அனுமதி உண்டா?

வருடாந்திர ஒப்பந்தம் செய்வதன் மூலம் மாபெரும் சலுகை பெறுங்கள்!

பதிவுகள் தோறும் கும்மி!

எங்கள் சேவை தொடரும்!
வாடிக்கையாளரின் மனநிறைவே எங்கள் நோக்கம்!

மேலாளர்,
பின்னூட்ட கன்சல்டன்ஸி பி.லிட்,
சென்னை
(An ISO Certified And Authorised அ.மு.க டீலர்)

ILA (a) இளா said...

//அதே போல ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் 250கோடி சம்பாதிக்க எவ்வளவு வருசம் பாடுபடனும் அதே மாதிரி படிச்சு முடிக்கவே 25 வருசம் போயிடும் அப்டீனா அவரோட வயசு என்ன அந்த வயசுல காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்டி லாஜிக் ரொம்ப இடிக்குதே? //
எனக்கு தோணின அதே கேள்விங்க. Same Pinch. 250 கோடியா?? அப்படி என்னப்பா System Software Architect? அது எந்த கம்பேனின்னு சொன்னா நானும் 250 சம்பாதிப்பேன்ல?

salem thiagu said...

amanga........


unga karuthhu muttrelum sariyanathu...

entha murai shankar mixing shankaraaa maaree erukkaaru........

gentlemanla konjam, mudhalvanla konjam, genesla konjamunnu alle pottu oreee sambar, rasam, thayir vasanai.........

pasekku saapeda vendeyathu thaan.....

shankar thalaivara ematheettaru........

selventhiran said...

அனு, ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவைதான் படம் பார்க்கறீங்க, ஆனா எப்படிங்க ஜெண்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், சிவாஜின்னு ஷங்கர் படமே பார்க்கறீங்க..? இளா, நீங்க 250 கோடி ரூபாய் சம்பாதிச்சுட்டீங்னா, தமிழ்நாட்டுல ஒரு சூப்பர் தொழில் இருக்கு பி.மு.க ன்னு கட்சி ஆரம்பிச்சு கல்லா கட்டிறலாம்

மனசு... said...

அனு,
தமிழ்நாட்டுல என்னிக்கு லாஜிக்கோட படம் எடுத்தாங்க.. இல்ல நம்மதான் லாஜிக் பாத்துட்டு படம் பாத்தோம். அதுவும் ரஜினி படம்னா கேக்கவா வேனும். ஏதோ வலைப்பக்கம் இதைஎல்லாம் சொன்னதால தப்பிச்சிங்க... பொது இடத்துல சொல்லிருந்திங்கன்னா கதையே வேற..(கல்லூரில பொதுமாத்துனு ஒன்னு உண்டு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன். அறைக்குள்ள வரச்சொல்லி விளக்க அணைச்சுட்டு... போர்வைய பொத்தி எவன் வேணுனானும் அடிச்சுக்கிடலாம்டோய்னு மொத்துவானுங்க :-))அதுமாதிரி ஆகிருக்கும்...

விடுங்க இவ்வளவு பணம் செலவு பண்ணி எடுத்த படத்த நம்ம மக்கள் அதுக்கு மேல பணம் குடுத்து பாப்பாங்க.. இங்க பக்கத்து ஊருல படம் போட்டிருக்கான் வரிங்களானு கூப்பிட்டாக... 18 யூரோ டிக்கெட் போயிட்டு வர செலவுனு மொத்தமா குடும்பத்தோட ஒரு 50 யூரோ அகிடும். இந்தபடத்த அவ்வளவு குடுத்து எல்லாம் பாக்க முடியாதுனு சொல்லிட்டேன். படம் பாக்கிறபணத்தா ஏழைக்குழந்தைங்க படிப்புக்கு செலவு பண்ணலாம். கண்டிப்பா நாம படம் பாக்கிறதால நாடு திருந்தாதுனு ஒரு நம்பிக்கை... பாக்குறவன் தப்புசெய்றவன் திருந்தனும்... திருந்துவாங்களா???

Prabhu said...

அனு,

ஒரு விஷயதில் தப்பு கண்டுபிடிக்கற வேலை ரொம்ப ரொம்ப சுலபம்! ஆனா பதில் சொல்றதும்,நாம அத பின்பற்றுவதும் ரொம்ப ரொம்ப கஷ்டம்!
நீங்கலே ரஜீனி படம் பிடிக்காது சொல்லிட்டு முதல பார்த்துட்டு வந்து குறை சொல்றீங்க! கடைசி ரஜீனி படத்துலேயும் இதேதான் சொன்னீங்க....
அப்புறம் டைரக்டர மட்டும், படத்த மட்டும் குறை சொல்றீங்க...?????

இவன்..
உண்மை விரும்பி>>>>> PUAB

அனுசுயா said...

‍உதயகுமார் : சிவாஜி படத்தோட பக்க விளைவுகள் 6 மாசம் இருக்குங்கறீங்க. எப்டியோ நல்லா இருந்தா சரி :)

பின்னூட்ட கன்சல்டன்சி : நான் வரலீங்க இந்த விளையாட்டுக்கு :)

அனுசுயா said...

இளா : //System Software Architect? அது எந்த கம்பேனின்னு சொன்னா நானும் 250 சம்பாதிப்பேன்ல? //
Already நீங்க 100 கோடி சம்பாதிச்சுட்டதா சொல்றாங்க அப்டீங்களா?

செல்வேந்திரன் : நன்றி

அனுசுயா said...

மனசு : //கண்டிப்பா நாம படம் பாக்கிறதால நாடு திருந்தாதுனு ஒரு நம்பிக்கை.//
அதே தான் ஏதோ நாலு நல்லது நடந்தா சந்தோசம். பொது மாத்து விழுங்கறீங்க. :( இப்பவே கண்ண கட்‍டுதே :)

அனுசுயா said...

பிரபு : பின்னூட்டத்துக்கு நன்றிங்க. நான் யாரையும் குறை சொல்லல. இதுவும் மத்த படங்கள் மாதிரி வந்திருந்தா இந்த மாதிரி பதிவே போட்டிருக்க வேண்டியது இல்ல. தேவையில்லாத விளம்பரம் உலக அதிசயம் போன்ற ஒரு பிரமைய உருவாக்கி வந்ததால தான் இந்த பதிவு. மத்த படி சாதாரண படமா இதுவும் வந்திருந்தா இந்த கட்டுரை அவசியமே இல்ல.

Gopalan Ramasubbu said...

சிவாஜி = நரசிம்மா பார்ட் 2

arun said...

Paduthula logic ellam correct-a irunthuchunna, theaterla irukara neram naragam ayidum.

Namakku rajni pada thrilling-thanga mukkiyam!

MyFriend said...

//இதெல்லாம் என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன விசயங்கள். எனக்கு இருக்கற சின்ன மூளைக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுது. //

உங்க சின்ன அறிவுக்கு இதெல்லாம் எட்டுதா? ரொம்ப உயரமாதாங்க இருக்கு உங்க அறிவு. :-)

டிஸ்கி: நான் இன்னும் சிவாஜி படம் பார்க்கவில்லை. ;-)

Unknown said...

இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)

உண்மைத்தான்...நான் பார்த்திலேயே மிகச் சிறந்த நகைச்சுவைப் படம் இதுதான்... லஞ்சம் ஊழலை எதிர்த்துப் போராடுவதாகக் காட்டப்படும் படத்திற்கு பிளாக் ல் சீட்டு வாங்கும் நிலை... என் நண்பன் ஒரு சீட்டு 250 ரூபாய் குடுத்து வாங்கிப் பார்த்தான்..அதே நாளில்தான் நானும் பார்த்தேன்..வெறும் 60 ரூபாய்க்கு..செயற்கையாக சீட்டுக் கிடைக்காது என்ற தோற்றத்தை உண்டு பண்ணி ஏமாற்றிவிட்டனர்...என்றைக்கு தமிழன் திரைக்கதையை விட்டு வெளியே வருகிறானோ அன்றைக்குத்தான் அவனுடைய நிஜக்கதை உருப்படும்...

Unknown said...

இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)

உண்மைத்தான்...நான் பார்த்திலேயே மிகச் சிறந்த நகைச்சுவைப் படம் இதுதான்... லஞ்சம் ஊழலை எதிர்த்துப் போராடுவதாகக் காட்டப்படும் படத்திற்கு பிளாக் ல் சீட்டு வாங்கும் நிலை... என் நண்பன் ஒரு சீட்டு 250 ரூபாய் குடுத்து வாங்கிப் பார்த்தான்..அதே நாளில்தான் நானும் பார்த்தேன்..வெறும் 60 ரூபாய்க்கு..செயற்கையாக சீட்டுக் கிடைக்காது என்ற தோற்றத்தை உண்டு பண்ணி ஏமாற்றிவிட்டனர்...என்றைக்கு தமிழன் திரைக்கதையை விட்டு வெளியே வருகிறானோ அன்றைக்குத்தான் அவனுடைய நிஜக்கதை உருப்படும்...