Monday, October 15, 2007

முத்தே முத்தம்மா!!!

முத்து மணி மாலை பாட்டு கேட்டு நல்லா அனுபவிப்போம் அந்த முத்துக்களை பற்றி இன்னிக்கு வந்த மெயில் பார்த்து அசந்துட்டேன். பொதுவாவே முத்துக்கள்னா எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். அதுலயும் வெண் முத்து பாக்க ரொம்ப அழகாதான் இருக்கும். ஆனா இந்த படங்களை பார்த்த பிறகு கொஞ்சம் வருத்தமா போயிடுச்சு எனக்கு. இவ்வளவு பாடு படுத்திதான் முத்து எடுக்கறாங்களா? பாவம் இந்த முத்து சிப்பி உயிரினம். :(



முத்துங்கிறது எப்டி உருவாகுதுனா சிப்பியோட உடலுக்கு உறுத்தலா போற சில குப்பைகள்கிட்ட இருந்து பாதுகாக்க அது ஒரு திரவத்தை பூசி தன் உடம்ப பாதுகாத்துக்கும். அந்த திரவம்தான் பிற்காலத்தில முத்தா ஒரு திட பொருளா உருவாகும். இதையதான் நாம எடுத்து நகை பண்ணி போட்டு ரசிக்கறோம்.

இதுல செயற்கை முத்து இயற்கை முத்துனு ரெண்டு வகை உண்டு, எப்டினா இயற்கையா சிப்பிக்குள்ள அழுக்கு போய் அதை தடுக்க சிப்பி உண்டாக்கற முத்து இயற்கை முத்து. ஆனா அப்டி உருவாகறது ரொம் கம்மிதான். அதனால மனுசனே சிப்பிய வளர்த்தி அதுக்குள்ள சில நெருடல உண்டு பண்ணி செய்யறது செயற்கை முத்து.

கிட்டதட்ட எல்லா சிப்பிகளும் இந்த மாதிரி ஒரு திட பொருள உருவாக்கும். ஆனா எல்லாமே நல்ல முத்து கிடையாது. நிறைய சிப்பிகள்ள கிடைக்கறது வெறும் திடமற்ற அல்லது மட்டமான முத்துக்கள்தான்.

பொதுவா முத்துங்கறது வெறும் கால்சியம் (CaCo3)அதாவது சுண்ணாம்பு சத்துல இருந்து உருகாறதுதான்.





இந்த முத்து நல்ல தண்ணியில இருந்து கிடைக்கறது, அதாவது ஏரி,குளம்,ஆறுல வளர்ந்து வர சிப்பி முத்து முக்கியமா சீனாவுலதான் கிடைக்கும். அது போக கடல் அதாவது உப்பு தண்ணியில வளர்ந்து வர்ரதும் உண்டு.

ஆனா முத்தகள்ள பால் வெள்ளை, மஞ்சம், ரோஸ் மற்றும் கருப்பு கலர் இப்படி பல வகை உண்டு. ரொம்ப காஸ்ட்லி கருப்புதானுங்க.



11 comments:

Unknown said...

நல்ல தகவல்...அதிலும் கடைசி உள்ள மூன்று முத்துக்களின்(!!) புகைப்படம் அருமையாக இருக்கிறது..!!
:)

வித்யா கலைவாணி said...

நல்ல அருமையான தகவல்.நன்றி. உலகில் பெரிய முத்து பிலிப்பைனில் கிடைத்த 6.4 கிலோ எடை உள்ளது.
Caco3 = கால்சியம் கார்பனைட்

MyFriend said...

ஐ.. நான் இந்த forward mail-ஐ ஏற்கனவே பார்த்திருக்கிறேனே>. ஆனல், அதுக்கு தமிழில் விளக்கம் எழுதி அசத்திட்டீங்க. :-)

Anonymous said...

தகவலுக்கு நன்றி.
முத்துச்சிப்பியும், பட்டுப்பூச்சியும் உயிரிழப்பதற்காகவே உயிர் வாழ்கின்றன. பாவம்.

Sumathi. said...

ஹாய் அனு,

முத்து பற்றிய அருமையான தகவல் படங்களுடன். அது சரி அது ஏன் கருப்பு முத்து மட்டும் விலை ஜாஸ்தி?
அது எப்படி கருப்பு கலர் வருது?

அனுசுயா said...

Devarpiran : ஏனுங்க முத்த பாக்க சொன்னா பொண்ணுங்கள பாக்கறீங்களே நியாயமா?
:)

வித்யா கலைவாணி : பரவாயில்லயே நிறைய தகவல் சொல்லியிருக்கீங்க. அதுபோக வேதியல் பேர் வேற சொல்லியிருக்கீங்க நன்றி :)

மை ப்ரெண்ட் : அந்த மெயில அனுப்புனதே நான்தான. :)

அனுசுயா said...

பாண்டியன் : நன்றி

சுமதி : வாங்க சுமதி கருப்பு முத்து அதிக அளவுல உற்பத்தி ஆகிறது இல்லீங்க அதனாலதான் அதுக்கு விலை அதிகம். ஆனா அது எதுனால அப்டி ஆகுதுனு தெரியல.

தெரிஞ்சவங்க ‍சொல்லுங்க :)

ரசிகன் said...

இத போயா, பொண்ணுங்க ஆசையா மாட்டிக்கிறாய்ங்க?..விபரம் ஏற்கனவே தெரிஞ்சாலும் படங்கள் புதியவை..சூப்பர்.
ஆனாலும் அந்த கடைசி பட முத்துக்கிரிடம் ரொம்ப சூப்பரில்ல..மனச இழுக்குதுல்ல..[பின் குறிப்பு : அருகிலிருக்கும் பெண்ணை பற்றி சொல்லவில்லை.நம்புங்க..]

Divya said...

ஹாய் அனு,

அழகான படங்கள், அருமையான தகவல்.....பாராட்டுக்கள்!

காரூரன் said...

நல்ல தகவல் அனு. யாரோ இதை முதலில் உபயோக்கிக்கலாம் என்று எண்ணினார்கள் பாருங்கள், அது தான் இன்று ஆபரணம்!

Several tips said...

பிரமாதம்