1. சியன்னா - பிரான்ஸ்

இந்த ஆறு பிரான்ஸ்ல ஓடுது. ஈபிள் டவர் மேல இருந்து பாக்கும்போது ரொம்ப அழகா இருக்குது. அதவிட ஆத்துமேல அவங்க கட்டியிருக்கற பாலங்கள் தான் சூப்பர். எவ்வளவு அழகழகா கட்டியிருக்காங்க. பார்க்க பார்க்க அழகா இருக்குது. பல முக்கியமான இடங்கள் எல்லாமே இந்த ஆத்தங்கரையோரத்துலயேதான் இருக்குது. இரவு நேரத்துல படகுல போய் ஊர் சுத்தி பாக்கலாம் ரொம்ப நல்லாயிருக்கும்.
2. போ - இத்தாலி

இந்த ஆறு இத்தாலில ஓடுது. நம்ம ஊர் காவிரி மாதிரி அந்த ஊருக்கு. நான் தங்கியிருந்த பெராரா நகர்ல இந்த ஆறு ஓடுது. தினமும் என் டைம் பாஸ் இந்த ஆத்த வேடிக்கை பாக்கறதுதான். ஊர் பெரிசாயிருச்சுங்கறதுக்காக ஆத்தையே கொஞ்சம் தள்ளி வெச்சிருக்காங்க.
3. கங்கை - இந்தியா
இது வரைக்கும் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா கதைகளிலும் கட்டுரைகளிலும் படிச்சு படிச்சு கங்கை மேல ஒரு பெரிய மரியாதையும் பார்க்கனும்கற ஆவலும் அதிகமா இருக்கு. பார்க்கலாம் எதிர்காலத்தில் பார்க்க முடியுதானு.
4. காவிரி - கர்நாடகம்
முதன் முதலா காவிரிய சின்ன வயசுல கர்நாடகா சுற்றுலா போனப்போ ஸ்ரீரங்க பட்டினம்னு ஒரு இடத்துல பாத்தது. அப்ப எனக்கு ஒரே ஆச்சரியம் இவ்ளோ தண்ணியானு. அது வரைககும் நான் இவ்வளவு பெரிய ஆத்த பாத்ததே இல்லை. இங்க கரை அகலமா இருக்கும் அதுல மீன் துள்ளி விளையாடிட்டு இருக்கும். சின்ன வயசுல பார்த்ததாலே அப்டியே மனசுல பதிஞ்சிடுச்சு.
5. வைகை - மதுரை
"வைகை நதியோரம் பொன்மாலை நேரம்... " அப்படீங்கற பாட்டு ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான் எனக்கும் வைகைக்கும் உள்ள உறவு. எப்டியோ ஆறு ஆறுகளைப்பற்றி எழுதனுமே கணக்குக்காக இத சேர்த்திட்டேன். :)
6. நொய்யல் நதி - கொங்கு நாடு
எங்க ஊர்ல இருக்கற ஒரே ஆறு இதுதான். ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு இருக்கறது. எனக்கு தெரிய இந்த ஆத்துல தண்ணிய பார்த்ததே இல்லை.

நொய்யலை காப்பாத்த இப்ப சிறுதுளினு ஒரு அமைப்பு ஏற்பாடு பண்ணி தூர்வாறி, நீர் பிடிப்பு பகுதிகளை சுத்தம் பண்ணி எப்டியோ ரொம்ப வருசத்துக்கு அப்புறம் தண்ணி வர வழைச்சிட்டாங்க. வாழ்க சிறுதுளி. வெளி நாடுகள்ள ஆறு களை அவங்க மிக மிக சுத்தமா கரை கட்டி பராமரிக்கறாங்க. ஆத்துல ஒருத்தரும் குளிக்கறதோ, துவைக்கறதோ, இறங்கி விளையாடறதோ இல்ல. அனுபவிக்க தெரியாதவங்க. நம்ம ஊருல அப்டியா? பண்ணாத வேலையெல்லாம் பண்றோம். அப்படிபட்ட ஆறுகளை முடிஞ்சவரைக்கும் குப்பைகளை போட்டு நிறைக்காம இருந்தாலே போதும்.
நான் அழைக்கும் ஆறு பேர்,
1. மனசு
2. பரத்
3. தியாகு
4. கோபாலன்
5. நெல்லை கிறுக்கன்
6. காயத்ரி