Tuesday, September 23, 2008

ஆப்பிரிக்காவில் அனு

வணக்கமுங்க இந்த பதிவு ஒரு தொடர்பதிவு இதுல நான் இருக்கற நாடு அதாவது தான்சானியா அதோட சுத்துபட்டு நாடுகள், அவங்க வரலாறு,வாழ்க்கை முறை, மக்களோட அன்றாட வேலை எல்லாத்தையும் பத்தி முடிஞ்ச வரைக்கும் தெளிவா எனக்கு தெரிஞ்சத எழுத போறேன்.படிச்சுட்டு நல்லா இருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனாலும் கமெண்ட் போடுங்க மாத்திக்க முயற்சி பண்றேன். பொதுவா ஆப்பிரிக்கானாலே இன்னும் எல்லாரும் இருண்ட கண்டம் அப்படினுதான் நினைக்கறாங்க. இன்னும் இங்க மனிச கறி சாப்பிடறஆதிவாசிகள் குடியிருக்காங்க. இங்க போனா எதுவுமே கிடைக்காது அப்படி இப்படினு பல பயங்கர பயமுறுத்தல்கள் இருந்துகிட்டுதான் இருக்குஅது உண்மைனு நானும் கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்பிட்டுதான் இருந்தேன். இங்க வந்த பிறகுதான் சில உண்மைகள் புரியும்.சரி சரி கதைக்கு வரேன் வழக்கம் போல எங்கயோ சுத்திட்டு இருக்கேன்.


ஆப்பிரிக்கா அப்படினாலே மிகப் பெரிய கண்டம்னு எல்லாறுக்கும் தெரியும். சரி ஆனா இதுல மிக்பெரிய நிலப்பகுதி சகாரா பாலைவனம். அதாவது வடக்கு பகுதி, அதே வடகிழக்கு பகுதியில குறிப்பா எகிப்து, சூடான் இங்கயெல்லாம் நைல் நதி பாஞ்சு மிக மிக செழிப்பா இருக்குது.ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம் அதாவது பாலைவனத்துக்கு மேல வடக்கு பகுதி, பாலைவனத்துக்கு கீழ தெற்கு பகுதினு. இதுல பாலைவனத்துக்கு மேல உள்ள நாடுகள் நைல் நதி பாயறதாலயும், ஐரோப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கறதாலயும் நல்ல முன்னேற்றத்தோட இருக்குது.அதே போல கிழக்கு பகுதியில கடலோரம் இருக்குற நாடுகளும் தென் ஆப்பிரிக்காவும் நல்ல நீர் வழத்தோடயும் ஆசியா அரேபிய நாடுகள்கூட தொடர்பு கொண்டு நல்லா வழமாதான் இருக்காங்க. இது எல்லாத்துலயும் பாவப்பட்டவங்க மேற்கு ஆப்பிரிக்காதான். ஏன்னா இவங்க அடுத்த கண்டத்தோட தொடர்பு கொள்ளனும்னா ஒன்னு மேற்கு பக்கம் அட்லாண்டிக் கடல்ல பல தூரம் கடந்து தென் அமெரிக்காவுக்கு வரனும் இல்லைனா கிழக்க பெரிய ஆப்பிரிக்க நிலப்பரப்ப கடந்து அரேபியா அல்லது ஆசியாவ அடையனும். ரெண்டு பக்கமுமே ரொம்ப தூரம்.அதனால முன்னேற்றம் கொஞ்சம் கம்மிதான் அங்கெல்லாம்.
இப்ப இந்த கண்டத்துல கிழக்கு கடலோரம் இருக்கற தான்சானியாங்கற நாட்டுலதான் நான் இருக்கேன். இந்த நாட்ட பத்திதான் நான் எழுத போறேன்.
அடுத்த பதிவுல சந்திக்கறேனுங்க நன்றி வணக்கம் இப்போதைக்கு :)

11 comments:

G3 said...

Aarambicha vegathulayae thodaruma?? konjam perusa padhivu podunga :D

Pandian said...

வரும்போது ஒரு குரங்குப் பல் பார்சல்

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஆரம்பிக்க போறேன்னு சொல்லிட்டு தொடரும்ன்னு போட்டுட்டீங்க..

அவங்களா நீங்க???? அதான் மெகா சீரியல் டைரக்டர். :-

நல்ல ஒரு தொடராக அமைய வாழ்த்துக்கள். :-)

மனசு... said...

adada...appirikkava...anga edukkunga poninga... zoo pakkam pona appirikka yanai eppadi irukkunu photo eduthuttu vanga...

Anonymous said...

தங்கச்சி.. கலக்குற போ! இந்த தொடரை ஆவலுடன் படிக்க நான் தயாராகிவிட்டேன்!

அன்புடன்...
ஓசை செல்லா

thevanmayam said...

என்னங்க இது வித்தியாசமான தொடரா இருக்கு!!!
தொடருங்க!!!
தேவா...

வண்ணத்துபூச்சியார் said...

அனு தங்கச்சி.. தொடர் எப்போ ஆரம்பம்..??

இல்லைன்னா.. வரும்... ஆனா வராது அந்த டைப்பா.. ??

Anonymous said...

நல்ல முயற்சிங்க. கலக்குங்க

சுரேஷ் குமார் said...

//
ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம்
//
ரெண்டா பிரிச்சா தனித்தனியா தானே இருக்கும்.. அதெப்புடி மொத்தமா பிரிக்கிரிங்க..?

Aravind ST said...

நல்லா இருக்குங்க உங்க பதிவு ... ஓர் சின்ன பிழை இருக்குங்க ....
வளம் என்பதை வழம் என்று எழுதி இருகீங்க....

Aravind ST said...

நல்லா இருக்குங்க உங்க பதிவு ... ஓர் சின்ன பிழை இருக்குங்க ....
வளம் என்பதை வழம் என்று எழுதி இருகீங்க....