Wednesday, July 18, 2007

செவ்வந்தி







ஆயுத பூ‍ஜை சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லா பக்கமும் சும்மா பளிச்னு இந்த செவ்வந்தி பூ கடை போட்டிருப்பாங்க. யார் யாரோ திடீர் திடீர்னு கடை போட்டு வியாபாரம் ரெண்டு நாள் செய்வாங்க. மழைக்கு வரும் காளான் போல இந்த கடை தோன்றி மறையும். நாமும் அந்த பூவ வாங்கி சாமிக்கு போட்டு பூஜை பண்ணுவோம் ஆனா ஒரு நாள் கூட அதோட பூர்வீகம் என்ன அதனோட குணங்கள் என்னனு யோசிச்சது இல்ல.
செவ்வந்தி பூ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கூகுளாண்டவரையும் விக்கி அண்ணனையும் போய் கேட்டா அப்டி ஒரு பேரே இல்லைனு சொல்லிபுட்டாங்க. அட கொடுமையே இது என்ன நம்ம பூவூக்கு வந்த சோதனையின்னு தேடுனப்ப இந்த வலைப்பூ கிடைச்சது. யாரோ ஒரு நல்லவங்க என்ன மாதிரியே பூக்கள பத்தி பதிவுகளா போட்டு தள்ளியிருக்காங்க. அவங்க யாரு எவருனு தெரியல ஆனா அவங்க புண்ணியத்துலதான் தெரிஞ்சுது செவ்வந்திப்பூ பேரு க்ருசாந்தேமம் (Chrysanthemum). இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையில இருந்து வந்ததா சொல்றாங்க.









இந்த பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன. மஞ்சள் நமக்கு தெரியும் அதுபோக சிவப்பு, ஆரஞ்சு இப்டி நிறைய கலர்ல இருக்குதுங்க. ஆனா நாம சாமிக்கு வெக்கறது மஞ்சள்தானுங்களே. அது போக வெள்ளை கலரும் வெப்போம்.

அப்புறம் இத முக்கியமா ஜப்பான் சீனாவுல தானுங்க வளர்த்து பயன்படுத்தறாங்க. ஆனா அவங்க இத மன்னரோட சின்னமாவும் துக்கத்தோட வெளிப்பாடாவும் நினைக்கிறாங்க. ஜப்பானுல இத மகிழ்ச்சியான புனித சின்னமா பாக்கறாங்க. ஊருக்கு ஊரு ஒரே பொருள் வெவ்வேறு விதமா பார்க்கபடுது.





இந்த பூக்களுக்குனு பல மருத்துவ குணம் சொல்லறாங்க முக்கியமா இதிலிருந்து தயாரிக்கபடும் ஒரு ரசாயனம் சிறந்த கொசு மற்றும் பூச்சி கொல்லியா பயன்படுது. ஆனா இதுல இருக்கற ரசாயனம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறதில்ல அது மட்டும் இல்ல இது பயோ டீ கிரேடபுல் (அதாங்க இயற்கையா மட்கும் பொருள்) அதனால சுற்றுசூழல் பாதிப்பு சுத்தமா கிடையாது. கொஞ்சம் பேரு இதனோட இதழ்கள காய வெச்சு டீ தயாரிச்சு சாப்பிடறாங்களாம் நல்லா இருக்குனு போட்டு இருக்குது குடிச்சு பார்த்தாதான் தெரியும்.

4 comments:

Unknown said...

மத்தக் கலர் செவந்திப் பூவையும் போட்டோ புடிச்சுப் போட்டுருக்கலாம்ல்ல... கிடைச்சாப் போட்டாவைக் காட்டுங்க...

அப்புறம் சிறந்தப் பூச்சிக் கொல்லின்னு சொல்லுரீங்க... டீ யிலே போட்டு குடிச்சா வயித்துல்ல இருக்க பூச்சி எல்லாம் செத்துப் போயிருமா?

Prabhu said...

திடீர்னு இந்த பூ பத்தி சொல்ல காரணம் எதாவது உண்டா...???

Pandian R said...

ஆகா, இதே பூவுக்காக இணையத்தைத் தேடி வெறும் கையோடு திரும்பியவர்களில் நானும் ஒருவன். பதிவிற்கு மிக்க நன்றி.

நம்ம ஊரு மாரியம்மன், கருப்பு சாமி, மதுரை வீரன் கோயில்களில் இந்தப் பூதானே பிரதானம். அதோட வயல்வெளில பார்த்திருக்கிங்களா. பச்சை பயிர்களுக்குப் போட்டியாய் கலர் கலராய் பூப்பூதூது அந்த அந்த இடத்தையே அழகாய் ஆக்கிவிடும் செவ்வந்தி. சமீபகாலமாய் கோயில்களில இந்தப் பூக்களைச் சேர்ப்பதிலலை என்று சிலர் சொன்னாரக்ள்

தமிழ் said...

படமும் கருத்தும் அருமை