Friday, March 24, 2006

வரமா ? சாபமா?


பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை,பருக புத்துணர்வூட்டும் பானம்,பிறப்பது எங்கோ ஆனால் வாழ்வது வெளிநாடுகளில்,சீனர்களின் பாரம்பரிய விருந்தோம்பல்,நம் முதல்குடிமகன் கொடுக்கும் விருந்து,ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை பருகுவது இப்படி எத்தனையோ புகழ் பெற்றது இந்த தேயிலை. இது வாங்கிவந்த வரம் அப்படி ஆனால், எந்த தாவரமாக இருந்தாலும் வளர்ந்து பூத்து காயாகி கனியாகி பின்புதான் பறிப்பார்கள். இதை மட்டும் முளையி‍லேயே கிள்ளுகிறார்கள் பாவம் இது வாங்கி வந்தது வரமா? சாபமா?.

13 comments:

Pavals said...

அந்த வானம் அழுதாத்தான் இந்த பூமியே சிரிக்கும்.. - அந்த மாதிரி..

பொன்ஸ்~~Poorna said...

"இளம் வயதில் இறப்பவர்கள்
கடவுளுக்குப் பிடித்தமானவர்கள்"
என்று சொல்லுவார்கள். அந்த விதத்தில் இது வரம் தான் என்று கொள்ளலாம். ஒரு வகையில் இது மனிதனின் சுயநலம் என்றாலும், கிள்ளாமல் விட்ட இலைகளை விட கிள்ளிய இலைகள் அதிகம் பயன்படுகின்றனவே..

சிங். செயகுமார். said...

உலகுக்கு வெளிச்சம் காட்ட தன்னையே உருக்கும் மெழுகுவர்த்தி.
இது வாங்கி வந்த வரம் என்னவோ!

வெளிகண்ட நாதர் said...

பூமிக் கொண்டை போல பச்சையான தளிர், விட்டு விலகி காய்ந்து சருகாகி, சாரல் பருகிய பின் வெந்த்து மடிவது சாபமே! அதனை பொறுத்தவரை, மற்றபடி அது வரம்!

அனுசுயா said...

வெளிகண்ட நாதர் - நன்றி தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

அனுசுயா said...

பாரதி - நல்ல ஐகூ எழுதிட்டு எதுக்கு நன்றி சொல்லறீங்க., :)

ராசா - "வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்" இது. எப்படியோ பாட்டுக்கு பாட்டு போட்டாச்சு

பொன்ஸ் - வாங்க பொன்ஸ் வருகைக்கு நன்றி.
//கிள்ளாமல் விட்ட இலைகளை விட கிள்ளிய இலைகள் அதிகம் பயன்படுகின்றனவே// உழி தாங்கும் கற்கள்தானே சிலையாகின்றன.

சிங்.செயகுமார் - இப்படி யாரவது ஒருத்தரோட தியாகத்தில்தான் மற்றவங்களோட சந்தோஷம் இருக்குது

தி. ரா. ச.(T.R.C.) said...

ஒரு மலரை தளிரை பறித்து அதன் மரணத்தை கொண்டாடுகிறோம். தி.ரா.ச

சிவமுருகன் said...

திருமலையில் மலர்ந்த மலர்கள், மலையப்பன் திருப்பதிக்கு,
தேனீர் மலையில் மலர்ந்த மொட்டுக்கள் மனிதனின் திருப்திக்கு.

அனுசுயா said...

trc - ஒரு மரணத்தில் இந்த அளவு பயன் படுவது வரம்தான்.
சிவ முருகன் - மனிதனின் திருப்திக்காக எத்தனை இயற்கையை அழிகிறான் அதில் இதுவும் ஒன்று.

ILA (a) இளா said...

சிலது பிஞ்சிலே பழுக்கும், இது..

அனுசுயா said...

//சிலது பிஞ்சிலே பழுக்கும், இது.. //
நீங்கள்தான் சொல்லவேண்டும் இது????

Radha N said...

இதையே நீங்கள் கவலையோடு நோக்கினால், போன்சாய்களை என்னவென்று சொல்வீர்கள்?

அனுசுயா said...

நன்றி திரு நாகு அவர்களே தஙகளின் கருத்து மிக சரி போன்சாய் மட்டும் இல்லை நம் நகர வீடுகளில் சிறு சிறு தொட்டிகளில் வளர்க்கப்படும் அனைத்துமே பாவப்பட்டவைதான்.
தற்போதைய நிலையில் அபார்ட்மெண்ட்களில் வாழும் மனிதனின் நிலையேகூட பாவம்தான்.