Sunday, December 16, 2007

டிசம்பர் மாத PIT போட்டிக்கு


ரொம்ப நாளா இந்த PIT போட்டில கலந்து வெற்றியடையனும்னு நினைக்கிறது ஆனா நம்ம மக்கள் எல்லாரும் போடர படத்த பார்த்தா நான் எடுக்கறதெல்லாம் சும்மா பக்கத்துல கூட போக முடியாத அளவு இருக்குது. இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா அதுவும் இந்த மாசம் எனக்கு புடிச்ச பூக்கள்தான் தலைப்பு குடுத்திருக்காங்க. அதை பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன் கொஞ்சம் மெனக்கெட்டு இதுக்குன்னே படம் எடுத்து போடனும்னு அதுனால என் வீட்டு ரோசா செடில பூ மலரும் வரைக்கும் (அதுக்குள்ள போட்டி முடிய கூடாதுனு வேண்டிக்கிட்டு) காத்திருந்து எடுத்து போட்டிருக்கேன். பாத்துட்டு நம்மளோடது தேறுமானு பாத்து சொல்லுங்கப்பா.
படத்து மேல சொடுக்கி பெருசு பண்ணி பாருங்க அப்போ கொஞ்சம் நல்லா இருக்கும் :)

7 comments:

சதங்கா (Sathanga) said...

//பெருசு பண்ணி பாருங்க அப்போ கொஞ்சம் நல்லா இருக்கும் :)//

சொடுக்காமப் பார்த்தாலும் நல்லாத் தான் இருக்கு :) dew drops இன்னும் கொஞ்சம் பளிச்சுனு இருந்தா நல்லா இருக்கும் !

TBCD said...

எங்காவது பூக்கள் குளித்துப் பார்த்திருக்க்கிறீர்களா..

இங்கே பாருங்கள்..

வெந்நீரா...தண்ணீரா...

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.©

கோபிநாத் said...

ரெண்டு தானா!?

ரெண்டாவது நல்லாயிருக்கு...

எல்லோருக்கும் சொல்ற அதே டைலக் தான் உங்களுக்கும்

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;))

Anand V said...

இரண்டாவது படம் நன்றாக வந்து இருக்கிறது.

முதல் படத்தில் பூவின் கீழே தெரிவது கையா ?

கண்மணி/kanmani said...

நல்லாருக்கு...நல்லாயிருக்கியா அனு...
தலைவி ரொம்ப பிஸியோ

Gopalan Ramasubbu said...

போட்டோ ஷாப் உபயோகித்து இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாமோ???

ஹாரி said...

பூவுன்னாலே ரோஜாதானா?
என்ன கொடுமை ஸார் இது ?

போட்டோ நல்லாதாங்க இருக்கு.