Friday, April 03, 2009

குங்குமப்பூ


வணக்கம் மக்களே பதிவுனு ஒன்னு எழுதி பல மாதங்கள் ஆச்சு. இப்ப வந்ததுக்கு காரணம் பழையபடி பூ பத்தி எழுததான். நானும் பல விதமான பூக்கள பத்தி எழுதிட்டேன். ஆனா இப்ப ஒரு குறிப்பிட்ட பூவ பத்தி எழுதற நேரம் வந்தாச்சு. ஆமாங்க நாம இப்ப பார்க்க போறது குங்குமப்பூ.
குங்குமப்பூ அப்படினா நமக்கு உடனே ஞாபகம் வரது தமிழ் படத்தில வர்ர சீன்தான் குழந்தை கலரா பிறக்கனும்னா குங்குமப்பூவ பால்ல கலந்து குடிக்க சொல்லுவாங்க. அது தவிர இந்த பூவ பத்தி வேற ஒன்னும் தெரியாது. அது மட்டும் இல்ல நான் இது வரைக்கும் குங்குமப்பூனா குங்குமக் கலர்ல சிவப்பா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது குங்குமப்பூ பிங்க் கலர்ல சூப்பரா கீழ படத்துல இருக்கற மாதிரி இருக்கும்னு.






அப்புறம் நாம பயன் படுத்தறது குங்குமப்பூக்களின் இதழ்களை இல்ல. அதுக்கு உள்ள இருக்கற மகரந்த இதழ்கள் மட்டும்தான். மேல படத்தில இருக்கற பூவுக்கு உள்ள இருந்து வர சிவப்பு மகரந்தம்தான் நாம பயன்படுத்தற குங்குமப்பூ. 1500 மலர்களில் இருந்து எடுத்தா அதிக பட்சம் 50 மிகி அளவுதான் குங்குமப்பூ கிடைக்கும். அதனாலதான் அது விலை மிக அதிகமா இருக்கு.


குங்குமப்பூ பல வகைகளிலும் பயன்படுது மருத்துவம், சாயம், உணவு வகை தயாரித்தல், வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன் படுத்தறாங்க.
குங்குமப்பூவினால நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு எல்லாத்துக்கும் மருத்தா பயன்படுது. ஆனா அளவுக்கு அதிகமாவோ அல்லது மருத்துவர் ஆலோசனை இல்லாமயோ பயன்படுத்துனா இது மிகக் கடுமையான உடல்நல பாதிப்புகளை உண்டாக்குமாம். அதனால அதிகமா உபயோகப்படுத்த கூடாது.

அது மட்டும் இல்லீங்க குங்குமப்பூ குழந்தைக்கு நிறத்தை குடுக்கும்னு எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனா பெரியவங்களுக்கு அழகு சாதனப் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தறாங்க.
எது எப்படியோ இந்த குங்குமப்பூ வழக்கம் போல எல்லா மலர்களையும் போலவே அழகா இருக்கு. பார்க்கவே ஆசையா இருக்கு.



12 comments:

G3 said...

வணக்கம்.. நல்லா இருக்கீங்களா??

பதிவை படிக்கறதுக்கு முன்னாடி விசாரிக்கலாம்னு வந்தேன் :)

G3 said...

:))) படிச்சிட்டேன் :)) பூ சூப்பரா தான் இருக்கு :D தகவல்களும் தான் :)

சிவகுமார் said...

சகோதரி எப்படியோ சொல்ல வந்ததை மறைமுகமா சொல்லி விட்டீர்கள். வாழ்த்துகள்...!!!
இனி உங்கள் பதிவை அடிக்கடி பார்க்கலாம் என்றே நினைக்கிறேன்.

சிவகுமார் said...

சகோதரி எப்படியோ சொல்ல வந்ததை மறைமுகமா சொல்லி விட்டீர்கள். வாழ்த்துகள்...!!!
இனி உங்கள் பதிவை அடிக்கடி பார்க்கலாம் என்றே நினைக்கிறேன்.

KABEER ANBAN said...

தாயகம் திரும்பியாச்சா ! வாழ்த்துகள்.
இந்தியாவில காஷ்மீர்ல மட்டும் தான் குங்குமப்பூ வளர்வதற்கான தட்பவெட்பம் இருக்குதாம்.

ஆறுமாசம் கழிச்சு இடுகை வந்திருக்கு. இனிமே இடுகைகள் எண்ணிக்கை கூடுமா? :)

அனுசுயா said...

G3: வணக்கம். அதெப்படி எவ்வளவு நாள் கழிச்சு போஸ்ட் போட்டாலும் முதல் கமெண்ட் வருது. ம்ம் நான் நலம். நீங்க நலமா?:)
இந்தியா நல்லா இருக்கா. சிக்கன் எல்லாம் செளக்கியமா?

அனுசுயா said...

siva kumar : சகோதரருக்கு மிக்க நன்றி :)

கபீரன்பன் : இனமும் தாயகம் திரும்பவில்லை. கூடிய விரைவில் திரும்ப வருவேன். நன்றி

Sanjai Gandhi said...

நலமா அனு? வாழ்த்துகள்.. :)

Several tips said...

மிகவும் அருமை

JACK and JILLU said...

மேடம் அனிச்ச மலர் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்!

Anonymous said...

Thank you anu....it's very important news to me Thanks a lot

Anonymous said...

Really nice information anu thank you