நம்ம கச்சேரி தேவ் என்னைய எட்டு போட்டு காட்டியே ஆகனும்னு சொல்லிபுட்டாக அவரு கூப்புட்ட எல்லாரும் போட்டுட்டாங்க நான்தேன் கடைசி. ம் என் எட்டு சாதனைகள் கீழே போடறேன் யாரும் பயந்து அல்லது வெறுத்து போயி திட்டாதீங்க.
என் வலையுலக சாதனை
1. முதன் முதல்ல பதிவு எழுதுனப்ப நமக்கு (இந்தியாவும் உலக அதிசயமும்) என்ன எழுத தெறியும் சும்மா வெட்டி வேலைனு நினைச்சுதான் ஆரம்பிச்சு கிறுக்கினேன். அதையும் படிச்சுட்டு நல்லா இருக்குனு தமிழ் நாளிதழ் ஒன்னு (தினமலர்) பிரசுரிச்சு இருந்தாங்க. இது ஒரு சாதனைதான் என்ன பொறுத்தவரைக்கும்.
2. அடுத்து நம்ம ஜி கெளதம் அவங்க ஒரு தடாலடி போட்டி வெச்சிருந்தாங்க. படம் போட்டு அதுக்கு கவிஜ எழுதனும். அதுதான எனக்கு ஈசியான வேலையாச்சே. எழுதியிருந்தேனுங்க அதைய குங்குமத்துல கூட போட்டிருந்தாங்க. அதை படிச்சிட்டு என் நட்பு வட்டம் அடிச்ச நக்கலுக்கு அளவே இல்ல அது வேற விசயம்.
3. சுடர் ஏத்த சொன்னாங்கனு ஏத்துனேன் நானும் அது கொஞ்சம் உறுப்படியாதான் இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. அதனால அதையும் சேர்த்துட்டேன்.
4. காந்தார கலை பத்தி ஒரு பதிவு எழுதினேன் அது பூங்கா இதழில் வந்தது. பாவம் புத்தருக்கு கொஞ்சம் மரியாதை கிடைச்சது. :)
இன்னும் நிறைய சாதனைகள் பண்ணனும்னு ஆசைதான் ஆனா பாருங்க நமக்கு எழுதறது வரவே வராது. மத்தவங்கள நக்கல் பண்றது மட்டும் கொஞ்சம் நல்லா வரும் அதனால அதை மட்டுமே பண்ணிட்டு இருக்கேன். இப்டியே சொல்லிகிட்டே போன இதுக்கு பேரு விளம்பரம்னு சொல்லு வாங்க. அதனால (அதனால மட்டும்தான்) கொஞ்சம் என் பெருமைகளை அடக்கி வாசிக்கிறேனுங்க.
ஒன்னா ரெண்டா சொக்கா எட்டு சாதனைய போடனுமாமே என்ன போடுவேன் எப்படி போடுவேன். எதை போடுவேன். அதனால போதும் நிறுத்திக்கிறேன். இத்தோட நிறுத்திக்கிறேன். கிட்ட தட்ட எல்லாரும் எட்டு போட்டுட்டாங்க. இருந்தாலும் வடுவேனா எனக்கு கிடைச்சத அவங்களும் அனுபவிக்கனும்ல
நான் கூப்பிடற எட்டுபேரு
1. எப்பபாரு சீரியசா மட்டுமே பதிவு போடற கோபாலன்
2. சவுண்ட் பார்ட்டினு பேர் வெச்சிட்டு அமைதியா இருக்கற உதயகுமார்.
3. கபீர் பத்தி எழுதற திரு உமேஷ் அய்யா
4. கவுஜனு என்னமோ எழுதற கமல்ராஜா
5. எப்பவாது பதிவு போடும் மனசு
6. டெக்னிகலா எழுதற அருண்குமார்
7. மதுரைய சேர்ந்த (மீட்ட) பாண்டியன்
8. புதுகை பாண்டியன் அண்ணாச்சி (ஆங்கிலத்தில எட்டு போட்டாலும் பரவாயில்லை)
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
3 comments:
அடடா, இவ்ளோ சாதனைகளை பண்ணி இருக்கீங்களாக்கா? தெரியாம போச்சே.
LICENSE kku 4 kuraiyuthu...
seri, appreciating your 4 u are granted license to drive winner kaipullai tri cycle from today
:))))
இளா : // தெரியாம போச்சே// இப்ப தெரிஞ்சிருச்சுல என்ன பண்ண போறீங்க
தேவ் : நன்றி ஆபீசர் சார் லைசென்ஸ் குடுத்ததுக்கு :)
Post a Comment