Sunday, June 24, 2007

இணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்

                   
அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி ஞாயிறுகால‍ை 10.00 மணியளவில் கோ‍வையில் இணைய நண்பர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும் வருக, வருக என இனிதே வரவேற்கிறேம்.


விழா குறித்து சில கேள்வியும் & பதிலும்...


        முதலில் இது எதற்க்கு? அவசியம் என்ன?


        குழுமங்கள் மற்றும் பல இணைய நண்பர்களின் நீண்ட நாள் சந்திப்புதிட்டம் செயலுக்கு வந்துள்ளது.


        யார், யார் கலந்துக்க?


        நீங்கள் வலைபதிவராகதான் இருக்கனும் என்று அவசியமில்லை, குழுமங்களில் கலக்குபவராக இருக்கலாம், மன்றங்களில் வெழுத்துக் கட்டுபவர்களாக இருக்கலாம், இணைய தளங்களில் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். அட அவ்வளவு ஏனுங்க சும்மா நடப்பதை எல்லாம்வேடிக்கை பார்ப்பவராக இருக்கலாம். இணையம் மற்றும் தமிழ் இவ்விரண்டேநம்மை இணைப்பதாக இருக்கும்.


        எதைப் பற்றி பேச?


        பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசலாம். விரைவில் தலைப்புகள்பட்டியலிட படும்.


        அட இன்னமும் கிளம்பலையா...?


        சரி சரி நீங்க கேட்பது புரியுது யாரை தொடர்புக் கொள்ளனும் என்பது தானே உங்க கேள்வி...


        முத்தமிழ் மஞ்சூர் ராசா - 9443854163


        தமிழ்பயணி சிவா -             9894790836


        மின்னஞ்சல் முகவரி - vanusuya@gmail.com


       
வருகை தருபவர்கள் தவறாது முன்னதாக தொடர்புக் கொண்டால் தேவையான வசதிகள் செய்ய உதவியாக இருக்கும்.


இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....


        


வருவதாக உறுதியளித்துள்ளவர்கள் பெயர் பட்டியல்...சிறப்பு 
விருந்தினராக தமிழ்மணம் நிறுவனர் திரு.காசிலிங்கம் அவர்கள்1.முத்தமிழ் மஞ்சூர் ராசா

2.தமிழ்பயணி சிவா

3.திருப்பூர் தியாகு

4.அனுசுயா

5.ஆசாம் சிவா

6.கபீரன்பர் உமேசு

7.புதுகை பாண்டியன்

8.நாமக்கல் சிபி

9.ஜேகே

10.விஜய்

11.கமல்

12.ஆனந்த்நீங்களும் உங்கள் வருகைய‍ை இங்கே பின்னூட்டமிடுவதன்
மூலம் உறுதி செய்யுங்கள்....

9 comments:

srishiv said...

நானும் வந்தா வருவேனுங்கோ :)
ஸ்ரீஷிவ்...@ சிவா ..அசாமிலிருந்து

தமிழ்பயணி said...

வருபவர்களை இனிதே வரவேற்கிறோம். கலக்கலாம் வாங்க சிவா...

அய்யனார் said...

மஞ்சூர்!!
ஊருக்குப்போய் ரெஸ்ட் எடுங்கன்னா அங்கேயும் தமிழ்சேவையா :)

வாழ்த்துக்கள்

.:: மை ஃபிரண்ட் ::. said...

"உள்ளேன் ஐயா/ அம்மா"ன்னு சொல்ல ஆசைதான்.. ஆனா, வரதான் முடியாது// சாரி.. ஹீஹீ

சுதர்சன்.கோபால் said...

இந்த நிகழ்வு அனைவருக்கும் ஒரு இனிமையான,புத்துணர்வூட்டும் அனுபவத்தைத் தர வாழ்த்துகள்.

மனசு... said...

வரனும்னு ஆசைதான்... ஆனா வரமுடியுறதூரத்தில இல்லை... யாராவது ஸ்பான்சர் பண்ணினா வரலாம்... நீங்க பண்ணுவிங்களா அனு???

மனசு...

Anonymous said...

neengal koovai sandhippil kalanthu kolla mudiyavillai enRu ninaikkiren... ennaip polave! raja pesinaar. naanum varukiren anusuya.

anoudan
osai chella

கமல் ராஜன்.பா said...

அனுசுயா ங்க.. என் பெயர் கமால் இல்லை கமல் ராஜன்.. நானும் வருகிறேன்..

செல்வேந்திரன் said...

அனுசூயா, வர ஆவலாக உள்ளேன். எந்த இடத்தில் நடக்கிறது என்பதை தனிமடலில் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்.

k.selventhiran@gmail.com

மிக்க அன்புடன்
செல்வேந்திரன்.